Monday, November 26, 2012

உயிர்துறந்தேனும் உரிமை காப்போம்!!!


                                "தர்மபுரி" எல்லாம் முடிந்திவிட்டது. இது அரசியல் செய்வதற்க்கான நேரம்எறிகிற வீட்டில் பிடிங்கிய மட்டும் லாபம்” என்றநோக்கில்  பதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல், களஆய்வு, அறிக்கைகள் என வேட்டியை வரிந்துது கட்டிக்கொண்டு களப்பணியாற்றுகிறது தமிழக கட்சிகள்!, சில அமைப்புகள் ஒருபடி மேலே சென்று நீதிமன்றத்தின் வாசலை தட்டுகிறது (கடந்தகால அரசியல் தெரியாத கும்பல்) தமிழக அரசும் தன் பங்குக்கு 50,000 ரூபாயை! அள்ளி இறைத்திருக்கிறது பாதிக்கப்பட்ட  ஒவ்வொரு குடும்பத்துக்கும், ஒருவாரமாக பத்திரிககளுக்கு நல்ல வியாபாரம், இணையதள எழுத்தாளர்களெல்லாம்   எழுதிகுவித்துவருகிரார்கள், கொஞ்சமும் அரசியல் ஞானமோ, சமுக அக்கறையோயில்லாத ஒரு பெருங்கூட்டம் பின்னூட்டம் எழுதி இணையத்தை நிரப்புகிறது.
             இந்த கொடுரதாக்குதலுக்கு காரணமாக சொல்லபடுவது ஒரு காதல் திருமணமும் அதன் பின்னல் நடந்த ஒரு தற்கொலையும்தான். அப்படி பார்த்தல் தலித்மக்களுக்கு இதுவரை நடந்தகொடுமைகளுக்கு இதுதான் எதிர்வினைஎன்றல் ஒட்டுமொத்த தமிழகமும் ஹிரோசிமா ஆகி தலைமுறை நூறு கடந்திருக்கக்கூடும். இது முழுக்க முழுக்க பாமகவின் வன்னிய சாதிவெறியின் தாக்கமே தவிர வேறென்ன சொல்ல. பிள்ளையை கிள்ளிவிட்டு இப்போது கோ.க மணியை வைத்து தாலாட்டும் வேலையை செய்கிறார் தமிழனபாதுகாவலர் தமிழ்குடிதாங்கி அய்யா மருத்துவர் ராமதாசு. கடந்தசில ஆண்டுகளாக சரிந்துவரும் தன் கட்சியின் செல்வாக்கை மீட்கவும் வேல்முருகன் பிரித்துசென்ற சாதிகூட்டத்தை திரும்ம்ப மீடக்கவும் அப்பாவி தலித்மக்களின் மீது தாக்குதல் நடத்தி இழந்த சாதி செல்வாக்கை நிமிர்த்தியிருக்கிறது ராமதாஸ் அண்ட் கம்பெனி. அறிவி ஜீவிகளும் ஆதிக்க சக்திகளும் சொல்லுவதுபோல இது ஒன்றும் எதார்த்தமாகவோ, காதலுக்கவோ  நடந்ததல்ல. ஒவ்வொரு முறையும் தலித்மக்களின் உயிரை குறிவைக்கும் சாதி ஓநாய்கள் இந்தமுறை அவர்களின் வாள்வாதரங்களின் மிது திட்டமிட்டு தாக்குதல் நடத்திருக்கிறது அவர்கள் நினைத்ததை நடத்திவிட்டார்கள். இந்த மூன்று கிராமங்களும் மீண்டு எழுவதற்கு இன்னும் மூன்று தலைமுறை தண்டும்.தண்ணிகுடிக்க செம்பு இல்லை, படுக்க பாயில்லை, உறங்க இடமில்லை, உடுத்த துணியில்லை எல்லாம் இழந்து நிர்வாணமாய் நிற்கிறது மூன்று கிராமங்களும், இந்த நிர்வாணத்தை அரசியல் செய்கிறது எதிர்கட்சிகள், ஆளும் கட்சியோ இது ஏதோ பிகார்  பிரச்சனைபோல நடந்து கொள்கிறது.  தமிழ்,தமிழரென்று தொண்டைகிழிய கத்தும் தமிழ் தேசிய வாதிகளெல்லாம் அடுத்தடுத்த சூட்டிங்கில் பிசி. எப்போதெல்லாம் தமிழ் தேசியத்திற்கு இன்னல் வந்ததோ அப்போதெல்லாம் ஓடிபோய் தீக்குளித்த தலித்துகளின் விட்டிற்கு இப்போது தீவைக்கபட்டிருக்கிறது ஆனால் ஒப்பாரிவைக்க தமிழ் தேசிய தலைவர்களை மட்டும் காணவேயில்லை. எங்கோ மாநிலம் கடந்து ரோட்டோரம் தூங்கி ராஜபக்சேவுக்கு கருப்புக்கொடி காட்டிய தலைவனுக்கு இங்கிருக்கும் தர்மபுரிக்கு போக நேரமில்லை. இதற்க்கெல்லாம் ஒரே ஒரு கரணம் தான் பாதிக்கபட்டவன் தலித். இந்த நவீனநூற்றாண்டிலும்கூட தலித் மக்கள் பாதுகாப்பாக வாழ ஒருநாடும், அரசும் இல்லையென்பதே மிகபெரிய கேவலம்
இந்த சமுகத்திற்குமுன் நாம் வைக்கும் கேள்விகள்:-
இத்தனை பெரிய கொடுமைகளை செய்தபின்னும் இன்னும் சாதி வெறியை தூண்டும் விதமாக பேசிவரும்  ராமதாசையும், குருவையும் கைது செய்யாததுயேன்?
குருபூஜையின் பொது பதிக்க பட்டமக்களுக்கு 5  லட்சம் நிதிஉதவி. தான் வாழ்க்கையே இழந்து நிற்கும் அப்பாவிகளுக்கு அம்பதயிரமா? இது என்ன நியாயம்? 
திட்டமிட்ட இந்த தீவரவாத செயலை முன்குட்டியே கண்டுபிடிக்கத அல்லது கண்டுகொள்ளாத காவல்துறை அதிகாரிகளை இதுவரை பணிநிக்கம் செய்யாதுயேன்?
இவளவு பெரிய வன்முறை கிட்டத்தட்ட ஆறுமணி நேரம் நடந்து பொது எங்கே போனது காவல்துறை?   
நேர்மாறாக இந்த வன்முறையை தலித் மக்கள் செய்திருந்தால் பாசிச ஜெவின் போலீஸ் துப்பாக்கிகள் வெறிபிடித்த யானைபோல தும்சம் செய்திருக்குமே, எங்கே கிடக்கிறது உங்களின் துரு பிடித்த துப்பாக்கி?
 
ஆதிக்க சக்திகளுக்கு எதிராக சேரிகள் ஒன்றுபடதவரை. சாதி விடுதலையென்பது சாத்தியமேயில்லை என்பதற்கு தர்மபுறியே சாட்சி
கண்ணுக்கு கண். உயிருக்கு உயிர். “உயிர்துறந்தேனும் உரிமை காப்போம்

 

Thursday, November 22, 2012

இந்தியாவின் இந்துவெறி...


                         தந்தை வண்டி இழுத்து வாழ்வை நடத்துபவர். கடுமையான வறுமைச் சூழல்.ஆறாவது வகுப்போடு படிப்பை கைவிடுகிறான்.அதற்குப் பிறகு உடல் உழைப்பு. லாஹுரில் தனியாக தங்கி வேலை செய்கிறான்.ஊருக்குத் திரும்பியதும், தான் சம்பாதித்த பணத்தை செலவு செய்வது தொடர்பாக அவனுக்கும், அவன் தந்தைக்கும் சண்டை.கோபித்துக் கொண்டு, ராவல்பிண்டி செல்கிறான். மீண்டும் அங்கே வேலை. அங்கே லஷ்கர் தொய்பா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் நோட்டீஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.காஷ்மீர் விடுதலைக்காக ஆடுகளை தானமாகக் கொடுங்கள் என்று பேசுகிறார்கள்.20 வயதான கசாப்புக்கு அது ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.அந்த லஷ்கர் அமைப்பின் அலுவலகத்துக்கு சென்று நான் ஜிகாத்தில் சேர வேண்டும் என்கிறான்.வீட்டுக்குப் போய் உன் துணி மணியையெல்லாம் எடுத்துக் கொண்டு நாளை வா என்று அனுப்புகிறார்கள்.அதன் படியே துணி மணிகளை எடுத்துக் கொண்டு மறு நாள் செல்கிறான்.

அவனை வேறு ஊருக்கு அனுப்பி பயிற்சி எடுக்க அனுப்புகிறார்கள்.அங்கே அவனுக்கு ஆயுதப் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.மூன்று முறை பயிற்சி எடுக்கிறான். இந்தியாவுக்கு சென்று கண்மூடித்தனமாக தாக்குதல் தொடுக்க வேண்டும் என்று அவனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

2008 நவம்பர் 26 அன்று மும்பை வந்திறங்கிய அவன் கண்மூடித்தனமாக விக்டோரியா ரயில் நிலையத்தில் இருந்த அப்பாவிப் பொதுமக்கள் சுட்டுத் தள்ளுகிறான்.காவல்துறையோடு நடந்த மோதலில் இறுதியாக கைது செய்யப்படுகிறான்.

26 நவம்பர் 2008 அன்று மும்பையில் நடந்த தாக்குதல் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கசாப்பும் அவனோடு வந்த தீவிரவாதிகளும் நடத்திய தாக்குதலில் 176 பேர் உயிர் துறக்கின்றனர்.226 பேர் காயமடைகின்றனர்.இந்தியாவையே உலுக்கிப் போடுகிறது இத்தாக்குதல்.

இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் கசாப்புக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.இந்தத் தண்டனையை ஒட்டியே கசாப் புதன் அன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்படுகிறான்.

இந்த மரண தண்டனை சட்டபூர்வமாக செய்யப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை.மிக மிக ரகசியமாக, யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காகவே மறைக்கப்பட்டு, படு ரகசியமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஊடகங்களில் வந்த தகவல்களின் படி, கசாப்பை தூக்கிலிடுவதற்கு ஆபரேஷன் எக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.குடியரசுத் தலைவரின் அலுவலகத்திலிருந்து நவம்பர் 8 அன்று கசாப்பின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட தகவல் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சகம் நவம்பர் 8 அன்றே மஹாராஷ்டிர அரசுக்கு தெரியப்படுத்துக்கிறது.9 நவம்பர் அன்று உள்துறை அமைச்சர், தேசியப்பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் மத்திய உள்துறை செயலர் ஆகியோர் விவாதிக்கின்றனர்.26க்கு முன்பாக தூக்கு தண்டனை நிறைவேற்றப் படவேண்டும் என்று முடிவெடுக்கப்படுகிறது.

11 நவம்பர் அன்று மஹாராஷ்டிர முதல்வர் உள்துறைச் செயலர் மற்றும் டிஜிபியோடு ஆலோசனை நடத்துகிறார். 21 நவம்பர் அன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடுவது என்று முடிவெடுக்கப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சருக்கு 21 என்று முடிவெடுக்கப்பட்ட தேதி தெரிவிக்கப்படுகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் குர்ஷீத்துக்கும் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் அமைச்சர் ரஹ்மான் மாலிக் 23 இந்தியா வருவதாக இருந்தது.26/11 தாக்குதலை காரணம் காண்பித்து அவரது வருகை தள்ளிப்போடப் பட்டது.சல்மான் குர்ஷீத்தின் ஈரான் பயணமும் ரத்து செய்யப்பட்டது.

திங்கட்கிழமை அன்று, மஹாராஷ்டிர மாநில சட்டம் ஒழுங்கு ஐஜி மற்றும் சிறைத்துறை ஐஜிக்கு தகவல் சொல்லப்படுகிறது.கசாப்பை பாதுகாத்து வரும், இந்திய திபேத்திய எல்லைப் படையினருக்கு கசாப்பை பூனாவில் உள்ள ஏரவாடா சிறைக்கு கசாப்பை மாற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.அந்தக் காவல்துறையினரின் அத்தனை செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு, காவல்துறை பயன்படுத்தும் மைக் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

செவ்வாய் அன்று மாலை தூக்கிலிடுபவருக்கு தகவல் சொல்லப்படுகிறது.அவர் பூனா சிறைக்கு வரவழைக்கப்பட்டு அங்கேயே தங்க வைக்கப்படுகிறார்.சட்டம் ஒழுங்கு ஐஜியின் செல்போன் மட்டுமே செயல்பாட்டில் இருக்கிறது மற்ற அதிகாரிகள் அனைவரும், செல்போனை அணைத்து வைக்ககுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

புதன் அன்று காலை 7.30 மணிக்கு கசாப் தூக்கிலிடப்படுகிறான்.

மிக மிக ரகசியமாக வெளி உலகத்திற்கு தெரியாத வகையில் இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட விதத்தைப் பார்க்கையில் அரசியல் காரணங்களுக்காக நிகழ்த்தப்பட்ட கொலையாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.

இந்திய சட்டங்களின் படி, கசாப்பை தூக்கிலிட வழி வகைகள் இருக்கின்றன என்றாலும், பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் தூக்கிலிடப்பட்ட பகத்சிங், ராஜகுரு மற்றும் சுக்தேவுக்குப் பிறகு இப்படி ரகசியமாக தூக்கிலிடப்பட்டவர்கள் யாருமே இல்லை.

வாழும் உரிமையை அனைத்து இந்தியர்களுக்கும் வழங்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவு 21, அந்த உரிமையை வெளிநாட்டவருக்கும் வழங்குகிறது. யார் ஒருவரையும் கைது செய்கையிலோ, அவர் உயிரைப் பறிக்கையிலோ, சட்டபூர்வமான வழிமுறைகளுக்குப் பின்னரே அவ்வாறு செய்ய வேண்டும் என்ற அந்த முக்கியமான உரிமை கசாப் விஷயத்தில் மீறப்பட்டுள்ளது.

பிரிட்டிஷாரின் காலனியிலிருந்து உருவான இரண்டு நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இருக்கும் மிகப் பெரிய வேறுபாடே, இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதுதான்.மத அடிப்படையில் உருவான பாகிஸ்தானில் இது வரை பல ராணுவப் புரட்சிகள் நடைபெற்றுள்ளன.இந்தியாவைப் போல மனித உரிமைகளுக்கெல்லாம் மதிப்பளிக்கும் நாடு அல்ல பாகிஸ்தான்.மத அடிப்படைவாதத்தில் ஊறித் திளைக்கும் நாடு அது.ஆனால், இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக தன்னைக் கருதிக் கொள்கிறது.மனித உரிமைகளுக்கும், ஜனநாயகத்துக்கும் மதிப்பளித்து, வளர்ந்த நாகரீகமாக தன்னைக் காண்பித்துக் கொள்ளும் இந்தியாவில்தான் இப்படிப்பட்ட ஒரு படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது.

கருத்துச் சுதந்திரம், மனித உரிமைகள் போன்றவற்றை இந்தியாவின் உச்சநீதிமன்றம் காலப்போக்கில் செழுமைப்படுத்தி, உலகின் வளர்ந்த நாகரீங்களுக்கு இணையானதாக இந்தியாவை உருவாக்கியிருக்கிறது.இத்தனை ஆண்டுகளாக, செதுக்கி செதுக்கி உருவாக்கிய இந்தியாவின் பண்பு, ஒரு படுகொலையின் மூலம் தூக்கி எறியப்பட்டிருக்கிறது.

அஜ்மல் கசாப் பாகிஸ்தானைச் சேர்ந்தவன்.அவனைத் தூக்கிலிட வேண்டும் என்று மத அடிப்படைவாதிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.கசாப்பை சிறையில் வைப்பதால் இந்திய அரசுக்கு தேவையில்லாத செலவு என்று பேசியும், எழுதியும் வருகிறார்கள்.கசாப்பை பாதுகாக்கும், இந்திய திபேத்திய எல்லைப்படைக்கு இத்தனை நாட்களாக 60 கோடி ரூபாய் செலவாகியிருக்கிறது என்று செய்தி பரப்புகிறார்கள்.60 கோடி ரூபாய், மஹாராஷ்டிர அரசு, மற்றொரு துணை ராணுவப் படைக்குத்தான் அளிக்கிறது, அதுவும் இந்திய அரசின் ஒரு அங்கம்தான் என்பது வசதியாக மறைக்கப்பட்டு, ஏதோ வெளிநாட்டுக்கு 60 கோடி ரூபாயை அளிக்கப்போவது போல பரப்புரை நிகழ்த்தப்பட்டு வருகிறது. சாதாரண பாமரன் மத்தியில், கசாப்பை உயிரோடு வைத்திருப்பதால், இந்தியாவுக்கு மிகப்பெரிய நிதிச்சுமை, அவனை உடனடியாக கொலை செய்ய வேண்டும் என்ற பரப்புரை திட்டமிட்டு பரப்பப்பட்டே வந்திருக்கிறது.

சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகாலமாக நாம் செழுமைப் படுத்தி வளர்த்த உரிமைகளையும், ஜனநயாயகப் பண்புகளையும் ஒரே நாளில் குழிதோண்டிப் புதைத்துள்ளோம்.

எத்தகைய குற்றமாக இருந்தாலும், அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.மரண தண்டனை வழக்குகளில் உச்ச நீதிமன்றமே தீர்ப்பை உறுதி செய்தாலும், குடியரசுத் தலைவரிடம் மேல்முறையீடு செய்யலாம்.குடியரசுத் தலைவர் மேல்முறையீட்டை நிராகரித்தாலும், மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகும் வழிவகைகள் நமது நீதிபரிபாலனத்தில் உண்டு.குடியரசுத்தலைவர் கருணை மனுக்களை நிராகரித்த பல நேர்வுகளில் உச்ச நீதிமன்றம், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியிருக்கிறது.அப்படிப்பட்ட வாய்ப்பு கசாப்புக்கு மறுக்கப்பட்டிருக்கிறது.

மரண தண்டனை நேர்வுகளில், சம்பந்தப்பட்டவரே நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்பதில்லை.தொலைக்காட்சியில் செய்தியைப் பார்த்தேன்.இவரைத் தூக்கிலிடுவதில் சட்டபூர்வமான பிழை இருக்கிறது என்று இந்தியாவில் யார் வேண்டுமானாலும் நீதிமன்றத்தை அணுகலாம் என்ற நிலையில், கசாப்பை இப்படி தூக்கிலிட்டிருப்பது, அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே நேரத்தில் நெருக்கடிக்குள்ளாக்கி, அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்பதைத் தவிர வேறு காரணங்கள் இல்லை.

கசாப் வழக்கையே எடுத்துக் கொண்டால், கசாப்புக்கு மற்றவர்கள் அனைவருக்கும் கிடைத்த நியாயமான உரிமைகள் கிடைத்ததா என்றால் இல்லை.கசாப் சார்பாக ஆஜராக எந்த வழக்கறிஞரும் முன்வரவில்லை.அந்த அளவுக்கு தேசபக்த வெறி ஊட்டப்பட்டிருந்தது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் வெளிப்படையாக கசாப்புக்கு வழக்கறிஞர் வைக்கும் உரிமையை நிராகரிக்கக் கூடாது என்று அறிவித்த பின்னரே நீதிமன்றத்தின் சார்பாக வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டார்கள்.வெளிப்படையாகவே கசாப் சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர்கள் தேசத் துரோகிகள் என்று அறிவிக்கப்பட்டது.

26/11 தாக்குதல் ஒரு மோசமான தீவிரவாதத் தாக்குதல் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.அதற்காக அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு எவ்விதமான உரிமையையும் வழங்கக் கூடாத என்று இந்தியா முழுக்க குரல் எழுவது ஒரு ஜனநாயக நாட்டில் ஏற்புடையதா ?ஆனால் அப்சல் குரு வழக்கிலும், அஜ்மல் கசாப் வழக்கிலும் இதுதான் நடந்தது.இந்த இருவருக்கும் ஆதரவாக அல்லஇந்த இருவருக்கும் நியாயமான உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்று கூறினாலே அவ்வாறு கூறுபவர்கள் தேசத்துரோகிகளாகிறார்கள்.

மத அடிப்படைவாதத்தின் அடிப்படையிலேயே தொடர்ந்து அரசியல் நடத்தும் சங் பரிவார் அமைப்புகளின் தாக்கம், காங்கிரஸ் கட்சியையும் பீடித்திருப்பதையே இது காட்டுகிறது.அதன் வெளிப்பாடே கசாப்பின் ரகசிய தூக்கு.

நம்முடைய கேள்வியெல்லாம் இதுதான்?

உண்மையில் மும்பை சம்பவத்திற்கு கசாப் மட்டும்தான் குற்றவளியா?

அப்படிஎன்றல் கசாப் குழுக்கள் இந்தியாவிற்குள் வருவதை முன்கூட்டியே கண்டுபிடிக்கத உளவு துறைக்கு என்ன தண்டனை ?

பாக்கிஸ்தானில் இருந்துதான் இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகள் உருவக்கபடுகிறார்கள் என்றல் இன்னும் பாக்கிஸ்தானுடன் நட்பு பாராட்ட வேண்டிய அவசியமென்ன?

குஜராத் கொலைகாரன் நரேந்தரமோடி, பாபர் மசூதி குற்றவாளிகளான BJP மற்றும் RSS , தலைவர்கள், மலேகன் குண்டுவெடிப்பு காரணமான இந்து தீவிரவாதிகளுக்கு இன்னும் மரண தண்டனை வழங்காதது ஏன்?
 
ஒன்றே ஒன்றுதான் இவர்களெல்லாம் இந்துகள்...

"உலக அரங்கில் இந்தியாவின் ஜனநாயக சாயம் வெளுத்து இந்துவெறி வெளியேதெரியும் காலம் தொலைவில் இல்லை"

இந்திய இந்து வெறியின் அடுத்த இலக்கு அப்பாவி அப்சல் குரு என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை....

 

Monday, November 5, 2012

அம்முக்கு...



தொலைக்காமல் 
பத்திரமாய் எனக்குள் தான் 
வைத்திருந்திருக்கிறேன் 
அவளை...

இப்போது 
நிஜமாக தொலைத்து 
எங்கே தேடியும் 
எனக்கில்லையேன்றகிவிட்ட அவளை
மீண்டும் தேடுகிறேன்...
ஒருமுறை சொல்லவேண்டும் 
மீண்டும் அவளுக்கு
நினைவு படுத்தவேண்டும்
நான் இன்னும் அவளை
காதலிப்பதை

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!