Monday, July 11, 2011

இந்திய அரசிடம் நான் கேட்க்க நினைக்கும் கேள்விகள்-ஆமையடி அ.மகேஷ்








ஒரு லட்சம் தமிழர்களை கொன்று குவித்ததுவிட்டு இரண்டு லட்சம் தமிழர்களை வதை முகாம்களில் பட்டினியால் சாகவிட்டு ஐந்து லட்சம் மக்களை அகதிகளாய் வெளிநாடுகளுக்கு அடித்து துரத்திவிட்டு இன்று இந்தியாவரும் கொலைகாரன் ராஜபக்சேவுக்கு சிவப்புகம்பள வரவேற்ப்பு கொடுக்கிறது என் நாடு.

உலக நாடுகளெல்லாம் “இலங்கை” குற்றவாளி என்கிறது ஆனால் இந்தியா, இந்திய கூத்தாடிகளை (நடிகர்களை) அனுப்பி இலங்கை ஒரு சுதந்திரநாடு பாதுகாப்பான நாடு என உலக நாடுகளை நம்பவைக்கிறது.


உலகநாடுகள் இலங்கை அரசை தடைவிதித்து போற்குற்றவாளியாக அறிவிக்க ஓன்று கூடுகிறது. இந்தியாவோ விடுதலைபுலிகள்தான் தீவிரவாத அமைப்பெனகூறி  அதன்மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்திருக்கிறது.   
போர் முடிந்து ஓரண்டகியும் இன்னும் தமிழர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கவில்லை அப்படியென்றால் இந்தியஅரசு கொடுத்த இரண்டாயிரம்கோடி பணம் எங்கே போனது?

ஒன்று பட்ட இலங்கையில் தமிழர்களும் சிங்களர்களுக்கு சமமாக வாழ இந்தியா, வழிவகை செய்யும் என சொல்லி ஓரண்டகியும் இன்னும் ஒரு துரும்பளவுகூட முயற்ச்சி செய்யாதது ஏன்?

இந்தியாவே கடனில் தத்தளிக்கும்போது வட்டியில்லாமல் இலங்கைக்கு இரண்டாயிரம்கோடி கடன் கொடுக்கவேண்டிய அவசியமென்ன?


இன்னும் தமிழர் பகுதியில் தோண்ட தோண்ட பினகுவியல் மலையாய் குவிகிறதே இதனை பார்த்தபின்னும் இனவெறியன் ராஜபக்சேவை  இந்திய பாதுகப்பத்தின் நோக்கம் என்ன?


யுத்தம் முடிந்து ஓரண்டகியும் இன்னும் சர்வதேச ஊடகங்களை, சமாதான அமைப்புகளை, தொண்டு நிறுவனங்களை தமிழர் பகுதியில் அனுமதிக்காததை இந்திய கண்டிக்காதது ஏன்?

தமிழர் பகுதியை சீர் செய்ய பணம் இல்லை என்கிறது இலங்கை.  அப்படியானால் போரில் நவினவகை ஆயுதங்களை உலகமுழுவதும் வாங்கியதற்கு யார் பணம் கொடுத்தார்?


இறுதிக்கட்ட போரின் போது  போர்க்குற்றங்கள் நடைபெற்றது. சரணடைந்த புலிகளை சுட்டு கொல்ல சொன்னார் ராஜபக்சே என ஒப்புக்கொண்டுள்ளார் முன்னாள் ராணுவத்தலைவர் சரத் பொன்சேகா இதற்க்கு என்ன விளக்கம் சொல்லபோகிறது இந்தியா?
போர் குற்றங்கள் குறித்த உண்மையை வெளியே சொன்னால் முன்னாள் ராணுவத்தலைவர் சரத் பொன்சேகா தூக்கில் போடுவோம்’’ என்றும் மிரட்டல் விடுத்துள்ளார் இலங்கை  ராணுவ செயலாளரும், அதிபர் ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபையா ராஜபக்சே இதற்க்கு என்ன காரனம் சொல்லபோகிறது இந்தியா?


உலகமுழுவதும் உள்ளவர்களுக்கு இந்தியாவில் மருத்துவம் செய்யப்படும்போது  அன்னை பர்வதியம்மளுக்கு மட்டும் மருத்துவ வசதி மறுக்கபட்டப்து ஏன்?
எழுகோடி (பதவி வெறிபிடித்த அரசியல் வாதிகளை தவிர) தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல். இனவெறியன் ராஜபக்சேவை இந்தியாவிற்கு வரவைத்து வர்த்தகம் பேசுவதன் நோக்கமென்ன?

இப்படி பலலட்சம் கேள்விகளை இந்தியரசிடம் யார்கேட்டாலும் அவர்களிடம் இருந்து வரும் ஒரே பதில் ராஜபக்சே வாழ்க.



ஒரு இந்தியனாக இந்திய அரசிடம் நான் கேட்க்க நினைக்கும் கேள்விகள்:

1.தமிழர்கள் உங்கள் எதிரியாகிபோன கரணம் என்ன?
2.அமரர் ராஜீவ் காந்தி கொலைக்கு யார் கரணம்?
3.இந்திய இறையாண்மை என்றல் என்ன?
ஈழம் மலரும் என்ற நம்பிக்கையில் - ஆமையடி அ.மகேஷ்

June 08, 2010 

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!