Monday, July 11, 2011

என்று தனியும் முஸ்லிம்களின் பாபர் மசூதி தாகம்...

                       



 அயோத்தி பாபர் மசூதி, ராமர் கோயில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதற்காக கடந்த 60 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கின் தீர்ப்பு   30.9.2010 அன்று அலகாபாத் உயர்நீதிமன்ற மூன்று நீதிபதிகளால் தீர்ப்பு   அளிக்கப் பட்டுள்ளது.
தீர்ப்பினை மூன்று நீதிபதிகளும் இணைந்து கருத்திணக்கத்தோடு ஒரே தீர்ப்பாக வழங்கவில்லை. மூவரும் தனித்தனியே எழுதியுள்ளனர். இந்த தீர்ப்பால் மிண்டும் தலை குனிந்து நிற்கிறது இந்திய நீதீ. வழக்கம்போல ஒரு கண்ணில் பாலும் இன்னொரு கண்ணில் கள்ளிபாலும் ஊற்றிவிட்டது இந்திய ஜனநாயக இந்து அரசு. “தீர்ப்பின் சாராம்சம்” இந்தியா இந்துக்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்பதை மிண்டும் தெளிவுபடுத்திருக்கிறது.            

இத்தீர்ப்பின் பல்வேறு அம்சங்கள், சட்ட அடிப்படையில் அமைவதைவிட ‘நம்பிக்கை’ நீண்ட காலமாக இருந்து வந்த காரணம் என்பது போன்றவையின் அடிப்படையில்  தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது! அதுவும் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு என்பது மிகவும் ஆபத்தானது! நாளைக்கே... பாராளுமன்றம் இருக்கின்ற இடத்தில் தான் பார்வதி பிறந்தங்கன்னு  வழக்கு போட்ட என்ன தீர்ப்பை சொல்லும் இந்தியஅரசு? “நம்பிக்கை அடிப்படையில்’’ என்றால், யாரும் எதற்கும் ஆதாரமோ, சான்றோ, சட்ட விதிகளையோ தேடித்தேடி வழக்கின் தீர்ப்பை அமைக்க முடியாது   பெருகும் ஆபத்தான முறைக்கு அது வழிவகுக்கும் அபாயம் உள்ளது.அண்ணன் ராவணன் இந்த இடத்தில்தான் சீதையை சிறை பிடிச்சிவச்சிருந்தன்ன்னு இலங்கையிலபோயி உங்க நம்பிக்கை அடிப்படியில கேளுங்க பார்ப்போம் ராஜபக்ஷே ஓட்ட நரிக்கிருவன்.

அதுமட்டுமல்ல ராமன் என்பவர் வரலாற்று புராண கதையான ராமாயண கதையின் நாயகனே தவிர அவர் பிறந்தர்க்கான எந்த ஆதாரங்ககும் இல்லை இன்னும் சொல்லப்போனால் வால்மீகி , கம்பன் போன்றவர்களின் கற்பனை நாயகன்தான் திரு. ராமன்  இவற்றையெல்லாம் தாண்டி  ராமாயணம் உண்மைதான் ராமரும் கடவுள் என்றே வைத்துகொள்ளோம். இராமாயணமே 57 இராமாயணங்கள் உள்ள நிலையில், எந்த ராமாயணத்தை ஆதாரமாக வைத்து தீர்ப்பு வழங்கினார்கள் நீதிபதிகள். ராமர் குறிப்பிட்ட அந்த இடத்தில்தான் பிறந்தார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது. கௌசல்யாவுக்கு (ராமன் அம்மாவுக்கு ) பிரசவம் பார்த்த அந்த மருத்துவச்சிக்கு மட்டுமே தெரிந்திருக்கும் . அப்படியானால் அந்த மருத்துவச்சியை குறுக்கு விசாரணை செய்தார்களா நீதிபதிகள். வால்மிகிக்கே தெரியவில்லை அவளின் பெயர் அப்படியிறுக்க எதை வைத்து தீர்ப்பு வழங்கினார்கள் நிதிபதிகள்.  ராமன் பிறந்த இடம், பிரச்சினைக்குரிய அந்த இடம்தான் என்று சொல்வது   நம்பிக்கை அடிப்படையில்தான்   தவிர சட்ட சான்றுகள் அடிப்படையில் இல்லை.  புராண கால கற்பனைகளுக்கும், இதிகாச கால நம்பிக்கைகளுக்கும் மதப் பூச்சு பூசப்பட்டதாலேயே வெறும் நம்பிக்கை அடிப்படையில் ராமர் அங்குதான் பிறந்தார் என்றெல்லாம் இதுபோன்ற தீர்ப்புகளில் எழுதப்படுவது, நீதிமன்றங்களை   சட்ட கோர்ட்டுகள் (Courts of Law) என்பதற்குப் பதிலாக, நம்பிக்கை கோர்ட்டுகளாக (Courts of belief and Faith) ஆக்குவதாக அமைந்துள்ளது. இதன் விளைவு நிகழ்காலத்தில் மட்டுமல்ல, வருங்காலத்திலும் நியாய விரோத தீர்ப்புகள், புற்றீசல்கள்போல் கிளம்ப வழிவகுத்து விடும்.


பாபர் மசூதி இடம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானதா இல்லையா என்பதுதான் பிரச்சனையின் அடிப்படை.  அந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் பெரிய பொறுப்பிலுள்ள நீதிமன்றம், அதைச் சொத்து ஆதாரங்களின் அடிப்படையிலும் அனுபவப் பாத்தியதையின் அடிப்படையிலும் அணுகாமல், ஒரு சொத்து யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்கச் சட்டம் கூறுகிற வழிமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு, தீர்ப்பு வழங்கியிருப்பது முட்டாள் தனமானது

450 ஆண்டுகாலமாக அயோத்தியில் பாபர் மசூதி இருந்ததும், அங்கே முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்ததும், 1949இல் அங்கே வலுக்கட்டாயமாக ராமர் சிலைகளை உள்ளே நிறுவி, அதைக் காரணம் காட்டி மசூதியை இழுத்து மூடியதும், 1992இல் இந்துத்துவச் சக்திகள் பாபர் மசூதியை இடித்துத் தகர்த்ததும் நம் கண்முன்னே நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள்.  ஆனால், ராமர் அயோத்தியில்தான் பிறந்தார் என்பதற்கான வரலாற்று ஆதாரமோ ஆவணமோ எதுவும் இல்லை என்பதும் ராமர் ஒரு புராண நாயகன்தான் என்பதும் ஒரு சாதாரண பாமரனுக்குக்கூடப் புரியும்.  இது இரண்டு நீதிபதிகளுக்குப் புரியாமல் போனது வியப்பளிக்கிறது.  மேற்படி உண்மைகளை மூன்றாவது நீதிபதி தனது தீர்ப்பில் சொல்லியும், பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு என்கிற அடிப்படையில் அது மூடி மறைக்கப்படுகிறது. தீர்ப்பு வழங்கும்போது பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்து ஏற்றுக்கொள்ளப்படும் என்னும் முறை இருப்பது தெரிந்தே இரண்டு இந்து ,ஒரு முஸ்லிம் நிதிபதியை தெர்தேடுத்ததே முதல் ஜனநாயகமீறல். இங்கேயே முஸ்லிம்கள் தோற்றுவிட்டரர்கள் பிறகு எதற்கு விசாரனை தீர்பெல்லாம்.   

அயோத்தி நில வழக்கை ஆதாரங்களின் அடிப்படையில் அணுகி தீர்ப்பு வழங்காமல், 60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்.சும், அத்வானியும், மோடியும், சோவும் சொன்னதுதான் தீர்ப்பாக வந்துள்ளது.
 
பாபர் மசூதியை இடித்துத் தகர்த்த அத்வானி உள்ளிட்ட இந்துத்துவச் சக்திகளின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களைச் சுதந்திரமாக உலவவிட்டுள்ள நீதிமன்றமும் சட்டமும், இப்போது மசூதியையும் கபளீகரம் செய்து இந்துத்துவச் சக்திகளிடம் ஒப்படைக்கத் துணிந்திருப்பது மிகப்பெரும் மோசடியாகும். ஏற்கனவே நம்பிக்கை இழுந்து விரக்தியில் வாழும் இசுலாமிய மக்களுக்கு இது மேலும் கசப்பான அனுபவமாக அமைந்து விட்டது. அதுமட்டுமல்லாது தீர்ப்பில் இரண்டு பகுதி நிலம் இந்துக்களுக்கு ஒரு பகுதியே இசுலாமியர்களுக்கு வழங்கபட்டிருக்கிறது  கம்பு எடுத்தவனெல்லாம் ரவுடி என்பதுபோல வழக்கு போட்டவனுக்கெல்லாம் நிலம் பகிர்ந்து வழங்கப்பட்டது மிக பெரிய மோசடித்தனம்   அப்படி என்றால் 10 பேர் வழக்கு போட்டு இருந்தால் 10 பேருக்கும் சரிசமமாக அந்த நிலத்தை பங்கு போட்டு கொள்ள தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்குமா?. இந்த வழக்கில் நீதிமன்ற மரபே மீறப்பட்டு இருக்கிறது. இதில் இன்னும் மிக பெரிய கொடுமை பாபர் மசூதியை இடித்து தள்ளிய அத்வானி உட்பட எந்த இந்து வெறியர்களை பற்றியும் தீர்ப்பில் ஒரு வரிகூட சொல்லாதது மிக பெரிய மோசடித்தனம். இப்படி எல்லா வகையிலும் முஸ்லிம்களுக்கு துரோகத்தை செய்துவிட்டது இந்திய பார்பன அரசு...

இவ்வளவு பெரிய கொடுமை இசுலாமியர்களுக்கு நடந்தபின்னும் இந்தய "மாமா" அரசியல் வாதிகள் எல்லாம் சும்மா இருப்பது கொடுமையின் உச்சம்.

இன்னும் முஸ்லிகள் மேல் முறையீடு செய்யலாம் ஆனால் தீர்ப்பு இப்படிதான் இருக்க போகிறது. இந்த கேவலமான தீர்ப்பு வருவதற்கே அறுபது ஆண்டுகள் எடுத்துகிட்ட நீதிமன்றங்கள் இன்னும் மேல்முறையீடு தீர்ப்புகள் வருவதற்குள் நம்முள் பலர் உயிரோடுயிருக்க வாய்ப்பு இல்லை ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இந்த தீர்ப்பின் பின்பமாகதான் அந்த தீர்ப்பு இருக்கும். ராமன் ஆண்டா என்ன அண்ணன் ராவணன் ஆண்டா என்ன, பாரதிய ஜனதா ஆண்ட என்ன காங்கிரஸ் ஆண்டா என்ன இதிய இந்து நாடுதான் ஜனநாயக நாடு இல்லை. வாழ்க ஜனநாயகம் வாழ்க திரு. ராமர்

                                       "என்று தனியும் முஸ்லிம்களின் பாபர் மசூதி தாகம்"  
                                                                 ஆமையடி அ. மகேஷ்

October 04, 2010

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!