Friday, September 23, 2011

விற்பனைக்கிருந்தால்...



உங்கள் கடைகளில்...
அன்பு
பாசம்
விற்பனைக்கிருந்தால்
மறக்காமல் சொல்லியனுப்புங்கள்
அத்தனையும் வாங்கிகொள்கிறேன்

Saturday, September 17, 2011

மரணதண்டனைக்கு விடைகொடுப்போம்...

     


                            உலகில் பல நாடுகளின்      சட்டபுத்தகங்களிலிருந்து  மரணதண்டனைவிடை பெற்று விட்டது, கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 22 நாடுகள் மரண தண்டனைக்கு தங்கள் சட்டப் புத்தகத்திலிருந்து விடைகொடுத்துவிட்டன. இப்போது 95நாடுகளில் மரணதண்டனை சட்டப்படி ஒழிக்கப்பட்டு விட்டது.  40 நாடுகளில் மரணதண்டனை வழங்கபடுவதில்லை, ஐய்ரோப்பிய ஒன்றியம் முழுதும் (பெலாரஸ்என்ற நாட்டைத் தவிர) மரணதண்டனை  ஒழிக்கப்பட்டு விட்டது. மரணதண்டனை நிறைவேற்றும் நாடுகளின் எண்ணிக்கையும் 58ஆக குறைந்துள்ளது.  அமெரிக்காவில் பல மாநிலங்களில் மரணதண்டனை விடைபெற்றுவிட்டது  சில மாநிலங்களில் மட்டுமே மரணதண்டனை அமுலில் உள்ளது. மரணதண்டனை அமுலில் உள்ள சீனாவில் அந்நாட்டின் உச்சநீதி மன்றம் தவிர்க்கவே முடியாத வழக்குகளில் மட்டும் மரணதண்டனைவிதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ரஷ்யா நாட்டில் மரணதண்டனை சட்டத்தில் இருந்தாலும் 2009ஆம் ஆண்டு முதல்  மரணதண்டனை அமுல்படுத்துவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது உலகில் பலநாடுகளும் மரதண்டனைக்கு விடைகொடுத்துவரும் நிலையில் இந்தியாவில் மட்டும் (உலகில் மிக பெரிய ஜனநாயநாடு!!!) மரணதண்டனை இருப்பது நமது துரதிஸ்டமே. மரணதண்டனைக்கு எதிரான குரல் இப்போது இந்தியாவில் பெரியஅளவில் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது இந்தியாவின் தலைமாட்டில்-காஷ்மீரில்(13டிசம்பர்2001. காலை 11.30மணி. பாராளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கும்போது தாக்குதல் நடத்துவதற்கு உதவியதாக திரு.அப்சல் குரு என்பர் மீது குற்றம் சுமத்தப்பட்டு மரணதண்டனையை எதிர் நோக்கியிருப்பவருக்கு  -ஆதரவாக)இந்தியாவின் கால்மாட்டில்-தமிழ் நாட்டில் (திரு.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு மரணதண்டனையை எதிர்நோக்கியிருக்கும் முருகன் சாந்தன் பேரறிவாளனுக்கு-ஆதரவாக)...   நாமும் மரணதண்டனைக்கு எதிராக குரல் கொடுப்போம்

Monday, September 12, 2011

அடங்க மறுத்து அத்துமீராமல் அடிமைத்தனம் ஒழியாது...




                     தியாகி இம்மானுவேல் சேகரன் நினவுதினத்திற்கு அஞ்சலி செலுத்தவந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் அவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தியது, அதனை தொடர்ந்து தலித் மக்கள் போராட்டம், போலீஸ் கண்முடித்தனமான துப்பாக்கிசூடு, என் உறவுகள் 7 பேர் மரணம்  இந்த செய்தியெல்லாம் படிக்கும்போது நெஞ்சம் வெடித்து சிதறுகிறது. ஊடகங்களும், அறிவிஜிவிகளும் பொதுசொத்தை செதபடுத்தியதால் காவல்துறை தற்பாதுகாப்பு நடவடிக்கைக்காக தூப்பாக்கி சூடு நடத்தியதாக வியாக்கியானம் கொடுக்கிறார்கள். அறிவிஜிவிகளுக்கும், ஊடகங்களுக்கும் நாம் முன்வைக்கும் கேள்விகள்...

Thursday, September 8, 2011

ஓணம் திருநாள் வாழ்த்துகள்...

தீபாவளி இந்து
கிறிஸ்மஸ் கிறிஸ்டியன்
ரம்ஜான்  முஸ்லிம்...

முதன் முதலாய்
மனிதர்களின்
பண்டிகையில்
நான்...
ஓணம் திருநாள்
வாழ்த்துகள்...

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!