Saturday, November 27, 2021


 மாவீரர் நாள்

இப்போதெல்லாம்

மாவீரர்களுக்கு

மெழுகுவர்த்தி

 ஏற்றும்போது கைகள்

நடுங்கிறது


என்

உறவுகளை கொன்ற

ஆயுதம்

என் வரிப்பணத்திலிருந்து

வாங்கியது என்றெண்ணும்போது

 

என்

அம்மாவை

அக்காவை

தங்கையை

வன்கொடுமை செய்தது

எண்ணிலொருவன்

என்றெண்ணும்போது

 

முள்வேலி முகாமிற்குள்

முடங்கிப்போன இனத்தை

வேடிக்கை

பார்க்கும்போது

 

தமிழ்தேசியமும் திராவிடமும்

கள்ளத்தொடர்பு வைத்து

மலட்டு பிள்ளைகளை

பிரசவிக்கும்போது

 

நான்!

கூட நின்றவன்

ஆமைக்கறி கதை

சொல்லும்போது

 

இப்படி .

இப்படி ..

இப்படி

கைநிறைய

துரோக குருதியை

வைத்துக்கொண்டு

 

இப்போதெல்லாம்

மாவீரர்களுக்கு

மெழுகுவர்த்தி

 ஏற்றும்போது

என் கைகள்

நடுங்கிறது …

 

ஆமையடி அப்துல்லா

 27

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!