Monday, July 11, 2011

நல்ல தீர்ப்பை வழங்குமா நிதிமன்றம்?



பாபர் மசூதி பிரச்சினயில் 500ஆண்டுகால இந்து-முஸ்லிம்  போராட்டமும் 60 ஆண்டுகால நீதிமன்றவிசாரணையும்…

500 ஆண்டுகளுக்கு முன்பு அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது. அன்று தொடங்கிய பிரச்சினை இப்போது 21-ம் நூற்றாண்டிலும் நீடித்து கொண்டிருக்கிறது. 
ராமாயண கதையில் ராமன் அயோத்தியில் பிறந்ததாக கூறப்பட்டுள்ளது. அயோத்தியில் 12-ம் நூற்றாண்டில் ராமர் கோவில் இருந்ததாக பழங்கால இந்து இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. சீன துறவி ஹீயன் தசாங் 7-ம் நூற்றாண்டில் அயோத்தியில் ஏராளமான கோவில்கள் இருந்ததாக கூறியுள்ளார். 500 ஆண்டுகளுக்கு முன்பு அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது. அன்று தொடங்கிய பிரச்சினை இப்போது 21-ம் நூற்றாண்டிலும் நீடித்து கொண்டிருக்கிறது. 
ஒவ்வொரு ஆண்டிலும் நடந்த முக்கிய நிகழ்வுகள் வருமாறு:-
 
1527- பாபர் இந்தியா மீது படையெடுத்தார். பல இந்து மன்னர்களை தோற்கடித்து தனது சாம்ராஜ்ஜியத்தை நிறுவினார்.
 
1528- பாபரின் தளபதி மிர்பாகி அயோத்தியில் பாபர் மசூதி கட்டினார். ராமர் கோவில் இருந்த இடத்தில் தான் பாபர் மசூதி கட்டப்பட்டதாக இந்துக்கள் புகார் கூறினார்கள். அதில் இருந்து பிரச்சினை தொடங்கியது.
 
1853- பாபர் மசூதியை கைப்பற்ற இந்துக்கள் முயன்றனர். இதனால் முதல் கலவரம் ஏற்பட்டது. ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
 
1859- ஆங்கிலேயர் ஆட்சியில் இங்கு முஸ்லிம்களும், இந்துக்களும் தனித் தனியாக வழிபாடு நடத்த இடங்களை ஏற்படுத்தி கொடுத்தனர்.
 
1885- மகந்த் ரகுவர் தாஸ் என்பவர் இந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்கும்படி வழக்கு தொடர்ந்தார்.
 
1886- இந்துக்கள் சொந்தமான இடத்தில் மசூதி கட்டப்பட்டு இருப்பதாக பைசா பாத் மாவட்ட கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு கூறினார்.
 
1949- மர்ம நபர்கள் பாபர் மசூதிக்குள், ராமர் சிலையை கொண்டுவந்து வைத்தனர். இந்த விவகாரம் கோர்ட்டுக்கு சென்றது. இதனால் பிரச்சினைக்குரிய இடம் பூட்டப்பட்டது.
 
1950- பிரச்சினைக்குரிய இடத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பைசாபாத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
 
1959- அந்த இடத்தில் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று இந்துக்கள் வழக்கு தொடர்ந்தனர்.
 
1961- பிரச்சினைக்குரிய இடம் தங்களுக்கே சொந்தம் என்று சன்னி முஸ்லிம் வக்பு வாரியம் வழக்கு தொடர்ந்தது.
 
1984- சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர்கோவில் கட்டுவதற்காக விசுவ இந்து பரிஷத் இயக்கத்தை தொடங்கப்பட்டது. பாரதீய ஜனதா தலைவர் அத்வானி இதன் பிரசார இயக்கத்துக்கு தலைமை தாங்கினார்.
 
1986- பாபர் மசூதியில் பூட்டப்பட்டுள்ள கதவை திறந்து இந்துக்களும் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பைசாபாத் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
 
1989- ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது சர்ச்சைக்குரிய இடம் அல்லாத இடத்தில் கோவில் கட்ட பூமிபூஜை நடத்த அனுமதித்தார். அயோத்தி வழக்கு ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.
 
1990 செப்- பாரதீய ஜனதா தலைவர் அத்வானி சோமநாதபுரத்தில் இருந்து அயோத்திக்கு ரதயாத்திரை தொடங்கினார்.
 
1990-நவ பீகாரில் அத்வானி ரதயாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார். அப்போது இருந்த வி.பி.சிங் அரசுக்கு பாரதீய ஜனதா அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது. 
 
1992 டிச.6- பாபர் மசூதி இடிக்கப்பட்டு தற்காலிக ராமர் கோவில் கூடாரமாக கட்டப்பட்டு இருந்தது. இது சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கில் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
 
2003 மே- இந்த இடத்தில் இந்து கோவில் இருந்ததா? என்பது பற்றி அகழ்வாராய்ச்சி செய்ய அலகாபாத் ஐகோர்ட்டு உத்தர விட்டது.
 
2003 ஆக.22- அகழ் வாராய்ச்சி அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 10-ம் நூற்றண்டு கட்டிடம் அந்த இடத்தில் இருந்ததாக கூறப் பட்டிருந்தது.
 
2003 ஆக. 31- அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் அகழ்வாராய்ச்சி அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
 
2010 ஜூலை- சர்ச்சைக் குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது பற்றி 60 ஆண்டாக அலகாபாத் ஐகோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணை முடிந்தது.
 
       ஒரு வழிய இன்று(30.09.10) தீர்ப்புவருகிறது யாருக்கு  பாதகமாக தீர்ப்பு வந்தாலும் கலவரம் ஏற்ப்படலாம் என்ற அச்சத்தில் நலம்விரும்மிகளும் , இதைவைத்தே அரசியல் செய்யலாம் என்ற நோக்கில் காய்நகர்த்தும் சமுக விரோதிகளும் காத்திருக்க. இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி  ஒரு நிலத்தை ஒரு தலைமுறைக்கு மேலாக ஒரு குடும்பம் அல்லது ஒரு சமுகம் நிர்வகித்து வந்தால் அவர்களே அதன் உரிமையாளர்கள் அப்படி பார்த்தல் முஸ்லிம் மக்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எது எப்படியோ யாரையும் பாதிக்காத, உலகமே ஊற்று பார்கின்ற இந்த விவகாரத்தில்   நல்ல தீர்ப்பை வழங்குமா நிதிமன்றம்?

September 30, 2010

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!