Tuesday, December 7, 2021

அப்பா

 என்

அப்பாவின்

உலகம் 

மிக சிறியது 


அம்மா

தம்பி

தங்கை பின்னே

நானும்...


வறுமையிலேயே

பிறந்து 

வறுமையிலேயே

வாழ்ந்து 

இளமையியேலே

இறந்து போன 

பாக்கியவான் 


ஒப்பந்தம் என்னவோ

பாதிரியாரோடுதான்

அப்பாவோ

இறைவனோடு

என்றெண்ணி

இறக்கும்வரை

மது அருந்தாதவர்


ஆமையடியில்

முதன் முதலில்

முழு கால்சட்டை 

அணிந்தவரும்

புல்லட் ஒட்டியவரும் அவரே.


பனைமரம்

அப்பாவை

பார்க்கும் போதெல்லாம்

கர்வப்பட்டு கொள்ளும் 


ஆம்!

அப்பா

பனை மரத்தைவிட

கருப்பு...


வறுமை

துரத்திய 

இளமை காலத்தை 

திருடியே குடும்பம் காத்தவர் 


 ஆம்!

அப்பா

ஒரு திருடர்


சாராயம் குடிக்காத 

சாராய வியாபாரி...


பத்து பேர் 

வந்தாலும் 

தனியாக நின்று 

எதிர் கொள்ளும் 

சிறுத்தை 


 கராத்தே கற்றுக்கொள்ளத

கருப்பு பெல்ட்காரன்...


இவர்

சிலம்பம் சுற்றி

உருவான

சுருளி காற்று

கதை இன்னும்

ஊருக்குள் காத்தாடுகிது


பெரிய மீசை

கருத்த உருவம்

கட்டுக்கடங்கா பாசம்

பெருங்கோபம்

ஆளுமை

அப்பாவின்

தனி அடையாளம்.


அண்ணாவின் தம்பி 

எம்ஜிஆரின் வெறிபிடித்த ரசிகன்

ஜெயலலிதாவின் விசுவாசி...


“திருமணம்” 


திருட்டை விட்டார் 

சாராயம்

காச்சுவதை விட்டார் 


ஆம்

அப்பாவின் உலகம்

சுருங்கிபோனது


 எங்களுக்காக 

மாடு போல

உழைத்தார்


அவர் அகராதியில் 

இரவும் இல்லை 

பகலும் இல்லை 


உழைப்பு 

உழைப்பு 

உழைப்பு...


தனக்கென 

எந்த ஆசையும் 

வைத்து கொள்ளாத 

புத்தன்...


இரவு சாப்பாடு 

எப்பொழுதும் 

அப்பாவின்

கையால்தான் 

உருண்டைச்சோறு...

அதன் உலகமமே வேறு!


எதிரிக்கு

உன் பாசை

புரியவில்லையென்றால்

அவனுக்கு புரியும்

மொழியில் பேசு

 

"திருப்பி அடி என்பார்"


திருடுவது 

பொய் சொல்லுவது 

ஏமாற்றுவது

நம்பிக்கை

துரோகம் செய்வது

பாவம் என்பார்


ஆம்

அப்பா

திருமனத்தால் 

பாவ மன்னிப்பு

பெற்றவர்...


வறுமையில் 

வாழ்ந்தாலும்

எங்கள் மேல்

வறுமையின் 

நிழல்கூட நெருங்காமல்

பார்த்துக்கொண்டவர்...


ஒருநாள் 

இரவு வேட்டைக்கு போனவர் 

திரும்பி வரவே இல்லை...


தோள்மேல் எற்றி

உலகம் காட்டியவர் 

அவர் தோளுக்கு 

நான் உயர்ந்தபோது 

அருகில் அவர்

இல்லவே இல்லை...


18 Jun 2018 fathers day


 


 


No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!