Wednesday, August 31, 2011

தோழர் செங்கொடிக்கு வீரவணக்கம்...






அப்பாவி தமிழர்களான சாந்தன்,முருகன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை தடைசெய்வதர்க்காக உயிர் தியாகம் செய்த  அன்பு தங்கை செங்கொடிக்கு வீரவணக்கம் ,உங்கள் ஆன்மா அமைதிகொள்ள வேண்டுகிறேன்...


தோழர் செங்கொடி சென்று வாருங்கள்,உங்களைப் புரிந்து கொண்ட தோழர்கள் பலர் இங்கிருக்கிறோம் ,உயிரைக் கொடுத்து நீங்கள் எழுப்பியிருக்கும் கோரிக்கையை அவர்கள் நிறைவேற்ற  நாங்கள் போராடுவோம் . உங்கள் தீக்குளிப்பு அந்தப் போராட்டத்தின் மீது ஒரு நெருப்பாய் பற்றவைக்கும், போய் வாருங்கள்!

வீரவணக்கம் வீரவணக்கம் விராவணக்கம்...

Tuesday, August 30, 2011

ராம்ஜெத்மலானி விவாதம்...

முருகன், சாந்தன், பேரறிவாளனின் தூக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பிரபல மூத்த வக்கீல்கள் ராம்ஜெத்மலானி, காலின் கான்சிலேஸ், வக்கீல் வைகை ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்இதையடுத்து  மூவரின் தூக்குத்தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
                               
முருகன், சாந்தன், பேரறிவாளன் வழக்கில் வாதாடிய  ராம்ஜெத்மலானி விவாதம் உங்கள் பார்வைக்கு...

’’ஒரு
மரண தண்டனை கைதியின் கருணை மனு மீது முடிவு எடுக்க மிக நீண்ட கால தாமதம் ஆனதற்காக அந்த கைதியின் தண்டனையை குறைக்க சுப்ரீம் கோர்ட்டு பல வழக்களில் தீர்ப்பு கூறியுள்ளது

இந்த வழக்கை பொறுத்தவரை தூக்கு தண்டனை பெற்ற 3 பேரின் கருணை மனு மீது ஜனாதிபதி முடிவு எடுக்க 11 ஆண்டுகள் 4 மாதம் கால தாமதம் ஆகி உள்ளது. இந்த கால தாமதத்தையே இந்த 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கான காரணமான எடுத்துக் கொள்ள வேண்டும்.

 
ஐரோப்பிய நாடுகளில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. மரண தண்டனை பெற்றவர்களின் கடைசி நிமிட தவிப்புகள் குறித்து ஒரு புத்தகம் எழுதி உள்ளேன். அந்த புத்தகத்தை நீதிபதிகள் படித்து பார்க்க சமர்ப்பிக்கிறேன். இந்தியாவில் மரண தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும்.  நீதிபதி சின்னப்பா ரெட்டி தனது தீர்ப்பில் கருணை மனு மீது முடிவு எடுக்க 2 1/2 ஆண்டுகள் கால தாமதம் ஆனதற்காக தூக்கு தண்டனையை குறைப்பதற்கு ஒரு காரணமாக எடுத்துக் கொண்டுள்ளார்.
 
இந்த தீர்ப்பு குறித்து 11 நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து அளித்த தீர்ப்பில், கருணை மனு மீது முடிவு எடுக்க காலக்கெடு நிர்ணயிக்க முடியாதே தவிர நீண்ட கால தாமதத்தை தண்டனையை குறைப்பதற்கான ஒரு காரணமாக எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.
 
மரண தண்டனையை நிறைவேற்ற காலம் 30 நொடிகள் தான் ஆகும். ஆனால் இந்த 3 பேரின் கருணை மனு மீது முடிவு எடுக்க 11 ஆண்டுகள் கால தாமதம் ஆனது மிகப் பெரிய தண்டனை ஆகும்.
 
கருணை மனு மீது எப்படி முடிவு எடுப்பார்களோ என்று இவர்கள் நினைத்து, நினைத்து செத்து பிழைக்கிறார்கள். இந்த வழக்கைப் பொறுத்தவரை கோர்ட்டு நடவடிக்கைகள் குறித்த விசாரணை 1999 அன்றே முடிவடைந்து விட்டது. இவர்கள் கருணை மனு மீது தமிழக கவர்னர் 10 நாட்களில் முடிவு எடுத்து நிராகரித்து விட்டார்.
 
இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கருணை மனுவை மீண்டும் பரிசீலிக்க கவர்னருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. 2-வது கருணை மனு மீது தமிழக கவர்னர் 5 மாதத்தில் முடிவு எடுத்தார். அதன் பிறகு ஜனாதிபதியிடம் 26-4-2000 அன்று கருணை மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது 11 ஆண்டுகள் 4 மாதத்துக்கு பிறகு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 
இதற்கிடையே ஜனாதிபதிக்கு 5 தடவை நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்தது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21க்கு எதிரானது. வழக்கு விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும் என்பது அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும்.
அந்த உரிமையை மீறும் வகையில் ஜனாதிபதி முடிவு எடுத்துள்ளார். இதற்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் 3 பேரும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே
, இவர்களூக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்.   கருணை மனு மீது முடிவெடுப்பதில் தமிழக அரசினுடைய பங்கு எதுவும் இல்லை.’’



 

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!