Tuesday, November 30, 2021

உறங்கிவிடு என் மகளே

 

தினம் தினம் புது கீறல்

தினம் தினம் புது வாசனை

ஓமட்டிக்கொண்டே

பால்குடிக்க - மறுக்கும் 

பிள்ளைய

எந்த கதைய சொல்லி

தூங்கவைக்க.

 

பட்டு.

செல்லம்.

ராசாத்தி

போட்டும் பூவும் வைத்து

பத்து வட்டிக்காரனோடு

பாக்கி’ க்கு அனுப்பிய 

கதைய பாட்டிகிட்ட கேளு !

 

உதிரம் வெடித்து

சிதறிய நாளிலும்…

அறைக்குள் தள்ளி

வெளிதாப்பாள் போட்ட

கதைய உங்கப்பங்கிட்ட கேளு !!

 

போலீஸுதானே

போயிட்டுவான்னு

வேணுக்குள்ள தள்ளிய

கதைய உங்அத்தைகிட்ட கேளு !!!


வேசக்கி என்னடி

ஊருக்குள்ள வேல.

உன்னையும் என்னையும்

ஊர் தூக்கியெறிஞ்ச கதைய

ஆலமரத்து பிள்ளையார்கிட்ட கேளு

 

வலி !

வலி !!

வலி !!!

மலடாய்  இருந்துவிடு

என் மகளே

உதிரப்போக்கின்

வலியாவது மிச்சமாகும்

 

உறங்கிவிடு என் மகளே  

அம்புலிமா(ம)ன் வருவதற்குள்

உறங்கிவிடு மகளே…

 

நாளை

ஒரு கதையோடு

வருகிறேன்

நான்

பெற்ற மகளே

உறங்கி விடு.   


மலடாய்  இருந்துவிடு

என் மகளே

உதிரப்போக்கின்

வலியாவது மிச்சமாகும்

 

ABD'ulla

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

 

Saturday, November 27, 2021


 மாவீரர் நாள்

இப்போதெல்லாம்

மாவீரர்களுக்கு

மெழுகுவர்த்தி

 ஏற்றும்போது கைகள்

நடுங்கிறது


என்

உறவுகளை கொன்ற

ஆயுதம்

என் வரிப்பணத்திலிருந்து

வாங்கியது என்றெண்ணும்போது

 

என்

அம்மாவை

அக்காவை

தங்கையை

வன்கொடுமை செய்தது

எண்ணிலொருவன்

என்றெண்ணும்போது

 

முள்வேலி முகாமிற்குள்

முடங்கிப்போன இனத்தை

வேடிக்கை

பார்க்கும்போது

 

தமிழ்தேசியமும் திராவிடமும்

கள்ளத்தொடர்பு வைத்து

மலட்டு பிள்ளைகளை

பிரசவிக்கும்போது

 

நான்!

கூட நின்றவன்

ஆமைக்கறி கதை

சொல்லும்போது

 

இப்படி .

இப்படி ..

இப்படி

கைநிறைய

துரோக குருதியை

வைத்துக்கொண்டு

 

இப்போதெல்லாம்

மாவீரர்களுக்கு

மெழுகுவர்த்தி

 ஏற்றும்போது

என் கைகள்

நடுங்கிறது …

 

ஆமையடி அப்துல்லா

 27

Thursday, November 25, 2021

அலமாரி

 

வாழ்வாதாரத்திற்காக மனைவி குழந்தைகளை விட்டு பிரிந்துவாழும் ஒருவனின் அலமாரி க(வி)தை…


கையேடு கையும்

 மார்போடு மார்பும்

காலோடு காலும்

ஒட்டிக்கிடந்த அலமாரி  

 

கால் மிதித்து  

கம்பிளி  நனைந்து -

விளையாடியதை

 ஓரத்தில் நின்று பார்த்த அலமாரி

 

முத்தத்தின் எண்ணிக்கையை

மொத்தமாக கணக்கெடுத்த

அம்மாஞ்சி அலமாரி

 

மகள்களின் வண்டியை

திருட்டுத்தனமாய்

ஒட்டி ப்பார்த்த

திருட்டு அலமாரி


திறக்கும்போதெல்லாம்

திரவியம் வீசும்

அலமாரியில்

இப்போது அவளும் இல்லை

மகள்களும் இல்லை…

 

கடைகடையாய்

அலைந்து வாங்கிய அலமாரி

நரம்பற்ற வினைபோல

மூலையில் கிடக்கிறது


நானும் தான்…


ABD'ulla

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!