Wednesday, December 15, 2021

ஒரு காதல் கதை



கடுங்குளிரில்

பெருங்கதவு

இடுக்குகளில்

அவளை

தேடுகிறேன்



சித்திரை

முழு நிலவில்

பார்த்தது



அவளின்

ஒற்றை பார்வைக்கு

நா சுரந்த

வியர்வையை - என்

நாடி நரம்பும்

சுரக்கிறது



பிரம்மன்

தொலைத்த

பேரழகி



அரேபியத்து

பைங்கிளி …



ஆம்

நான் காமன்

அவள் சோமன்



என்னைவிட

இரண்டங்குலம்

உயரமவள்



முத்தமிட்டு

முத்தமிட்டு

நாவாடியதற்கு



நட்ச்சத்திரங்கள் சாட்சி



பெருக்கெடுத்த

காமத்திற்கு

அம்புலி சாட்சி



அவள் சாதியை

நானும்

என் மதத்தை

அவளும்

கேட்டதே இல்லை



காதலும் காமமும்

வெண்ணிற அருவியாய்

புல் நனைத்த

அந்த இரவில்

அறிவித்தார்கள்

திங்களன்று

போட்டியென்று



போட்டிகளத்தில்

அவளும் நானும்

எதிரணியில்



இப்போது

ஒரே இலக்கு - அது

வெற்றி!



தோட்டா சத்தத்திற்காக

காத்திருந்த காதில்

மௌனமாய் சொன்னாள்

மௌனமாய் சொன்னாள்

மௌனமாய் சொன்னாள்

உன் வெற்றி

நம் வெற்றியென்று



காதலை சுமந்த

இதயத்திற்கு

கால்களுக்கு

கட்டளையிட

மனம்மில்லை



முன்னும் பின்னுமாய்

ஓடிக்கொண்டிருந்தோம்

முந்தட்டும்.

நின்று விட்டேன்



வெற்றிவிழா!

அவளை கொண்டாடி

மகிழ்தார்கள்

எனக்கு அழைப்பில்லை



அந்த பெருங்கூட்டத்தில்

அவள் கண்கள்

தேடியது என்னைத்தான்.



பெருங்கதவுகளின்

இடுக்குகளில்

அவளின் வெற்றியை

ரசித்து கொண்டே

நகர்ந்தேன்

அவளும் நகர்ந்தாள்



ஊட்டிக்கு வந்துபோன

நீங்கள் என்னை

கண்டிப்பாய்

பார்த்திருப்பீர்கள்



உற்றுப்பாருங்கள்

உங்கள் செல்ஃபீயில்

ஓரமாய் நான்

நிற்கக்கூடும்



இப்போது மீண்டும்

போட்டிக்கான

அறிவிப்பு



அவள்

கண்டிப்பாக

வருவாள்



என்னை

அலங்கரித்து

அவளுக்காய்



அந்த பெரும்

மைதனத்தின்

வாசலருகே

காத்திருக்கிறேன்...



இப்போது

என் பிராத்தனை

ஒன்றே ஒன்றுதான்

கண்டிப்பாய் அவள்

வெற்றிப்பெற வேண்டும்



என்னைப்போல

ஊட்டி வீதிகளில்

அனாதையாய்

சுற்றித்தெரியும்

குதிரைகளின்



பெயரில் அவள்

பெயர்யில்லாமலிருக்க

அவள் கண்டிப்பாய்

வெற்றிபெற வேண்டும்



(இது பந்தயத்தில் தோல்வியடைந்து ஊட்டி தெருக்களில் சுற்றித்திரியும் ஒரு குதிரையின் காதல் கதை)

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!