Thursday, August 4, 2011

இந்த மாற்றத்தையும் வரவேற்றுதானாகவேண்டுமா!...

               
                                           


ஒன்றிரண்டு  திங்களில் எந்த மாற்றத்தையும் நிகழ்த்தமுடியாது என்பது நாங்கள் அறிவோம்...

மாற்றம் ஒன்றே மாறது என்பது உலக நியதி அந்த வகையில் தமிழத்தில் ஏற்ப்பட்டுள்ள மாற்றத்தை நாம் ஏற்று கொள்ளத்தான் வேண்டும்இது மாற்றமா இல்லை ஏமாற்றமா என்பதுதான் நமதே கேள்ளவி

தமிழகத்தில் மாற்றம் வேண்டும் இதுதான்  தேர்தலின்பொது  அதிமுக, கூட்டனி கட்சிகள் -துணையாக நின்ற  ஊடகங்கள் முன்வைத்தது. இந்த கோசம் மக்கள் மத்தியில் பெரிய ஆளவில் சென்று சேர்ந்திருக்கிறது. அதிமுகாவே தன்னை கிள்ளிபார்க்கும் அளவிற்கு (வெற்றி) மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது

தேர்தலின்போது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்:

1.மின்சாரம் இல்லாமல் தமிழகம் இருண்ட தமிழகமாகிவிட்டது
2.விலைவாசி உயர்வு
3.ஊழல் ஊழல் ஊழல்
4.குடும்ப ஆட்சி
5.ஸ்பெக்ட்ரம்
6.சட்டம் ஒழுங்கு சீர்குலைவு
7.தமிழக கஜான கோபாலபுரத்தில் தான் இருக்கிறது
8.அறிவாலயம்தான் தமிழக தலைமை செயலகமாக இருக்கிறது
9.இலவசங்கள் (அதிமுக கூட்டணியில்  இருந்துகொண்டு கம்னிஸ்டுகள் கூவியது)
10.தமிழின துரோகி -இலங்கை பிரச்சனையில் இரட்டைவேடம்.(நாம் தமிழர் கட்சி காதுகிழிய கத்தியது) இப்படி பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன

மேற்சொன்ன அத்தனை தவறுகளையும் செய்த அரசு ஆட்சி செய்யும் தகுதியை இழக்கிறது. மாற்றம் ஏற்பட்டிருக்கிறது ஆனால் நம்முடைய கவலை இதுவல்ல தாய் குரங்கிடமிருந்து காப்பாற்றிய பூமாலையை   பிள்ளை குரங்கின் கையில் பறிகொடுத்து விட்டோமோ என்பதுதான்...

இப்போது நம்மை இரட்சிக்க வந்திருக்கின்ற இந்த அவதாரபுருசர்களின்கடந்தகாலஆட்சியில்…
முக்குமுக்கு சாராயக்கடைதிறந்தது, வேண்டாதவனயும்-ஆட்சியை விமர்சித்தவனயும் கஞ்ச வழக்கில் கைது செய்வது, போலீஸ் துறையை ஏவல்துரைபோல மக்கள் மிது ஏவிவிடுவது, சிறுவாரூர் நிலம் அபகரிப்பு, தருமபுரி மாணவிகளை உயிரோடு எரித்தது, வளர்ப்பு மகனுக்கு நூறு கோடியில் திருமணம், டான்சி நில ஊழல், தோழியின் ஆசைக்காக சபாநாயகரை இறக்கிவிட்டு அந்த இடத்தில் சசிகலாவை உக்கார வைத்து ஒட்டுமொத்த அரசியலையும் அசிங்கபடுத்தியது, மதமாற்ற தடைச்சட்டம், போடா,டெஸ்மா என ஏராளமான மக்கள்விரோத சட்டங்கள், சசிகலா அண்ட் கம்பெனிக்கு தமிழகத்தை தாரைவார்த்து கொடுத்தது, இன்னும் கொடைநாடு மக்களின் பாதையை அபகரித்து விட்டு திருப்பிகொடுக்க மறுப்பது. தமிழகத்திர்க்கான எந்த நல்ல எதிகால திட்டத்தையும் வகுக்காதது, "இவர்களின் தொலைநோக்கு திட்டத்தின் சான்று" -இனிமேல் சென்னையில் புதிய மேம்பாலங்களை அமைக்கபோதில்லை (இயற்க்கை அழிவில் இதுபோன்ற  மேம்பாலங்களால் அதிகம் பாதிப்பு என பிர்ப்போக்கு தனமான காரணங்களை சொன்னது ) எவரையும் மதிக்காத பண்பு என அனுமார்வால்போல அடிக்கிக்கொண்டே போகலாம்.   இவர்களின் ஆட்சிதிரனும் அனைவரும் அறிந்ததே, மக்கள் தூங்கி முழிப்பதற்குள் புதிய புதிய சட்டம் போடுவார், கைதுசெய்வர் மறுநாள் முழிப்பதற்குள் சட்டத்தை மறுபடியும் மாற்றுவார், பட்ஜெட் தாக்கல் செய்ய கோட்டைக்குள் அமைச்சர் கலடிஎடுத்துவைப்பர்- சிணுங்கிய மொபைலை எடுத்தல் அவர் பதவி பறிபோன தகவல் அவருக்கு கேட்க்கும்  எது எப்போது நடக்கும் என்பது நமக்கும் மட்டும்மல்ல அவருக்கும் தெரியாது எல்லாம் சின்னம்மா சொல்றதுதான், நினைக்கிறதுதான்

கழுத விட்டையில் முன்விட்டை வேற பின்விட்டை வேறயா அப்படிதான் தமிழகத்தில்  திமுகவும்-அதிமுகவும்.  

தேர்தலின் பொது ஜெயலலிதா பேசிய வார்த்தைகாளால்    ஜெ அண்ட் கம்பெணி மாறிவிட்டது- கற்பூரத்தில் அடித்து சத்தியம் செயாதகுறையாக நம்பியது அப்பாவி பொது ஜனம். ஆனால் வேதாளம் இன்னும் முருங்க மரத்தில்தான் இருக்கிறது ஆட்சிக்கு வந்தயுடனே ஆரம்பித்துவிட்டார்கள் பழிவாங்கும் நடவடிக்கையை - திமுக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்விக்கு ஆப்பு வைக்கபட்டிருக்கிறது - திமுக அரசுகொண்டுவந்த அத்தனை நல்லதிட்டங்களும், சேலம் சுப்பர்ஸ்பெசாலிட்டி மருத்துவமானை உட்பட அனைத்தும் மூடுவிழ கண்டுவிட்டது. இப்போது திமுக தலைவர்களை பழிவாங்கும் ஆரம்பித்துவிட்டது    மீண்டும் முசோலினி ஆட்சி மலர்ந்துவிட்டது . ஜெயலலிதாவின் அத்தனை முகங்களும் தெரிந்தபின்னும்  மக்கள் இவர்களுக்கு எந்த அடிப்படியில் ஓட்டு போட்டார்கள் என்பதே ஆயிரம் கேள்விகளை எழுப்புகிறது. திமுக எனும்    கொள்ளை கும்மபலை விரட்டவேண்டும் இதுதான் மக்களின் திர்மானம்தவறுக்கான தண்டனையை திமுக அநுபவித்துவருகிறது,   ஆனால் நம் நிலைமை நரிவளையில் இருந்து எடுத்த கையை நாகபாம்பு புத்தில் விட்டகதையாகிவிட்டது .   

இந்த மாற்றம் ஒருபுறமிருக்கட்டும் எதிர்கட்சி தலைவராக விஜயகாந்த் இருப்பதுதான் கொடுமையின் உச்சகட்டம்என்னசெய்தார் இவர் மக்களுக்கு எதைநம்பி இவர்களுக்கு ஒட்டுபோட்டார்கள் மக்கள் - சினிமாவில் கதாநாயகி தொப்பிளில் பம்பரம்விட்டது, முஸ்லிம் என்றாலே திவிரவாதியாக சித்தரித்ததைதவிர வேறென்ன செய்தார். இந்திய சுதந்திரபோராடதில கலந்துகிட்டரா, சமுக/வர்க்க  பிரச்சினைக்காக போராட்டம் நடத்தினாரா, தமிழன் தமிழன்னு படத்தில காது கிழிய கிழிய கத்தினவரு எங்கையாவது இலங்கை பிரச்சினைக்காக போராட்டம் நடத்தியதை நீங்கள் பார்த்ததுண்டா, ஏழைகளின் கல்விக்காக போராட்டம் நடத்தினாரா, பத்தாண்டுகால அரசியல்ல எதாவது நல்ல யேசனைகளை அரசுக்கு சொல்லிருப்பரா அதவிடுங்க மக்களுக்காவது ஏதாவது நல்லதசெஞ்சிருப்பாரா அட ஒருமண்ணும் செய்யாதவன, தெரியாதவன்கிட என்ன மாற்றத்தை எதுர்பார்த்து ஓட்டு போட்டார்கள் என்பதை நினைத்தாலே தலை சுற்றுகிறது.

தேர்தல் ஆணையம் சொன்ன இன்னொருதகவல் தலையில் இடிபோல் இறங்குகிறது  இந்த தேர்தலில் 30 % ஒட்டு புதிய வாக்காளர்கள் போட்டது அதாவது பதினெட்டு வயதில் இருந்து இருபத்தியிரண்டு வயதுள்ள வாக்காளர்கள். நம் அப்பனுக்கும், ஆத்தாளுக்கும் தான் இரட்டைஇலை உதயசுரியனைதவிர வேறு சின்னங்கள் தெரியாது அதனால மாத்தி மாத்தி குத்திகிட்டு இருக்காங்க. ஆனால் இளையதலைமுறைக்கு என்னாயிற்று  எவன் நல்லவன் ,எவன் ஆட்சி திறன் மிக்கவன் என தரம்பிரித்து பார்க்காமல் இன்னும் நாம் திராவிட கட்சிகளின்பின்  வால் பிடித்து நடந்தால் மாற்றம் என்பது வெறும் வார்த்தை அளவில் மடும்தான் இருக்கும் மக்கள் வாழ்க்கை      முறையில் இருக்காது

இன்னும் நாம் விவேகனந்தரைபோலதான் சொல்லிதிரிகிறோம் நூறு இளைஞர்களை எனக்கு காட்டுங்கள் நான் இந்தியாவை மாற்றி  காட்டுகிறேன். நாம் எபோது  நூறு இளைஞர்களை உருவாகிரோமே அப்போதுதான் உண்மையான மாற்றம் ஏற்ப்படும் அதுவரை மாற்றம் என்பது மாற்றம்யென்ற   அளவிலேதான் இருக்கும்.

தமிழகத்திற்கு பிடித்திருக்கும் அரசியல் பேயை விரட்ட உடுக்கை ஏடு.


கடைசியா எங்கத்த சொல்றதுதான் ஞாபகத்துக்கு வருது... 
"உரலுக்குள்ள தலையவிட்டாச்சு எப்ப வேணும்னாலும் உலக்கை விழலாம்"
 


                                                                                                         பாமரன் 
                                                                                          ஆமையடி .மகேஷ்






No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!