Sunday, October 30, 2011

ஈழ விடுதலை...



பெண்
விடுதலையும்
மண்
விடுதலையும்
ஒரே களத்தில்...
ஈழ விடுதலை
  
 

இலக்கு...






எங்களின்
இலக்கு எதிரியல்ல
விடுதலை

ஆயுதம்மல்ல...


Add caption






இது
ஆயுதம்மல்ல
எங்களின்
விடுதலை

தடையைத்தகர்ப்போம்

போராட்டத்தை
தீவிரபடுத்துவோம்
இன்னும் அதிகமாய்
ஆயுதங்களை எங்கட்கு
தாருங்கள் - முதுமை
எங்களுக்கு தடையல்ல

விடுதலையும்
சுயமரியாதையுமே
உயிர் மூச்சு -முதுமை
எங்களுக்கு தடையல்ல 

தொடர்ந்து வா...









தோழா
வீழ்ந்து விடும்
தூரத்தில் எதிரியும்
தொட்டு விடும்
தூரத்தில் வெற்றியும்
இருக்கிறது
தொடர்ந்து வா






ஓவியம்: ஓவியர் புகழேந்தி

ஏக்கம்


மகளை
களத்திலையும்
மகனை ஆயுதம்
சேகரிக்கவும் அனுப்பிவிட்டு
தலைவரின் வருகைக்காய்
காத்திருக்கிறேன்
சுதந்திர ஈழத்தில்
என் உயிர் போகும்
ஏக்கத்தில்.  

Wednesday, October 26, 2011

தீபாவளி...





























எவன்செத்தாலும்
குடி கூத்து
நரகாசுரன் காலத்திலேயே
ஆரம்பித்துவிட்டது
தமிழனின் பண்பாடு|!

தமிழர்களை
அறிவளியக்கவே
ஏழாம் அறிவுபோன்ற
படங்கள்!!

திதி நாளை
துக்கநாளாக கடைபிடிக்கும்
தமிழன்
நரகாசுரன் திதியைமட்டும்
ஊத்தி கொண்டாடும்
வினோதம்!!!

நாம் வெடிக்கும்
ஒவ்வொரு வெடியும்
ஒரு குழந்தை தொழிலாளியை
உருவாக்கி- அவன்
வறுமையும்  வலியும்தான்
நாம் பற்றவைக்கும்போது
வேடித்துசிதருகிறது

இருக்கிறவன்
தின்று தூங்குகிறான்
இல்லாதவன்
ஏங்கி சாகிறான்

எப்போது புதுஆடை
என்ற ஏக்கத்தில்
அழுது தூங்கி போகும்
குழந்தைகளுக்கு நாம்
சொல்லுவோம்
ஒருநாள் நரகாசுரனும்
வதம் செய்வான்
அதுதான் நம் தீபாவளி...
 
 


Monday, October 17, 2011

பசித்தவனுக்கு உணவு கொடுப்போம்...



வற்றிப்போன
காம்புகளை
எத்தனைமுறை
கவ்விழுத்திருக்கும்
அந்த பிஞ்சு உதடுகள்

கடைசிசொட்டு
ரத்தம்வரை
பிழிந்து கொடுத்துவிட்டு
காய்ந்து கிடக்கும்
இவளுக்காவது
ஏதாவது கொடுங்கள்

குழி மூடும்வரையாவது
இவள் உயிர்வாழவேண்டும்
இல்லையேல்  
பிணம் தின்னி
கழுகள்...
குழந்தையும்
இவளையும்
தின்று தன்
பசிபோக்கொள்ளும்...
  
"தயவுசெய்து உணவு பொருள்களை வீனாக்காதிர்கள்"

Sunday, October 16, 2011

நன்றி...





இன்னும் நான்
உயிரோடு இருப்பதை
வருடத்திற்கு ஒருமுறை
நினைவு படுத்துகிற
இந்த பிறந்தநாளுக்கு - என்னோடு
வாழ்த்துக்குள் பகிர்ந்துகொண்ட
உங்கள் அனைவருக்கும் என்
நன்றிகள் ....

Saturday, October 15, 2011

உயிரோடு இருக்கிறேன்...




ஒவ்வொரு
பிறந்தநாளும்
ஞாபகபடுத்துகிறது
நான் இன்னும்
உயிரோடுயருப்பதை...

சினிமா





நம்பிக்கையும்
முயற்சியையும்
சேமித்து
வைத்துருக்கிறேன் -அது 
சினிமாவாகும் என்ற
நம்பிக்கையில்....

Tuesday, October 11, 2011

நண்பன்






















நண்பா
ஓய்வாக இருந்தால்
என் கல்லறைக்கு வா

இங்கிருக்கும் அத்தனை
பூக்களுக்கும்
உன்பெயரும் என்பெயரும்
பரிட்ச்சயம்...

கண்ணில் ஏதாவது
குயில் தென்பட்டால்
கொஞ்சம் செவிமடுத்து கேள்
நிச்சயமாய்
உன்னையும் என்னையும்தான்- அது
பாடிதிறியும்...
 
உணர்ச்சிவசப்பட்டு
கல்லறையை மட்டும்
திறந்துவிடாதே
இன்னும் அப்படியே
இருக்கிறது- நீ
என் நெஞ்சில் குத்திய
கத்தி!

Saturday, October 8, 2011

நினைவுகள்...



இன்னும்
எத்தைமுறை
நனையவேண்டும்
உன் நினைவுகள்
கறைய...

Friday, October 7, 2011

முதல் கவிதை














காதலும்
தனிமையும்
கவிதையின்
ஊற்று -  இரண்டும்
இருந்தும் எனக்குள்
கவிதைவரவில்லை

எதுகையும் மோனையும்
கவிதையின்
அழகு...
எழுதவே தெரியாதஎனக்கு
இந்த இரண்டும் தெரியாதது
ஆச்சரியமில்லை.

மெய்யெழுத்து
உயிரெழுத்து
உயிர்மெய்யெழுத்து
ஆயுதழுத்து
வல்லினம்
மெல்லினம்
இடையினம்
டிவி தொடர்போல...
நீண்டு கொண்டே போகிரதுதமிழ்
எனக்குள் வரவில்லை கவிதையாய்

எடுத்த பேனாவை
கவிதை எழுதாமல்-
வைப்பதா?

கிறுக்கி தள்ளினேன்.

இறுதியாய்
எழுதி எழுதி
குவிக்கப்பட்ட
காகித குப்பைக்குள்
கண்ணைமூடி கைவிட்டேன்
கையில் சிக்கியதில்
எழுதியிருந்தது


அம்மா அப்பா.


Thursday, October 6, 2011

பிரிவு...


என்
தலையணை
தண்ணிரில்
நனைந்து கிடக்கிறது

நீ இருந்தபோது
முத்தத்தில்...

நீ பிரிந்தபோது
கண்ணீரில்
...

அம்மா...



அவள் பார்க்கும் போது
அவள் சிரிக்கும் போது
அவள் முத்தமிடும் போது
அவள் தாலாட்டும் போது
அவள் அணைக்கும் போது
சொல்ல நினைக்கிறேன்....
ஆனால் முடியவில்லை
இறைவா
எனக்கு சீக்கிரம் பேசும்-சக்தியை கொடு...
அவளை அம்மா என்று அழைக்க....

Tuesday, October 4, 2011

நண்பன்...


என்னை
ஏசுவாக நினைத்தல்
சிலுவையில் அரையுங்கள்...

புத்தனாக நினைத்தால்
நிர்வானபடுத்துங்கள்...

மனிதனாக நினைத்தால்
நண்பநாக்குங்கள்...

ஈரம்







எத்தனைமுறை
துடைத்தாலும்
காயவில்லை
உன்
முத்தத்தின்
ஈரம் 
 

Sunday, October 2, 2011

முரண்...


நீ
நீயாகவும்
நான்
நானாகவும் இருந்தபோது
நண்பர்களாய் இருந்தோம்.

நீ
நானாகவும்
நான்
நீயாகவும் இருந்தபோது
காதலர்களாய் இருந்தோம்.

இப்போதும்
நீ நீயாகவும்
நான் நானாகவும் இருக்கிறோம்
நாம் மட்டும்
எதிரிகளாய்!

கொன்றுவிடு...





எத்தனைமுறை
காயபடுத்திருப்பேன்- உன்னை 
கண்களால் 

எத்தனைமுறை
கொன்றிருப்பேன்
வார்த்தைகளால்

அத்தனைக்கும்
மன்னித்துவிடு - என்னை
மரணித்துவிடு...

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!