Tuesday, December 21, 2021

அம்மா

 

அவளின்

கைக்குள் இருந்தவரை

நினைத்ததில்லை!

 

என் கைகளுக்கு

சிறகு முளைத்தபிறகு

மறந்ததில்லை!! 

 

கட்டிய கூட்டின்

வெறுமைகண்டு

வாழ பிடிக்கவில்லை

என்னோவோ!!!

 

தாய்க்குருவி

இரவெல்லாம்

கறைகிறது. 

 

பறக்கும் தூரம்தான்

என்றிருந்தேன் 

கறைச்சல்

குறைவதாயில்லை

 

இப்போது

பறப்பது மட்டுமே

பாக்கி ...

Thursday, December 16, 2021

சாத்தானின் வேதம்

நரைத்து 

நடைதளர்ந்து 

தள்ளாடி

கைப்பிடிக்கு 

காத்திருந்தவன் 

காதில்

சாத்தன் ஓதியது


காத்திருப்பே 

காதலின் 

சுகமென்று.


கல்விமுறை (இன்று கண்ட காட்சி)

 

காம்போடு அம்மா துரத்த

பள்ளி பையோடு

ஓடியது குழந்தை

 

மாடடைபோல அடித்து 

இந்த புண்ணாக்கு 

கல்வியை 

திணித்தால் - அவன்

கொழுப்பானா

செழிப்பானா !

 

எல்லோரும்

இவர்களையே  பார்க்க

குழந்தையின்

மனநிலையை

புரிந்துகொண்ட

மாடு மட்டும்

அமைதியாய் நடந்தது  

Wednesday, December 15, 2021

ஒரு காதல் கதை



கடுங்குளிரில்

பெருங்கதவு

இடுக்குகளில்

அவளை

தேடுகிறேன்



சித்திரை

முழு நிலவில்

பார்த்தது



அவளின்

ஒற்றை பார்வைக்கு

நா சுரந்த

வியர்வையை - என்

நாடி நரம்பும்

சுரக்கிறது



பிரம்மன்

தொலைத்த

பேரழகி



அரேபியத்து

பைங்கிளி …



ஆம்

நான் காமன்

அவள் சோமன்



என்னைவிட

இரண்டங்குலம்

உயரமவள்



முத்தமிட்டு

முத்தமிட்டு

நாவாடியதற்கு



நட்ச்சத்திரங்கள் சாட்சி



பெருக்கெடுத்த

காமத்திற்கு

அம்புலி சாட்சி



அவள் சாதியை

நானும்

என் மதத்தை

அவளும்

கேட்டதே இல்லை



காதலும் காமமும்

வெண்ணிற அருவியாய்

புல் நனைத்த

அந்த இரவில்

அறிவித்தார்கள்

திங்களன்று

போட்டியென்று



போட்டிகளத்தில்

அவளும் நானும்

எதிரணியில்



இப்போது

ஒரே இலக்கு - அது

வெற்றி!



தோட்டா சத்தத்திற்காக

காத்திருந்த காதில்

மௌனமாய் சொன்னாள்

மௌனமாய் சொன்னாள்

மௌனமாய் சொன்னாள்

உன் வெற்றி

நம் வெற்றியென்று



காதலை சுமந்த

இதயத்திற்கு

கால்களுக்கு

கட்டளையிட

மனம்மில்லை



முன்னும் பின்னுமாய்

ஓடிக்கொண்டிருந்தோம்

முந்தட்டும்.

நின்று விட்டேன்



வெற்றிவிழா!

அவளை கொண்டாடி

மகிழ்தார்கள்

எனக்கு அழைப்பில்லை



அந்த பெருங்கூட்டத்தில்

அவள் கண்கள்

தேடியது என்னைத்தான்.



பெருங்கதவுகளின்

இடுக்குகளில்

அவளின் வெற்றியை

ரசித்து கொண்டே

நகர்ந்தேன்

அவளும் நகர்ந்தாள்



ஊட்டிக்கு வந்துபோன

நீங்கள் என்னை

கண்டிப்பாய்

பார்த்திருப்பீர்கள்



உற்றுப்பாருங்கள்

உங்கள் செல்ஃபீயில்

ஓரமாய் நான்

நிற்கக்கூடும்



இப்போது மீண்டும்

போட்டிக்கான

அறிவிப்பு



அவள்

கண்டிப்பாக

வருவாள்



என்னை

அலங்கரித்து

அவளுக்காய்



அந்த பெரும்

மைதனத்தின்

வாசலருகே

காத்திருக்கிறேன்...



இப்போது

என் பிராத்தனை

ஒன்றே ஒன்றுதான்

கண்டிப்பாய் அவள்

வெற்றிப்பெற வேண்டும்



என்னைப்போல

ஊட்டி வீதிகளில்

அனாதையாய்

சுற்றித்தெரியும்

குதிரைகளின்



பெயரில் அவள்

பெயர்யில்லாமலிருக்க

அவள் கண்டிப்பாய்

வெற்றிபெற வேண்டும்



(இது பந்தயத்தில் தோல்வியடைந்து ஊட்டி தெருக்களில் சுற்றித்திரியும் ஒரு குதிரையின் காதல் கதை)

விற்பனைக்கு ...

 
மலை குடைந்து 
குளிரும் !

மரம் அழித்து
காற்றும் !!

ஆழ்துளையில்
தண்ணீரும் !!!
தேடிக்கொண்டிருக்கிறோம்
 
மலை
வீடானது

மரம்
காதவானது

ஆழ்துளை
குழந்தைகளால்
நிரம்பிக்கிடக்கிறது
 
எஞ்சிய
தண்ணீரும்
காற்றும்
குழந்தையும் 
விற்பனைக்கு .

 

Tuesday, December 14, 2021

அன்பு எனப்படுவது ...

 
தோற்றுப்போன காதலுக்காக 

கோப்பை நிறைய மது 

வைத்துக்கொண்டு 

அழுபவனுக்கு 

தெரிவதில்லை 


அவன் அருந்துவது 

அன்பென்றும் 

கண்ணில் வழிவது 

காதலென்றும்

Monday, December 13, 2021

விபச்சாரியின் பரிசு…(என் பழைய பரணியிலிருந்து )

 


நீ

தேவதை -உன்

கண் விண்மீன்

கன்னம் தேன்கிண்ணம்

உதடு கோவம்பழம்

மார்பு...     

இடை

 

 உருகி உருகி வர்ணித்தான்- அவள்

மார்மீது படர்ந்து  கட்டிதழுவினான்

உதடுகள் முத்தத்தால் -

முகத்தை அணைத்தபடியே

அழைத்து சென்றான் படுக்கைக்கு

 

/சி காற்று தண்ணீர் மெத்தை

ஆபாச சுவரொட்டி. - அவள்

முகம் சுழிக்கவில்லை விளக்குகள் தூங்க

தித்திக்கும் இன்பம் கொடுத்தாள்

அவன் ஆண்மை அடங்கும்வரை

திகட்டா இன்பம் கொடுத்தாள்

வலி தாங்காமல் கட்டில்தான் குலுங்கியது

 

நிமிடங்கள் கரைந்தது

விளக்குகள் விளித்துகொள்ள

ஆடைகள் சரிசெய்தனர்

 

அவள்

நான் உன் போன்ற பெரிய

மனிதர்களிடம் பெற்ற சுகத்தை

இன்று உனக்கு தந்திருக்கிறேன்

அவள் முடிப்பதற்குள் ஆம் என்றான்

 

நீ

தவருதலாக புரிந்து கொண்டாய்

நான் உனக்கு தந்தது சுகம் இல்லை

உன் வாழ் நாளை நிர்னைக்கும் எய்ட்சை

எடுத்ததை எடுத்த இடத்தில் வைப்பது என் பழக்கம்

உன்னிடத்தில் இருந்து எடுத்ததின் பங்கு உனக்கு

தந்துவிட்டென் இன்னும் -சில

நன்றிகடன் தீர்க்கவுள்ளது அவர்களுக்கும் பரிசளித்துவிட்டு வருகிறேன்.

 

பெரும் பினம் தனி பிணமாக போகாது என்னையும் சேர்த்து பலர் நம்முடன் வருவார்கள்

                                  

ஜூன் 30, 2010

 

காற்றில் வரும் ஞாபகங்கள் (என் பழைய பரணியிலிருந்து )

   



அர்ஜுன் மீது எனக்கு எப்போதுமே பாசம் அதிகம், அவனுக்கும்தான். ஆனால் நாங்கள் இருவரும்  கடைசியா பேசி  ரெண்டுவருசத்துக்குமேல இருக்கும். இப்ப அவனுக்கு என்னை ஞாபகம் இருக்குமான்னு தெரியல.  கிட்டத்தட்ட இரண்டுவருசமா ஒன்னா தூங்கி, ஒன்னா சாப்பிட்டோம்.   அவனும் நானும் பழக ஆரம்பிக்கும்போது எனக்கு இருபத்திரண்டுவயசு,  அவனுக்கு மூணுவயசு.  அர்ஜுன், எங்க மச்சான் பையன். நா மச்சானோட லேப்பில வேலபாத்துக்கிட்டுருந்தேன். அக்காவுக்கு E.B.ல  வேலை, அர்ஜுன் எல்.கே.ஜிக்கு போயிட்டுயிருந்தான். ஸ்கூல் முடிஞ்சி பெரும்பாலும் மாலை நேரங்களில் நானும் அவனும் ஒன்னாத்தான் இருப்போம், ரோட்டு ஒரமா நின்னுகிட்டு போறவார வண்டியெல்லாம் வேடிக்கை பாப்போம். எதாவது பொண்ணுபோனா, பிகிற் போதுன்னு சொல்லுவேன்; அவனும் தலையாட்டுவான்.

சைக்கிள்ல ரெண்டுபேரும் ரௌண்டடிப்போம், ரோட்டோரத்தில எதாவது கோயில் இருந்தா கன்னத்தில போட்டுக்குவான். என்னன்னுகேட்டா, சாமின்னு சொல்லுவான்.

யய்ய அது சாமியில்ல கல்லு

 அம்மா, சாமின்னு சொன்னா

 உன்கிட்ட பொய்சொல்லிருக்கா

 அப்ப அது…

 பொம்ம.

 சாமிய பத்தி தப்பா பேசினா கண்ண குத்தும்னு அம்மா சொன்னா

 இப்ப நம்ள குத்திச்சா

 தலையாட்டினான்)

 அப்பனா, நீ சாமிமேல கல்லதூக்கிபோடு

 ஒரு சின்ன கல்ல தூக்கி போட்டேன்

 மாமா  நானும்

சின்ன கல்ல தூக்கி போட்டான். வா போவோம் சாமி செத்து போச்சி. மச்சான், அக்காவவிட அவனுக்கு எம்மேல பாசமும் நம்பிக்கையும் அதிகம்.

ஒருநாள் அவனும் மச்சானும் டாக்டரை பாக்கபோயிருக்காங்க. டாக்டர்கிட்ட நின்ன நர்சபாத்து பிகிருனு சொல்ல, மச்சான் என்னைய அடிக்காத கொரதான்.

ஸ்கூல் மிஸ்ஸபாத்து பிகிருனு சொல்லிருக்கான். யாரு சொல்லித்தந்தான்னு கேட்டதுக்கு மாமான்னு சொல்ல அந்தம்மா நோட்டுல, பையன நல்லவன்கிட்ட  மட்டும்  சேரசொல்லுங்கன்னு எழுதி அனுப்பிருச்சி. இத வாசிச்ச எங்க அக்கா, ஒரே ஏச்சி, இவனபாத்தா நல்லவன் மாதிரி அக்காகிட்ட ஒட்டிகிட்டுயிருந்தான். எல்லா தப்பயம் எங்கூட சேந்துசெய்வான்; ஆனா அக்கா, மச்சான் திட்டுனா நல்லவன் மாதிரி மூஞ்சவச்சிக்கிட்டு என்னைய மாட்டிவிட்ருவான்.

ஒருநாள் வீட்டு பக்கத்தில ஒரு பச்ச பாம்பு  தலையில மட்டும் அடிபட்டு கிடந்துச்சி,

  யய்ய இங்கவால

 என்ன

 அந்த பாம்ப புடி

 நீ புடி

 வாலை புடித்து தூக்கினேன்

 கீழ போடு நா புடிக்கேன்

 பாம்பை தூக்கி என்னையவே பயங்காட்டினான் .

 அவன் என்மேல் வைத்திருந்த நம்பிக்கை எனக்கு அப்பதான் தெரிஞ்சிச்சி.  

அடிக்கடி எங்களுக்குள் சின்னசின்ன சண்ட வரும்; கொஞ்சம் கழிச்சி சேந்துக்குவோம். விளையாட்டு, சாப்பாடு, தூக்கம்னு சந்தோசமா போன எங்க வாழ்க்கையில அவனுக்கு முழாண்டு பரிட்ச முடிஞ்சி, லீவுக்கு பாட்டி வீட்டுக்கு போனான். நானும் சினிமா கனவுல சென்னைக்கு வந்து ஆறேழுவருஷமாச்சி. 

இப்போதும் சென்னையில் அவன் வயது குழந்தைகளை பார்க்கும்போது காற்றில் அவன் ஞாபகங்கள்  வந்துபோகிறது ...


  மே 08, 2010

அழுகிப்போன நான் (என் பழைய பரணியிலிருந்து )

                                                                                    

 காலையிலே யார்டா கதவ தட்டுறது. எரிச்சலோடு கதவைத் திறந்தேன். கையில் தூக்குவாளியோடு கோமதி அத்த. இன்னைக்கு  பொங்கலுங்கிறதே அத்த பொங்கல் வாளியை  நீட்டும் போதுதான் ஞாபகமே வருது.

 

ஊருல இருந்தா ஊர் கூடி  பயலுவ ஒருபக்கமும் புள்ளயலுவ  ஒருபக்கமும் பொங்கல்  வைப்போம் மொதல்ல யார் பான பொங்குது ஆம்பள பானயா பொம்பள பானயா என்று  போட்டி   போட்டு தீ போடுவோம். நிமிசத்துக்கு   ஒருதடவ    பானைய எட்டி பாத்து  இப்பபொங்கிரும் இப்பபொங்கிரும்னு சத்தம் போட்டுக்கிட்டே தீய போடுவோம்   பொட்டப்புள்ளைங்க பான மொதல்ல பொங்குற மாதிரி தெரிஞ்சா அகப்பைய பானைக்குள்ள போட்டு கொஞ்ச பொங்கல பானைக்கு வெளிய கொதிச்ச மாதிரி ஊத்திட்டு  கொலஉட ஆரம்பிச்சிருவோம். இது கள்ள ஆட்டம்னு எங்கள தொரத்த ஆரம்பிப்பாங்க சண்டகிண்டன்னு போட்டுட்டு கடைசில சமாதனமாகி ஊருக்கே அந்த  பொங்கல கொடுப்போம்.

இன்னும் பல்லு வெலக்கல ஆனா பொங்கல் வாசம் இப்பவே சாப்டுடா மகேஷ்ன்னு சொல்ற மாதிரி என்னைய சுண்டி இழுக்க. தூக்கு வாளியை தொறந்து ஆட்காட்டி விரல வாளிக்குள்ள விட்டு கொஞ்சம் பொங்கல நாக்கில வச்சா அது நெய்யில வழுக்கி வயித்துல விழுந்திருச்சி. மறுபடியும் எடுக்க வாளிக்குள்ள  கைய விடும்போது நாரப்பய மவன. அவ்வளவும்  ஒனக்குத்தான் மொதல்ல பல்ல வேளைக்கு  இதுக்கு மேலேயும் வாளிய தொறந்தா  எங்க அத்த  சாமி ஆடிரும். பொங்கல் சாப்பிடறதுக்காகவே சீக்கிரம் பல்லுகில்லு வெளக்கி குளிச்சி முடிச்சி துணி மாத்தவும் மச்சான் போன் பன்னவும் சரியாயிருந்துச்சி. மாப்ள ஆஸ்பத்திரியில ஒரு டெஸ்ட் இருக்கு அவசரம் சிக்கிரம் போ.  அவசர அவசரமா கிளம்பி போயி டெஸ்ட முடிக்கிறதுக்குள்ள அருணாக்கா போன் பண்ணி வீட்டுக்கு வரச் சொல்லிருச்சி. அப்படியிப்படின்னு அன்னைக்கு  முழுசும் ஒரே வேல.  ஓடியாடி அலஞ்சதுல ராத்திரி நல்ல தூக்கம்.

இன்னைக்கு மாட்டுபொங்கலுங்கிறது எந்திரிக்கும்போதே ஞாபகம் வந்திருச்சி. எந்திருச்சி முகமெல்லாம் கழுவிட்டு லேபுக்குள்ள  வந்தா  ஏதோ ஒரு வித்தியாசமான வாட அப்பதான் ஞாபகம்வந்திச்சி அத்த கொண்டுவந்த பொங்கல். மூடிய தொரக்கமலே தெரிஞ்சிச்சி அது கெட்டுப்போயிருச்சின்னு    காம்பவுன்டுக்கு  வெளிய கொட்டுறதுக்கு வாளிய  தொறக்கும்போதே நாத்தம் கொடலபுடுங்கிருச்சி. ஆறடி உயர சுவரது. அந்தபக்கம் ஒரு சின்ன  சாக்கட.  எட்டி வேகவேகமாக் கொட்டினேன். அய்யா இங்க போடுங்க, இங்க போடுங்க. ஒருநிமிடம் பதரிபோனேன் சுவருக்கு அந்தபக்கம் நிக்கிறவங்கள இங்கிருந்து பாக்க முடியாது வேக வேகமா லேபுக்குள்ள ஓடி ஸ்டூல எடுத்துபோட்டு மேல எரிப்பாத்தா  அஞ்சாறு சின்னப் புள்ளைங்க.  கொட்டின பொங்கல சாப்பிட்டுட்டு இருந்தாங்க  அவுங்க முதுகுல ஒரு சின்ன பை கையெல்லாம் சகதி அவங்கள பாக்கும்போதே தெரிந்தது பாலித்தின் பேப்பர் பொருக்கி விக்கிரவங்கன்னு . காம்பவுண்டுக்கு மேல என்ன பாத்ததும் அய்யா அய்யா கத்த ஆரம்பிச்சாங்க ஆண்டுகள் ஐந்து தொலைந்தபின்பும் இன்னும் அந்த பிஞ்சு குழந்தைகளின் சத்தம் மட்டும் என் நினைவில்...

                                                                                                                                          

 மே 26, 2010

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!