Thursday, July 21, 2011

மாண்புமிகு தமிழக முதல்வருக்கு...






மரியாதைக்குரிய தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கங்கள்

இன்னும் கல்வி முழுமையாக எட்டாத, பேருந்தே பாத்திரத, வெளிஉலக வெளிச்ச்மேபடாத குக்கிராமம் ஆமையடியில் இருந்து பாமரன் ஆமையடி மகேஷ் எழுதும் கடிதம்... 

உங்களுக்கும் எனக்கும் எந்தஉறவும் இல்லை. முதலாளி அடிமை என்பதைத்தவிர, நீங்கள் தமிழ்நாட்டின் உரிமையாளர் நாங்கள் உங்கள் அடிமை. ஆனாலும் உங்களுக்கு கடிதம் எழுதவேண்டிய நிர்பந்தம் எனக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது  (பொது கல்வி திட்டம் ) சாமசீர் கல்விக்காக...

தமிழ் நாட்டின் ஓல்ட் ஓணர் பெரியவர். கருணாநிதி (வயதில்) சமச்சீர் கல்வித்திட்டத்தை கொண்டுவந்தார் என்பதற்காக அந்த நல்ல திட்டத்தை(அவர் செய்த ஒரே நல்லதிட்டம்) நீங்கள் அமல்படுத்த மறுப்பது எந்த வகையில் நியாயம்.   

 
உலகின் எல்லா நாடுகளும் கல்வியை போதுடமையக்குகிறது, இலவசமக்குகிறது, தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கிறது. மாறாக  நீங்களோ கல்வியாயை கூறுபோட்டு வியாபாரம் செய்கிறேர்கள் கல்வியாயை காசுக்கு விற்றுவிட்டு, ஆட்டையும், மாட்டையும் இலவசமாக கொடுக்கிறிர்கள். எதாவது அறிவு ஜீவிகள் கேள்வி கேட்டக்க கூடாது   என்பதற்காக லேப்டாப் இலவசமாக தருவதாக சொல்லுகிறேர்கள். ஆடு மாடு மேய்ப்பவனுக்கு லேப்டாப் எதற்கு, அவனுக்கு இலவசமாககல்வி கொடுங்கள் அதைவிட்டு விட்டு ஆடு மாடு மேய்க்க அனுப்பாதிர்கள்,  உங்களை குற்றம் சொல்லவில்லை குலகல்வி முறை கொண்டுவந்த ராஜாஜி பரம்பரையில் வந்தவர்தனே நீங்கள்.

முந்தைய அறுசு கொண்டுவந்த பாட திட்டத்தில் ஓல்ட் ஓணர் மற்றும் அவரின் மகள் புராணம் (சீராபுரானம் இருந்த இடத்தில் கலைஞர் புராணம்!) இருந்ததாக கேள்விப்பட்டோம்.(திரை துறைக்கு இலவசமாக நிலம் கொடுத்துவிட்டு கைமாறாக நடிகைகளை அரைகுறை ஆடையோடு ஆடவிட்டு பாசதலைவனின் பாராட்டு விழா கண்டவர், சமச்சீர் பாடத்திட்டத்தில் தன புகழ் பாடாமல், ஆடாமல் விடமாட்டார் என்பததை நாங்கள் மறுக்கவில்லை)    அதைமட்டும் நீக்கிவிட்டு  தயவு செய்து சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பாண்டிலேயே அமல் படுத்துங்கள்.   

இந்த இடத்தில் ஒன்றை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்...

1947க்கு பிறகு இந்தியா கல்வி துறையில் வெளிவந்த ஒரு முக்கிய ஆவணம் கோத்தாரி கல்வி ஆணைய அறிக்கை (196466).  அதன் முக்கிய சாராம்சம் எல்லோருக்கும் பொதுப் பள்ளி என்கிற கருத்தை இது வலிமையாக முன் வைத்தது. இதன் மூலமே "பல்வேறு வர்க்கமக்களும். குழுமங்களும் ஒன்றிணைவதும் அதன் மூலம் சமத்துவம் சமூக அமைப்பு உருவாவதும் சாத்தியம் ஆகும்'' என அது தெளிவாகக் கூறியது. "அப்படி இல்லாத போது கல்வியே சமூகப் பிரிவினைகளை அதிகரிக்கவும், சமுக/ஜாதிய ஏற்ற தாழ்வுகள்  தொடரவும் காரணமாகி விடும்' என அது எச்சரித்தது

இது ஏழைக் குழந்தைகளுக்கு மட்டுமின்றி வசதி படைத்த முன்னேறிய பிரிவினரின் குழந்தைகளுக்கும் தீங்கானது. ஏனெனில் இவ்வாறு தமது குழந்தைகளைப் பிரித்து வைப்பதன் மூலம் முன்னேறிய பிரிவைச் சேர்ந்த பெற்றோர்கள் தமது பிள்ளைகளை ஏழைக் குழந்தைகளின் வாழ்வையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதிலிருந்தும் எதார்த்த வாழ்வைப் புரிந்து கொள்வதிலிருந்தும் தடுக்கின்றனர்.இதன் மூலம் தமது சொந்தப் பிள்ளைகளின் கல்வியை முதுமையற்றதாகவும், சோகை பிடித்ததாகவும் ஆக்கி விடுகின்றனர்'' என விளக்கிய கோத்தாரி ஆணையம் நாட்டு வளர்ச்சிக்கும் சமூக ஒற்றுமைக்குமான கருவியாக நமது கல்வி அமைய வேண்டுமானால் பொதுப் பள்ளி முறையை(சமச்சீர் கல்வியை) நோக்கி நகர வேண்டும் என முத்தாய்ப்பாக அறிவுறுத்தியது. கோத்தாரி கல்வி ஆணைய அறிக்கை உங்களுக்கு நன்றாக தெரியும், என்றாலும் தேர்தல் உழைப்பின் களைப்பில் நீங்கள் மறந்திருப்பிர்கள்.  நினைவு படுத்துவது எங்கள் கடமை. 

இன்னொன்றையும் உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன் மற்றமாநிலங்களில் பொதுக் கல்வி இல்லாமற் போனாலும் பொதுப் பாடத் திட்டமாவது நடைமுறையிலிருக்கிறது தமிழகத்தில் அதுவும்மில்லை. தமிழையே படிக்காமல்கூட நம் மாநிலத்தில் ஒருவர் உயர் படிப்பு வரை படித்துவிட முடியும் என்கிற அவல நிலையும் இங்கு மட்டுமே இருக்கிறது.  பொதுப் பாடத் திட்டம், தமிழைக் கட்டாயப் பாடமாக்குவது, தாய்மொழிக் கல்வி ஆகியவற்றை கட்டயபடுத்துங்கள், இன்றைக்கு  சீனா  போன்ற நாடுகள் தாய்மொழி கல்வியை மட்டுமே இலவசமாக கொடுப்பதாலேயே  இவ்வளவு மக்கள் தொகை இருந்தும் உலக  மென்பொருள் சந்தையில் அந்த நாடுகள் முதல்  இடத்தில் இருக்கிறது.  

உங்களுக்கும் திரு.கருனாநி(நீ)திக்கும் இடையே உள்ள பங்காளி சண்டையில் (தமிழ் நாடு யாருக்கு சொந்தம் ) அப்பாவி பாமரனின் கல்வியில் மண்ணை அள்ளி போட்டுவிடாதிர்கள்.   இன்று நீங்கள் தனி மேஜரட்டியில் ஆட்சி அமைத்திருக்கலாம், எதிர்கட்சி தலைவர் உங்கள் திரையுலக நண்பராக இருக்கலாம், ஆவூனா போராட்டம் நடத்துற வலது, இடது கம்னிஸ்டுகள் உங்கள் சேலைக்குள் இருக்கலாம். ஆனால் காலம் மாறும், கட்சியும் மாறும், காட்சியும், என்பதை  நினைவு படுத்தவேண்டியது என் கடமை.    
பள்ளிகூடங்கள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டுமாதம் கழிந்தபின்னும்  மாணவர்களுக்கு இன்னும் பாட புத்தகங்கள் வழங்கப்படவில்லை என்பதைவிட அதற்க்கான நடவடிக்கைகூட நீங்கள் எடுக்காதது உங்களுக்கு பாமரனின் கல்வியைவிட அரசியல் பழிவாங்கும் உணர்ச்சியே அதிகமாக இருக்கிறதே என்று என்ன தோன்றுகிறது.
சமச்சீர் கல்விக்கு எதிரான அணுகு முறையிலிருந்து   ஐந்து ஆண்டுகாலம்  கொடைநாட்டில் ஓய்வு எடுத்தபின்னும்  உங்களின் பழைய அரசியல் முகம் மாறவேயில்லை என்பதை  தெளிவாக காட்டுகிறது



சமச்சீர் கல்வியை கொண்டுவரவே இவ்வளவு தயங்கும் யோசிக்கும் நீங்களா  (தமிழக அரசுகள் ) இலவச கல்வியைதரபோகிறேர்கள்.   நான் உங்களிடத்தில் கேட்ப்பதல்லம்  இந்தநாட்டில் பணம் படைத்தவனும், சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கிறவனுக்கு கிடைக்கிற அதே கால்வியாயை பாமரனுக்கும், சமுகத்தின் அடிதட்டின் வர்கத்தினர்க்கும் இலவசமாக கிடைக்க வழிவகை செய்யுங்கள்.

 இப்போதே மேல் முறையீடு செய்யும் திட்டத்தை கைவிடுங்கள். சோ, பார்த்தசாரதி, ராமகோபாலன் போன்றவர்களின் அறிவுரைகளை புறம்தள்ளிவிட்டு பாமரனுக்கு பயன்படுகிற சமச்சீர் கல்வித்திட்டத்தை உடனே அமல் படுத்துங்கள். 

பணம்/பிறப்பு எற்றதாள்வுகாளை புறம்தள்ளி எல்லோருக்கும் சமச்சீர்கல்வி இலவசமாககிடைக்க உதவிடுங்கள்...
                                        

                                                                                             நன்றியுடன்

                                                                           பாமரன் ஆமையடி மகேஷ்
                        


No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!