Thursday, August 25, 2011

யார் இந்த அண்ணா ஹசாரே


தடிஎடுத்தவனேல்லாம் தண்டல்காரன் என்பதுபோல உண்ணாவிரதம் இருப்பவனெல்லாம் காந்தியாக பார்க்கின்ற துபாக்கியநிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது இந்தியா…
இந்திய ஊடகங்களின் சமிபத்திய கண்டுபிடிப்பு அண்ணா ஹசாரே   இங்கிலாந்தில் இந்திய கிரிக்கட் அணி மண்ணை கவ்விய செய்தியெல்லாம் மண்ணுக்குள் புதைத்துவிட்டு தேசிய ஊடகங்கள் எல்லாம் இப்போது இவர்மீதுதான் பிளாஷ் அடித்துகொண்டிருக்கிறது
ஆளும் அரசின் பலவினத்தை பயன்படுத்தி அதில் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார் இந்த ஹசாரே. இவரின் அதிகபட்ட்ச்ச தகுதியே சீனபோரின்போது இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தார் என்பதே. இன்று ஊழலை ஒழிக்க வந்திருக்கும் இவர் ஒன்றும் புத்தன் இல்லை,இவர் மிதே ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்கிறது  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்டது, இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட் நிதியில் கையாடல் செய்தது, அதை நீதிபதி பி.பி.சாவந்த் உறுதி செய்தது, அண்ணா ஹசாரேவின் கிராமமான ராலேகாவ் சித்தியில் நாட்டாமையாக ஆட்டம் போட்டது, குடித்தவரை தூணில் கட்டி அடிப்பது, அசைவ உணவை கிராமத்தில் தடை செய்தது, கேபிள் டி.வியை முடக்கியிருப்பது வரை பல வண்டவாளங்கள் அண்ணா ஒரு நிலபிரபுத்துவ நாட்டாமை என தண்டவாளத்தில் ஏறிக்கிடக்கிறது. ஊடகங்களின் கவரேஜ்ஜுக்கு பொருத்தமாக தனது உண்ணா விரதத்தின் தேதியையெல்லாம் தள்ளிவைக்கும் இந்த விளம்பர மோகியின் பலவீனத்தை புரிந்து கொண்டு ஊடகங்களும் அவரை மாபெரும் போராளியாக சித்தரிக்கின்றன. குறைந்தபட்சம் நமது தங்கபாலு அளவுக்கு கூட அறிவில்லாத இந்த காமடியனை ஊடகங்கள் ஜாக்கி வைத்து தூக்க தூக்க அவரும் தன்னை ஒரு 70 எம்.எம் ஹீரோவாக கருதிக் கொள்ள நாட்டு மக்கள் இந்த நாடகத்தை பார்த்து தொலைக்க வேண்டிய துர்பாக்கிய நிலை. நாம விசயத்துக்குவருவோம்

லோக்பால் மசோதா
பிரதமர், அமைச்சர்கள், உள்ளிட்ட உயர்மட்டப் பொறுப்புகளில் இருப்போர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க வகை செய்யும் லோக்பால் மசோதா, கடந்த 42 வருடங்களாக நிறைவேறாமல் பாராளுமன்றக் கிணற்றுக்குள் போட்ட கல்லாக அப்படியே கிடக்கிறது. 1969-ஆம் ஆண்டிலிருந்து 2008-ஆம் ஆண்டு வரையில் பத்து முறை இம்மசோதா அறிமுகம் செய்யப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதாவது, வின்னர் கைப்பிள்ளையின் வார்த்தைகளில் சொல்வதானால், கட்சி பாகுபாடின்றி சர்வகட்சிகளும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு இம்மசோதாவைப் பாராளுமன்ற மூத்திரச் சந்தினுள் போட்டு ரவுண்டு கட்டி தெளிய வைத்து தெளிய வைத்து கும்மியிருக்கிறார்கள்
இந்த சட்ட வரையறை மூலம்,
1. ஊழலுக்கு எதிரான தனி ஆணையம் அமைக்கப்படும்
2. இதன் உறுப்பினர்களை மக்களும் நீதியரசர்களும் தேர்ந்து எடுப்பர்
3.ஆளும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில வராமல் தேர்தல் ஆணையம் போல தனி அமைப்பாக இயங்கும்
4.இதில் செய்யப்படும் புகார்கள் ஓராண்டில் விசாரணையும் அடுத்த ஆண்டில் தீர்ப்பும் வழ்ங்கப்படும்
5.சிறிய அளவில் நடைபெறும் கையூட்டு முதல் பெரிய அளவில் நடைபெறும் ஊழலகள் வரை இந்த அமைப்பில் புகார் செய்யலாம்
6.இந்த அமைப்பில் உள்ளவர்கள் மீதே புகார் வந்தால் 2 மாதத்தில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்படும். நல்ல சட்டம்தான் நாம் வரவேற்கிறோம் ஆனால் வெறும் சட்டம் மட்டும் போட்டு என்னபிரயோஜனம் இந்தநாட்டில் ஒருவன் அதிகபட்ச தவறு செய்தால் அவனுக்கு மரணதன்ன்டனை வழங்க சட்டத்தில் இடமிருக்கு, ஆனால் நாளுக்கு நாள் குற்றங்கள்  அதிகரித்து கொண்டுதானே இருக்கிறது. அப்படியிருக்க இந்த லோக்க்பால் வந்தால் மட்டும் எப்படி ஊழலை எப்படி ஒழிக்கமுடியும் இந்த நாட்டில் தானே ஊழல் செய்த தாமஸ் என்பவரையே ஊழல் கண்காணிப்பவராக அரசு நியமித்தது. ஏற்கனவே ஊழலைஒழிக்க பலசட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது இந்திய தண்டனை சட்டம் 1860 மற்றும், ஊழல் தடுப்பு சட்டம் 1998 என பல சட்டங்கள் நடைமுறையில் இருக்குபோதுதானே போபஸ் ஆயுத பிரங்கி ஊழல், சவப்பெட்டி ஊழல், மாட்டுதிவன ஊழல், ஸ்பெக்ட்ரம், காமன் வெல்த் ஊழல், எல்லாமே நடந்து கொண்டிருக்கிறது வேறு எப்படி ஜனலோக்பால் வந்தால்மட்டும் ஊழல் ஒளிந்து விடும்மேன்பது பூனை கண்ணமூடிட்டு பால் குடிச்சா உலகம் இருட்டுன்ன கதையிருக்கு

இப்போது ஊழலை கையிலெடுத்து கபடியாடிகொண்டிருக்கும்  திரு அண்ணா ஹசறேவாவுது எதாவது புதிய கொள்கைகளை, புதிய சிந்தனைகளை சொல்லுவறேன்றல் அப்படி ஒரு மண்ணும் சொல்லவில்லை முன்னாள் ஆர்.ஆர்.ஸ் கறாரான இவரின் நோக்கமெல்லாம் பா..  மிண்டும் ஆட்சியில் அமர்துவதுதான் என்பது மிகதெளிவாக தெரிகிறது ஆனால் இவரின் போராட்டத்தை பா..  பெரியாளவில் ரசிக்கவில்லை என்பதை மறுக்கவில்லை. மடியில கனமிருக்க! திருடனுக்கு தேள் கொட்டினமாதிரி பொத்திகிட்டு இருக்கு பா..க. ஸ்பெக்ட்ரம் முதல் காங்கிரசின் எல்லா ஊழலையும் பா.. க்கு பங்கிருக்கிறது என்பது ஊர் அறிந்தவிஷயம்.
 2ஜி ஊழலில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், முதலாளிகள், அரசு அனைவரும் குற்றவாளிகளாக தெரியவரும் நேரத்தில் அதை மறைப்பதற்கே அண்ணாவின் நாடகம் திட்டமிட்டு நடத்தப்படுகிறது
அண்ணா ஹசரவின் போராட்டமே ஒரு முற்போக்கு சிந்தனையில்லாத   போலி நாடகமே  காமன் வெல்த் ஊழல், 2ஜி ஊழல் என்று ஊழலின் குறிப்பான விசயங்களைப் பற்றி எதுவும் பேசாமல், அவற்றிலிருந்து மக்களின் கவனத்தை கலைக்கவே அண்ணாவின் காமடி நாடகம் பயன்படுகிறது. அது தெரிந்தே காங் அரசும் அண்ணாவை எதிர்ப்பது போல எதிர்த்து அணைப்பது போல அணைத்து இந்த ஆட்டத்தை தொடர்கிறது.
ஏகாதிபத்தியங்களின் ஆசி பெற்ற தன்னார்வக் குழுக்கள் அண்ணாவின் நாடகத்தை பயன்படுத்திக் கொள்கின்றன. இவர்கள்தான்இந்தியாவெங்கும் மேன்மக்களை திரட்டி ஏதோ இந்தியாவே போராடுவது போன்ற சித்திரத்தை உருவாக்குகிறார்கள். ஆர்.எஸ்.எஸ், பா.. போன்ற இந்துத்வ இயக்கங்களும் அண்ணாவின் மூலம் கல்லா கட்டலாம் என்று மனப்பால் குடிக்கின்றன. ராம்தேவ், டபுள் ஸ்ரீ ரவி சங்கர் போன்ற கார்ப்பரேட் சாமியார்களும் தங்களது சாம்ராஜ்ஜியத்தின் நலன் கருதி இந்த நாடகத்தில் முக்கிய பாத்திரமாற்ற விழைகிறார்கள். இந்த வகையில் ஏராளமான உள்குத்துகள் நடந்தாலும் அது நமது கவனத்திற்கு வராது. ராசா, கல்மாடி இருக்கும் திகார் சிறையில் அண்ணா அடைக்கப்பட்டதையே ஒரு மாபெரும் அநீதியாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன. திருடர்களுடன் சிலுவையில் அறையப்பட்ட இயேசு நாதர் கூட இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்ததில்லை. கைது என்றால் சிறையில்தான் அடைப்பார்கள். சிறை என்றால் குற்றவாளிகள், மற்றும் குற்றம் சுமத்தப் பட்டோர்தான் இருப்பார்கள். சிறையிலும் கூட தீண்டாமையுடன் கூடிய 5 நட்சத்திர தரத்தை எதிர்பார்க்கும் இவர்கள்தான் ஊழலை எதிர்க்க போகிறார்கள் என்றால் எருமை மாடு கூட வெட்கப்படும்.
இது இவ்வாறிருக்க, சமீப நாட்களாக வெளியாகி வரும் ஊழல் செய்திகள் இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இமாலய ஊழல்களாக இருக்கின்றது. காமென்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஷ் வீட்டு மனை ஒதுக்கீட்டு ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஹசன் அலியின் வருமான வரியேய்ப்பு ஊழல், இஸ்ரோவின் எஸ்-பேன்ட் ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று கரையைத் தாக்கும் கடலின் அலைகளைப் போல மாறி மாறி இந்திய மக்களை ஊழல் செய்திகள் தொடர்ந்து தாக்கி வருகின்றன. இவை பொதுவில் பத்திரிகைகள் வாசிக்கும் படித்த நடுத்தர வர்க்க மக்கட் பிரிவினரிடையே ஓரளவுக்குத் திகைப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இதன் தாக்கமே மேழுபர்த்தி ஊர்வலம், ஊழலுக்கு எதிரான கோசம், செம்மறியாட்டு ஊர்வலமெல்லாம்

தற்போது ஊழலை எதிர்க்க ஆங்கில செய்திச் சேனல்களின் ஸ்டூடியோக்களில் கரம் கோர்த்திருக்கும் நடுத்தரவர்க்க முதலாளித்துவ அறிவுஜீவிகள் ஊழலைப் புரிந்து கொண்டிருக்கும் விதம் அலாதியானது. பேருந்தில் ஒருவன் பிக்பாக்கெட் அடித்தால் அது திருட்டு; அதே அம்பானி அரசாங்கத்திடமிருந்து மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடித்தால் அது தொழில் திறமை; அரசாங்கமே முன்வந்து வரி விலக்குகள் மூலம் மக்கள் வரிப்பணத்தை அம்பானியின் சட்டைப் பாக்கெட்டில் வைத்தால் அது பொருளாதார சீர்திருத்தம்உலகமயமாக்கத்தின் விளைவாய் நாட்டின் வளங்களையும், பொதுத்துறைளையும் தனியார் முதலாளிகள் ஒட்டச் சுரண்டுவதோ திருடுவதோ இவர்களுக்குப் பிரச்சினையாகத் தெரிவதில்லை; அது முறையாக நடந்ததா, சட்டப்படி நடந்ததா என்பது தான் பிரச்சினை. நாட்டு மக்களுக்குச் சொந்தமானதொரு இயற்கை வளமான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையைத் தனியாருக்கு விற்றதைப் பற்றி இந்த அறிவுஜீவிகளுக்குக் கவலையில்லை.  ஏன் அதையே முறையான விதிகளைக் கையாண்டு இராசா செய்யவில்லை என்பது தான் இவர்களின் சத்தியாவேசத்தின் ஜுவாலையைத் தூண்டிவிடுகிறது. சந்தையில் டன் ஒன்றுக்கு 7000 ரூபாய் வரை விலை போகும் இரும்புத் தாதுவை ரெட்டி சகோதரர்கள் வெறும் 27 ரூபாயை அரசுக்குக் கொடுத்து விட்டு அள்ளிச் செல்வது ஊழல்  இல்லையென்கிறார்கள். ஏனெனில் அவரிடம் முறையான ஒப்பந்தமிருக்கிறது சட்டப்பூர்வமான ஒப்புதலமிருக்கிறது. சட்டப்பூர்வமாக நடந்துள்ளது. தனியார்மயப் பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட கடந்த இரண்டு பத்தாண்டுகளில் எண்ணற்ற பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு அடிமாட்டு விலைக்குத் தாரைவார்க்கப் பட்டுள்ளது. இதுவும் போதாதென்று, ஒவ்வொரு வருட பட்ஜெட்டிலும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகைகளாக தனியார் ஏகபோக முதலாளிகளுக்கு அரசு வாரி வழங்கி வருகிறது. தேசத்தின் பொருளாதாரமே பெரும் சூதாட்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் முதற்கொண்டு ஊக பேர வர்த்தகத்தில் இணைக்கப்பட்டு விலைவாசிகள் நம்ப முடியாத அளவுக்குச் செயற்கையாக ஏற்றப்படுகிறது. இவையெதுவும் ஊழல் என்பதாக இவர்களால் புரிந்து கொள்ளப்படவில்லை. வெளிநாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாகக் கணக்குக் காட்டி அரசுக்குப் பட்டை நாமம் போடும் அம்பானி இவர்களைப் பொருத்தவரை ஊழல் செய்தவரல்ல; முன்னுதாரணமான தொழிலதிபர்.
அரசு ஏற்று நடைமுறைமுறைப்படுத்தும் பொருளாதாரக் கொள்கைகளே பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் சாதகமானதாக உள்ளது. தேசத்தின் வளங்களெல்லாம் கூறு போட்டு ஏகபோக முதலாளிகளுக்கு படையிலிட வகை செய்யும் மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகளை அரசு ஏற்றுக் கொண்டு விட்டது. இவ்வாறாக, ஊழல் என்பதை  ஏற்கனவே சட்டப்பூர்வமனதாக ஆக்கிவிட்டனர். இதை செயலுக்குக் கொண்டு வரும் வழிமுறைகளை முறையாக நடத்தாமல்  தேனை வழித்துக் கொடுக்கும் போது புறங்கையைக் கொஞ்சம் நக்கிக் கொள்வதை மட்டும் ஊழல் என்பதாக முதலாளித்துவ ஊடகங்கள் முன்னிறுத்துகின்றனர். ஆக, இந்த ஊழல் எதிர்ப்பு வீரர்கள் நம்மிடம் ஔவையாரின் மொழியில் செய்வன திருந்தச் செய் என்கிறார்கள்.
அண்ணா எதைப் பேசுகிறார் என்பதை மட்டும் வைத்து அவருடைய போராட்டத்தின் சாரத்தைப் புரிந்து கொள்ளக் கூடாது; அவர் எதைப் பேசவில்லை என்பதிலிருந்து தான் இந்தப் போராட்டங்களும் உண்ணாவிரதமும் யாருடைய நலனுக்கானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சவப்பெட்டி முதல் ஸ்பெக்ட்ரம் எந்த ஊழலுக்கு எதிரான எந்த போராட்டத்தையும் முன் வைக்காமல் பொத்தம் பொதுவாக ஊழலுக்கு எதிரான அண்ணாவின் இந்த உண்ணாவிரதம் அரசாங்க செலவில் நடக்கும் ஒரு போலிநாடகமே...
வடிவேலு பாணியில் சொல்லுவேதேன்றல்
நானும் காந்தி,  நானும் காந்தி, நானும் காந்தி.

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!