Thursday, July 21, 2011

மாண்புமிகு தமிழக முதல்வருக்கு...






மரியாதைக்குரிய தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கங்கள்

இன்னும் கல்வி முழுமையாக எட்டாத, பேருந்தே பாத்திரத, வெளிஉலக வெளிச்ச்மேபடாத குக்கிராமம் ஆமையடியில் இருந்து பாமரன் ஆமையடி மகேஷ் எழுதும் கடிதம்... 

உங்களுக்கும் எனக்கும் எந்தஉறவும் இல்லை. முதலாளி அடிமை என்பதைத்தவிர, நீங்கள் தமிழ்நாட்டின் உரிமையாளர் நாங்கள் உங்கள் அடிமை. ஆனாலும் உங்களுக்கு கடிதம் எழுதவேண்டிய நிர்பந்தம் எனக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது  (பொது கல்வி திட்டம் ) சாமசீர் கல்விக்காக...

தமிழ் நாட்டின் ஓல்ட் ஓணர் பெரியவர். கருணாநிதி (வயதில்) சமச்சீர் கல்வித்திட்டத்தை கொண்டுவந்தார் என்பதற்காக அந்த நல்ல திட்டத்தை(அவர் செய்த ஒரே நல்லதிட்டம்) நீங்கள் அமல்படுத்த மறுப்பது எந்த வகையில் நியாயம்.   

 
உலகின் எல்லா நாடுகளும் கல்வியை போதுடமையக்குகிறது, இலவசமக்குகிறது, தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கிறது. மாறாக  நீங்களோ கல்வியாயை கூறுபோட்டு வியாபாரம் செய்கிறேர்கள் கல்வியாயை காசுக்கு விற்றுவிட்டு, ஆட்டையும், மாட்டையும் இலவசமாக கொடுக்கிறிர்கள். எதாவது அறிவு ஜீவிகள் கேள்வி கேட்டக்க கூடாது   என்பதற்காக லேப்டாப் இலவசமாக தருவதாக சொல்லுகிறேர்கள். ஆடு மாடு மேய்ப்பவனுக்கு லேப்டாப் எதற்கு, அவனுக்கு இலவசமாககல்வி கொடுங்கள் அதைவிட்டு விட்டு ஆடு மாடு மேய்க்க அனுப்பாதிர்கள்,  உங்களை குற்றம் சொல்லவில்லை குலகல்வி முறை கொண்டுவந்த ராஜாஜி பரம்பரையில் வந்தவர்தனே நீங்கள்.

முந்தைய அறுசு கொண்டுவந்த பாட திட்டத்தில் ஓல்ட் ஓணர் மற்றும் அவரின் மகள் புராணம் (சீராபுரானம் இருந்த இடத்தில் கலைஞர் புராணம்!) இருந்ததாக கேள்விப்பட்டோம்.(திரை துறைக்கு இலவசமாக நிலம் கொடுத்துவிட்டு கைமாறாக நடிகைகளை அரைகுறை ஆடையோடு ஆடவிட்டு பாசதலைவனின் பாராட்டு விழா கண்டவர், சமச்சீர் பாடத்திட்டத்தில் தன புகழ் பாடாமல், ஆடாமல் விடமாட்டார் என்பததை நாங்கள் மறுக்கவில்லை)    அதைமட்டும் நீக்கிவிட்டு  தயவு செய்து சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பாண்டிலேயே அமல் படுத்துங்கள்.   

இந்த இடத்தில் ஒன்றை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்...

1947க்கு பிறகு இந்தியா கல்வி துறையில் வெளிவந்த ஒரு முக்கிய ஆவணம் கோத்தாரி கல்வி ஆணைய அறிக்கை (196466).  அதன் முக்கிய சாராம்சம் எல்லோருக்கும் பொதுப் பள்ளி என்கிற கருத்தை இது வலிமையாக முன் வைத்தது. இதன் மூலமே "பல்வேறு வர்க்கமக்களும். குழுமங்களும் ஒன்றிணைவதும் அதன் மூலம் சமத்துவம் சமூக அமைப்பு உருவாவதும் சாத்தியம் ஆகும்'' என அது தெளிவாகக் கூறியது. "அப்படி இல்லாத போது கல்வியே சமூகப் பிரிவினைகளை அதிகரிக்கவும், சமுக/ஜாதிய ஏற்ற தாழ்வுகள்  தொடரவும் காரணமாகி விடும்' என அது எச்சரித்தது

இது ஏழைக் குழந்தைகளுக்கு மட்டுமின்றி வசதி படைத்த முன்னேறிய பிரிவினரின் குழந்தைகளுக்கும் தீங்கானது. ஏனெனில் இவ்வாறு தமது குழந்தைகளைப் பிரித்து வைப்பதன் மூலம் முன்னேறிய பிரிவைச் சேர்ந்த பெற்றோர்கள் தமது பிள்ளைகளை ஏழைக் குழந்தைகளின் வாழ்வையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதிலிருந்தும் எதார்த்த வாழ்வைப் புரிந்து கொள்வதிலிருந்தும் தடுக்கின்றனர்.இதன் மூலம் தமது சொந்தப் பிள்ளைகளின் கல்வியை முதுமையற்றதாகவும், சோகை பிடித்ததாகவும் ஆக்கி விடுகின்றனர்'' என விளக்கிய கோத்தாரி ஆணையம் நாட்டு வளர்ச்சிக்கும் சமூக ஒற்றுமைக்குமான கருவியாக நமது கல்வி அமைய வேண்டுமானால் பொதுப் பள்ளி முறையை(சமச்சீர் கல்வியை) நோக்கி நகர வேண்டும் என முத்தாய்ப்பாக அறிவுறுத்தியது. கோத்தாரி கல்வி ஆணைய அறிக்கை உங்களுக்கு நன்றாக தெரியும், என்றாலும் தேர்தல் உழைப்பின் களைப்பில் நீங்கள் மறந்திருப்பிர்கள்.  நினைவு படுத்துவது எங்கள் கடமை. 

இன்னொன்றையும் உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன் மற்றமாநிலங்களில் பொதுக் கல்வி இல்லாமற் போனாலும் பொதுப் பாடத் திட்டமாவது நடைமுறையிலிருக்கிறது தமிழகத்தில் அதுவும்மில்லை. தமிழையே படிக்காமல்கூட நம் மாநிலத்தில் ஒருவர் உயர் படிப்பு வரை படித்துவிட முடியும் என்கிற அவல நிலையும் இங்கு மட்டுமே இருக்கிறது.  பொதுப் பாடத் திட்டம், தமிழைக் கட்டாயப் பாடமாக்குவது, தாய்மொழிக் கல்வி ஆகியவற்றை கட்டயபடுத்துங்கள், இன்றைக்கு  சீனா  போன்ற நாடுகள் தாய்மொழி கல்வியை மட்டுமே இலவசமாக கொடுப்பதாலேயே  இவ்வளவு மக்கள் தொகை இருந்தும் உலக  மென்பொருள் சந்தையில் அந்த நாடுகள் முதல்  இடத்தில் இருக்கிறது.  

உங்களுக்கும் திரு.கருனாநி(நீ)திக்கும் இடையே உள்ள பங்காளி சண்டையில் (தமிழ் நாடு யாருக்கு சொந்தம் ) அப்பாவி பாமரனின் கல்வியில் மண்ணை அள்ளி போட்டுவிடாதிர்கள்.   இன்று நீங்கள் தனி மேஜரட்டியில் ஆட்சி அமைத்திருக்கலாம், எதிர்கட்சி தலைவர் உங்கள் திரையுலக நண்பராக இருக்கலாம், ஆவூனா போராட்டம் நடத்துற வலது, இடது கம்னிஸ்டுகள் உங்கள் சேலைக்குள் இருக்கலாம். ஆனால் காலம் மாறும், கட்சியும் மாறும், காட்சியும், என்பதை  நினைவு படுத்தவேண்டியது என் கடமை.    
பள்ளிகூடங்கள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டுமாதம் கழிந்தபின்னும்  மாணவர்களுக்கு இன்னும் பாட புத்தகங்கள் வழங்கப்படவில்லை என்பதைவிட அதற்க்கான நடவடிக்கைகூட நீங்கள் எடுக்காதது உங்களுக்கு பாமரனின் கல்வியைவிட அரசியல் பழிவாங்கும் உணர்ச்சியே அதிகமாக இருக்கிறதே என்று என்ன தோன்றுகிறது.
சமச்சீர் கல்விக்கு எதிரான அணுகு முறையிலிருந்து   ஐந்து ஆண்டுகாலம்  கொடைநாட்டில் ஓய்வு எடுத்தபின்னும்  உங்களின் பழைய அரசியல் முகம் மாறவேயில்லை என்பதை  தெளிவாக காட்டுகிறது



சமச்சீர் கல்வியை கொண்டுவரவே இவ்வளவு தயங்கும் யோசிக்கும் நீங்களா  (தமிழக அரசுகள் ) இலவச கல்வியைதரபோகிறேர்கள்.   நான் உங்களிடத்தில் கேட்ப்பதல்லம்  இந்தநாட்டில் பணம் படைத்தவனும், சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கிறவனுக்கு கிடைக்கிற அதே கால்வியாயை பாமரனுக்கும், சமுகத்தின் அடிதட்டின் வர்கத்தினர்க்கும் இலவசமாக கிடைக்க வழிவகை செய்யுங்கள்.

 இப்போதே மேல் முறையீடு செய்யும் திட்டத்தை கைவிடுங்கள். சோ, பார்த்தசாரதி, ராமகோபாலன் போன்றவர்களின் அறிவுரைகளை புறம்தள்ளிவிட்டு பாமரனுக்கு பயன்படுகிற சமச்சீர் கல்வித்திட்டத்தை உடனே அமல் படுத்துங்கள். 

பணம்/பிறப்பு எற்றதாள்வுகாளை புறம்தள்ளி எல்லோருக்கும் சமச்சீர்கல்வி இலவசமாககிடைக்க உதவிடுங்கள்...
                                        

                                                                                             நன்றியுடன்

                                                                           பாமரன் ஆமையடி மகேஷ்
                        


Thursday, July 14, 2011

கோழைகளுக்கு உடனே தண்டனை வழங்குங்கள்...








             மாமிசம் தின்னும் மனிதன். மலமும் புல்லும் தின்னும் காலம் விரைவில் வருமோ என்றே என்னே தோன்றுகிறது. நேற்று(13.07.11) மும்பையில் நடந்த சோக சம்பவம். எத்தனைதான் மனிதன் முன்னேறினாலும் அவன் இன்னும் மிருகங்கள் அளவிற்கு  முன்னேறவில்லை! எந்த மிருகமும்  தன் இனம் மீது இப்படி ஒரு செயலை செய்யாது, செய்ததும் இல்லை.

" ஒரு வேளை ஆறாவதுஅறிவு என்பது மனிதனின் சாபமோ"


இந்த செயலை எவன் செய்தாலும் அவன் உடனே தாண்டிக்கபடவேண்டியவன்.  2008ம் ஆண்டு மும்பைக்குள் ஊடுறுவி கொலை வெறித் தாக்குதலை நடத்திய 10 பேர் கொண்ட பாகிஸ்தானிய தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்த கசாப்புக்கு பிறந்த நாள் பரிசளிக்கும் வகையில் இந்த தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியதாகவும் கூறப்படுகிறது   இது உண்மைஎன்றல் உடனே இந்த கசப்புக்கு இந்திய அரசு பிறந்தநாள் பரிசு கொடுக்க வேண்டும்.

மத வெறியர்களே உங்களுக்கு இந்திய அரசோடு  பிரச்சனைஎன்றல் அரசியல் வாதிகளோடு நேரடியாக மோதுங்கள், அதை விட்டுவிட்டு அப்பாவி பொதுமக்களிடம் உங்கள் கோழைத்தனத்தை காட்டுவது அவமானம்.  உங்களுக்கு என்ன துரோகம்  செய்தார்கள் செத்துப்போன 21 பேறும்,  காயமடைந்த  150 அப்பாவிகளும்.

எந்த மதம்ட  இதையெல்லாம் உங்களுக்கு போதிக்கிறது. மனிதன்  திருந்த கொண்டுவரப்பட்டதே மதம் கடைசியில் அதற்கே மதம் பிடிக்க வைத்துவிட்டேர்களே.

இந்திய அரசே உடனடியா நடவடிக்கை  ஏடு மதவாதத்தை   எவன்    கையி எடுத்தாலும் அவனை உடனே ஒடுக்கு. இன்னும் பாதுகாப்பை அதிகபடுத்து மதங்களை விட மனித உயிகளே பெரிது.

தோழர்களே நிங்களும் நானும் மதத்திற்குள்ளும், ஜாதிக்குள்ளும் இருக்கும்
வரை இதுபோன்ற சம்பவங்களை தடுக்கவே முடியாது.

இறந்தவரின் குடும்பம்களுக்கு உதவிகரம் நிட்டுவோம்!
காயபட்டவனுக்கு மறுவாழ்வு கொடுப்போம்!!
வாருங்கள் தீவிரவாதத்தை ஒழிப்போம்!!! 

 :- தோழமையுடன்  ஆமையை மகேஷ்

Monday, July 11, 2011

என்று தனியும் முஸ்லிம்களின் பாபர் மசூதி தாகம்...

                       



 அயோத்தி பாபர் மசூதி, ராமர் கோயில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதற்காக கடந்த 60 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கின் தீர்ப்பு   30.9.2010 அன்று அலகாபாத் உயர்நீதிமன்ற மூன்று நீதிபதிகளால் தீர்ப்பு   அளிக்கப் பட்டுள்ளது.
தீர்ப்பினை மூன்று நீதிபதிகளும் இணைந்து கருத்திணக்கத்தோடு ஒரே தீர்ப்பாக வழங்கவில்லை. மூவரும் தனித்தனியே எழுதியுள்ளனர். இந்த தீர்ப்பால் மிண்டும் தலை குனிந்து நிற்கிறது இந்திய நீதீ. வழக்கம்போல ஒரு கண்ணில் பாலும் இன்னொரு கண்ணில் கள்ளிபாலும் ஊற்றிவிட்டது இந்திய ஜனநாயக இந்து அரசு. “தீர்ப்பின் சாராம்சம்” இந்தியா இந்துக்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்பதை மிண்டும் தெளிவுபடுத்திருக்கிறது.            

இத்தீர்ப்பின் பல்வேறு அம்சங்கள், சட்ட அடிப்படையில் அமைவதைவிட ‘நம்பிக்கை’ நீண்ட காலமாக இருந்து வந்த காரணம் என்பது போன்றவையின் அடிப்படையில்  தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது! அதுவும் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு என்பது மிகவும் ஆபத்தானது! நாளைக்கே... பாராளுமன்றம் இருக்கின்ற இடத்தில் தான் பார்வதி பிறந்தங்கன்னு  வழக்கு போட்ட என்ன தீர்ப்பை சொல்லும் இந்தியஅரசு? “நம்பிக்கை அடிப்படையில்’’ என்றால், யாரும் எதற்கும் ஆதாரமோ, சான்றோ, சட்ட விதிகளையோ தேடித்தேடி வழக்கின் தீர்ப்பை அமைக்க முடியாது   பெருகும் ஆபத்தான முறைக்கு அது வழிவகுக்கும் அபாயம் உள்ளது.அண்ணன் ராவணன் இந்த இடத்தில்தான் சீதையை சிறை பிடிச்சிவச்சிருந்தன்ன்னு இலங்கையிலபோயி உங்க நம்பிக்கை அடிப்படியில கேளுங்க பார்ப்போம் ராஜபக்ஷே ஓட்ட நரிக்கிருவன்.

அதுமட்டுமல்ல ராமன் என்பவர் வரலாற்று புராண கதையான ராமாயண கதையின் நாயகனே தவிர அவர் பிறந்தர்க்கான எந்த ஆதாரங்ககும் இல்லை இன்னும் சொல்லப்போனால் வால்மீகி , கம்பன் போன்றவர்களின் கற்பனை நாயகன்தான் திரு. ராமன்  இவற்றையெல்லாம் தாண்டி  ராமாயணம் உண்மைதான் ராமரும் கடவுள் என்றே வைத்துகொள்ளோம். இராமாயணமே 57 இராமாயணங்கள் உள்ள நிலையில், எந்த ராமாயணத்தை ஆதாரமாக வைத்து தீர்ப்பு வழங்கினார்கள் நீதிபதிகள். ராமர் குறிப்பிட்ட அந்த இடத்தில்தான் பிறந்தார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது. கௌசல்யாவுக்கு (ராமன் அம்மாவுக்கு ) பிரசவம் பார்த்த அந்த மருத்துவச்சிக்கு மட்டுமே தெரிந்திருக்கும் . அப்படியானால் அந்த மருத்துவச்சியை குறுக்கு விசாரணை செய்தார்களா நீதிபதிகள். வால்மிகிக்கே தெரியவில்லை அவளின் பெயர் அப்படியிறுக்க எதை வைத்து தீர்ப்பு வழங்கினார்கள் நிதிபதிகள்.  ராமன் பிறந்த இடம், பிரச்சினைக்குரிய அந்த இடம்தான் என்று சொல்வது   நம்பிக்கை அடிப்படையில்தான்   தவிர சட்ட சான்றுகள் அடிப்படையில் இல்லை.  புராண கால கற்பனைகளுக்கும், இதிகாச கால நம்பிக்கைகளுக்கும் மதப் பூச்சு பூசப்பட்டதாலேயே வெறும் நம்பிக்கை அடிப்படையில் ராமர் அங்குதான் பிறந்தார் என்றெல்லாம் இதுபோன்ற தீர்ப்புகளில் எழுதப்படுவது, நீதிமன்றங்களை   சட்ட கோர்ட்டுகள் (Courts of Law) என்பதற்குப் பதிலாக, நம்பிக்கை கோர்ட்டுகளாக (Courts of belief and Faith) ஆக்குவதாக அமைந்துள்ளது. இதன் விளைவு நிகழ்காலத்தில் மட்டுமல்ல, வருங்காலத்திலும் நியாய விரோத தீர்ப்புகள், புற்றீசல்கள்போல் கிளம்ப வழிவகுத்து விடும்.


பாபர் மசூதி இடம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானதா இல்லையா என்பதுதான் பிரச்சனையின் அடிப்படை.  அந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் பெரிய பொறுப்பிலுள்ள நீதிமன்றம், அதைச் சொத்து ஆதாரங்களின் அடிப்படையிலும் அனுபவப் பாத்தியதையின் அடிப்படையிலும் அணுகாமல், ஒரு சொத்து யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்கச் சட்டம் கூறுகிற வழிமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு, தீர்ப்பு வழங்கியிருப்பது முட்டாள் தனமானது

450 ஆண்டுகாலமாக அயோத்தியில் பாபர் மசூதி இருந்ததும், அங்கே முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்ததும், 1949இல் அங்கே வலுக்கட்டாயமாக ராமர் சிலைகளை உள்ளே நிறுவி, அதைக் காரணம் காட்டி மசூதியை இழுத்து மூடியதும், 1992இல் இந்துத்துவச் சக்திகள் பாபர் மசூதியை இடித்துத் தகர்த்ததும் நம் கண்முன்னே நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள்.  ஆனால், ராமர் அயோத்தியில்தான் பிறந்தார் என்பதற்கான வரலாற்று ஆதாரமோ ஆவணமோ எதுவும் இல்லை என்பதும் ராமர் ஒரு புராண நாயகன்தான் என்பதும் ஒரு சாதாரண பாமரனுக்குக்கூடப் புரியும்.  இது இரண்டு நீதிபதிகளுக்குப் புரியாமல் போனது வியப்பளிக்கிறது.  மேற்படி உண்மைகளை மூன்றாவது நீதிபதி தனது தீர்ப்பில் சொல்லியும், பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு என்கிற அடிப்படையில் அது மூடி மறைக்கப்படுகிறது. தீர்ப்பு வழங்கும்போது பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்து ஏற்றுக்கொள்ளப்படும் என்னும் முறை இருப்பது தெரிந்தே இரண்டு இந்து ,ஒரு முஸ்லிம் நிதிபதியை தெர்தேடுத்ததே முதல் ஜனநாயகமீறல். இங்கேயே முஸ்லிம்கள் தோற்றுவிட்டரர்கள் பிறகு எதற்கு விசாரனை தீர்பெல்லாம்.   

அயோத்தி நில வழக்கை ஆதாரங்களின் அடிப்படையில் அணுகி தீர்ப்பு வழங்காமல், 60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்.சும், அத்வானியும், மோடியும், சோவும் சொன்னதுதான் தீர்ப்பாக வந்துள்ளது.
 
பாபர் மசூதியை இடித்துத் தகர்த்த அத்வானி உள்ளிட்ட இந்துத்துவச் சக்திகளின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களைச் சுதந்திரமாக உலவவிட்டுள்ள நீதிமன்றமும் சட்டமும், இப்போது மசூதியையும் கபளீகரம் செய்து இந்துத்துவச் சக்திகளிடம் ஒப்படைக்கத் துணிந்திருப்பது மிகப்பெரும் மோசடியாகும். ஏற்கனவே நம்பிக்கை இழுந்து விரக்தியில் வாழும் இசுலாமிய மக்களுக்கு இது மேலும் கசப்பான அனுபவமாக அமைந்து விட்டது. அதுமட்டுமல்லாது தீர்ப்பில் இரண்டு பகுதி நிலம் இந்துக்களுக்கு ஒரு பகுதியே இசுலாமியர்களுக்கு வழங்கபட்டிருக்கிறது  கம்பு எடுத்தவனெல்லாம் ரவுடி என்பதுபோல வழக்கு போட்டவனுக்கெல்லாம் நிலம் பகிர்ந்து வழங்கப்பட்டது மிக பெரிய மோசடித்தனம்   அப்படி என்றால் 10 பேர் வழக்கு போட்டு இருந்தால் 10 பேருக்கும் சரிசமமாக அந்த நிலத்தை பங்கு போட்டு கொள்ள தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்குமா?. இந்த வழக்கில் நீதிமன்ற மரபே மீறப்பட்டு இருக்கிறது. இதில் இன்னும் மிக பெரிய கொடுமை பாபர் மசூதியை இடித்து தள்ளிய அத்வானி உட்பட எந்த இந்து வெறியர்களை பற்றியும் தீர்ப்பில் ஒரு வரிகூட சொல்லாதது மிக பெரிய மோசடித்தனம். இப்படி எல்லா வகையிலும் முஸ்லிம்களுக்கு துரோகத்தை செய்துவிட்டது இந்திய பார்பன அரசு...

இவ்வளவு பெரிய கொடுமை இசுலாமியர்களுக்கு நடந்தபின்னும் இந்தய "மாமா" அரசியல் வாதிகள் எல்லாம் சும்மா இருப்பது கொடுமையின் உச்சம்.

இன்னும் முஸ்லிகள் மேல் முறையீடு செய்யலாம் ஆனால் தீர்ப்பு இப்படிதான் இருக்க போகிறது. இந்த கேவலமான தீர்ப்பு வருவதற்கே அறுபது ஆண்டுகள் எடுத்துகிட்ட நீதிமன்றங்கள் இன்னும் மேல்முறையீடு தீர்ப்புகள் வருவதற்குள் நம்முள் பலர் உயிரோடுயிருக்க வாய்ப்பு இல்லை ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இந்த தீர்ப்பின் பின்பமாகதான் அந்த தீர்ப்பு இருக்கும். ராமன் ஆண்டா என்ன அண்ணன் ராவணன் ஆண்டா என்ன, பாரதிய ஜனதா ஆண்ட என்ன காங்கிரஸ் ஆண்டா என்ன இதிய இந்து நாடுதான் ஜனநாயக நாடு இல்லை. வாழ்க ஜனநாயகம் வாழ்க திரு. ராமர்

                                       "என்று தனியும் முஸ்லிம்களின் பாபர் மசூதி தாகம்"  
                                                                 ஆமையடி அ. மகேஷ்

October 04, 2010

நல்ல தீர்ப்பை வழங்குமா நிதிமன்றம்?



பாபர் மசூதி பிரச்சினயில் 500ஆண்டுகால இந்து-முஸ்லிம்  போராட்டமும் 60 ஆண்டுகால நீதிமன்றவிசாரணையும்…

500 ஆண்டுகளுக்கு முன்பு அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது. அன்று தொடங்கிய பிரச்சினை இப்போது 21-ம் நூற்றாண்டிலும் நீடித்து கொண்டிருக்கிறது. 
ராமாயண கதையில் ராமன் அயோத்தியில் பிறந்ததாக கூறப்பட்டுள்ளது. அயோத்தியில் 12-ம் நூற்றாண்டில் ராமர் கோவில் இருந்ததாக பழங்கால இந்து இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. சீன துறவி ஹீயன் தசாங் 7-ம் நூற்றாண்டில் அயோத்தியில் ஏராளமான கோவில்கள் இருந்ததாக கூறியுள்ளார். 500 ஆண்டுகளுக்கு முன்பு அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது. அன்று தொடங்கிய பிரச்சினை இப்போது 21-ம் நூற்றாண்டிலும் நீடித்து கொண்டிருக்கிறது. 
ஒவ்வொரு ஆண்டிலும் நடந்த முக்கிய நிகழ்வுகள் வருமாறு:-
 
1527- பாபர் இந்தியா மீது படையெடுத்தார். பல இந்து மன்னர்களை தோற்கடித்து தனது சாம்ராஜ்ஜியத்தை நிறுவினார்.
 
1528- பாபரின் தளபதி மிர்பாகி அயோத்தியில் பாபர் மசூதி கட்டினார். ராமர் கோவில் இருந்த இடத்தில் தான் பாபர் மசூதி கட்டப்பட்டதாக இந்துக்கள் புகார் கூறினார்கள். அதில் இருந்து பிரச்சினை தொடங்கியது.
 
1853- பாபர் மசூதியை கைப்பற்ற இந்துக்கள் முயன்றனர். இதனால் முதல் கலவரம் ஏற்பட்டது. ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
 
1859- ஆங்கிலேயர் ஆட்சியில் இங்கு முஸ்லிம்களும், இந்துக்களும் தனித் தனியாக வழிபாடு நடத்த இடங்களை ஏற்படுத்தி கொடுத்தனர்.
 
1885- மகந்த் ரகுவர் தாஸ் என்பவர் இந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்கும்படி வழக்கு தொடர்ந்தார்.
 
1886- இந்துக்கள் சொந்தமான இடத்தில் மசூதி கட்டப்பட்டு இருப்பதாக பைசா பாத் மாவட்ட கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு கூறினார்.
 
1949- மர்ம நபர்கள் பாபர் மசூதிக்குள், ராமர் சிலையை கொண்டுவந்து வைத்தனர். இந்த விவகாரம் கோர்ட்டுக்கு சென்றது. இதனால் பிரச்சினைக்குரிய இடம் பூட்டப்பட்டது.
 
1950- பிரச்சினைக்குரிய இடத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பைசாபாத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
 
1959- அந்த இடத்தில் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று இந்துக்கள் வழக்கு தொடர்ந்தனர்.
 
1961- பிரச்சினைக்குரிய இடம் தங்களுக்கே சொந்தம் என்று சன்னி முஸ்லிம் வக்பு வாரியம் வழக்கு தொடர்ந்தது.
 
1984- சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர்கோவில் கட்டுவதற்காக விசுவ இந்து பரிஷத் இயக்கத்தை தொடங்கப்பட்டது. பாரதீய ஜனதா தலைவர் அத்வானி இதன் பிரசார இயக்கத்துக்கு தலைமை தாங்கினார்.
 
1986- பாபர் மசூதியில் பூட்டப்பட்டுள்ள கதவை திறந்து இந்துக்களும் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பைசாபாத் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
 
1989- ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது சர்ச்சைக்குரிய இடம் அல்லாத இடத்தில் கோவில் கட்ட பூமிபூஜை நடத்த அனுமதித்தார். அயோத்தி வழக்கு ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.
 
1990 செப்- பாரதீய ஜனதா தலைவர் அத்வானி சோமநாதபுரத்தில் இருந்து அயோத்திக்கு ரதயாத்திரை தொடங்கினார்.
 
1990-நவ பீகாரில் அத்வானி ரதயாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார். அப்போது இருந்த வி.பி.சிங் அரசுக்கு பாரதீய ஜனதா அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது. 
 
1992 டிச.6- பாபர் மசூதி இடிக்கப்பட்டு தற்காலிக ராமர் கோவில் கூடாரமாக கட்டப்பட்டு இருந்தது. இது சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கில் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
 
2003 மே- இந்த இடத்தில் இந்து கோவில் இருந்ததா? என்பது பற்றி அகழ்வாராய்ச்சி செய்ய அலகாபாத் ஐகோர்ட்டு உத்தர விட்டது.
 
2003 ஆக.22- அகழ் வாராய்ச்சி அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 10-ம் நூற்றண்டு கட்டிடம் அந்த இடத்தில் இருந்ததாக கூறப் பட்டிருந்தது.
 
2003 ஆக. 31- அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் அகழ்வாராய்ச்சி அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
 
2010 ஜூலை- சர்ச்சைக் குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது பற்றி 60 ஆண்டாக அலகாபாத் ஐகோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணை முடிந்தது.
 
       ஒரு வழிய இன்று(30.09.10) தீர்ப்புவருகிறது யாருக்கு  பாதகமாக தீர்ப்பு வந்தாலும் கலவரம் ஏற்ப்படலாம் என்ற அச்சத்தில் நலம்விரும்மிகளும் , இதைவைத்தே அரசியல் செய்யலாம் என்ற நோக்கில் காய்நகர்த்தும் சமுக விரோதிகளும் காத்திருக்க. இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி  ஒரு நிலத்தை ஒரு தலைமுறைக்கு மேலாக ஒரு குடும்பம் அல்லது ஒரு சமுகம் நிர்வகித்து வந்தால் அவர்களே அதன் உரிமையாளர்கள் அப்படி பார்த்தல் முஸ்லிம் மக்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எது எப்படியோ யாரையும் பாதிக்காத, உலகமே ஊற்று பார்கின்ற இந்த விவகாரத்தில்   நல்ல தீர்ப்பை வழங்குமா நிதிமன்றம்?

September 30, 2010

விபச்சாரியின் பரிசு… - ஆமையடி மகேஷ்

நீ

தேவதை -உன்
கண் விண்மீன்
கன்னம்  தேன்கிண்ணம்
உதடு கோவம்பழம் 
மார்பு...      
இடை…




உருகி உருகி வர்ணித்தான்- அவள்
மார்மீது படர்ந்து  கட்டிதழுவினான்
உதடுகள் முத்தத்தால் -
முகத்தை அனைத்தபடியெ அழைத்து
சென்றான் படுக்கைக்கு
ஏ/சி காற்று, தண்ணீர் மெத்தை,
ஆபாச சுவரொட்டி. - அவள்
முகம் சுழிக்கவில்லை – விளக்குகள் தூங்க
தித்திக்கும் இன்பம் கொடுத்தாள் – அவன்
ஆண்மை அடங்கும்வரை திகட்டஇன்பம் கொடுத்தாள் 
வலி தாங்காமல் கட்டில்தான் குலுங்கியது

நிமிடங்கள் கரைந்தது
விளக்குகள் விளித்துகொள்ள
ஆடைகள் சரிசெய்தனர்

அவள்

நான் உன் போன்ற பெரிய
மனிதர்களிடம் பெற்ற   சுகத்தை
இன்று உனக்கு தந்திருக்கிறேன்… 
அவள் முடிப்பதற்குள் ஆம் என்றான்

நீ

தவருதலாக புரிந்து கொண்டாய்
நான் உனக்கு தந்தது சுகம் இல்லை
உன் வாழ் நாளை நிர்னைக்கும் எய்ட்சை
எடுத்ததை எடுத்த இடத்தில் வைப்பது என் பழக்கம்
உன்னிடத்தில் இருந்து எடுத்ததின் பங்கு உனக்கு
தந்துவிட்டென் இன்னும் -சில
நன்றிகடன் தீர்க்கவுள்ளது அவர்களுக்கும் பரிசளித்துவிட்டு வருகிறேன். 


பெரும் பினம் தனி பிணமாக போகாதுஎன்னையும் சேர்த்து பலர் நம்முடன் வருவார்கள்… 

June 30, 2010

மாவீரன் சுந்தரலிங்கனார்...



            












சுந்தரலிங்கத் தேவேந்திரர். பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் கட்டபொம்மனின் தளபதியாக வாழ்ந்தவர்.  பாஞ்சாலங்குறிச்சிப் பாளையமும் கட்டபொம்மனும்  ஆங்கில  ராணுவத்தால் அழித்தொழிக்கப்படுவதற்கு முன்னால், அவர்களைக் காத்து அம் முயற்சியில் தம் உயிரைத் தந்தவர் சுந்தரலிங்கம்.

பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள சுவர்னகிரியில் பிறந்தவர் சுந்தரலிங்கம். தந்தை கட்டக் கருப்பணத் தேவேந்திரர். தாயார் முத்தம்மாள். சுந்தரலிங்கம் பிறந்த ஆண்டு ஏறக்குறைய 1771 என்று நம்பப்படுகிறது. மனைவி சண்முகவடிவு. தம்பதிகளுக்கு இரு மகன்கள். பாஞ்சாலங்குறிச்சிக்கும், எட்டயபுரத்தும் இடையே நடந்த ஒருநதி நீர்ப் பங்கீட்டில்தான் சுந்தரலிங்கத்தின் அரசியல் வரலாறு தொடங்கி இருக்கிறது.  பாஞ்சாலங்குறிச்சிக்குச் சொந்தமான ஆற்றிலோடைக் கண்மாய் நீரை எட்டயபுரத்தைச் சேர்ந்த தருவைக்குளம் கண்மாய்க்குத் திருப்ப எட்டயபுரத்து அதிகாரம் ஆற்றிலோடைக் கண்மாயின் குறுக்கே கரை எழுப்பியபோது, அதைத் தடுத்து எட்டயபுரத்தார்களை விரட்டியடித்த வீரச் செயலால் புகழடைந்தார் சுந்தரலிங்கம். பாஞ்சாலங்குறிச்சிக்கு அவர் செய்த முதல் தொண்டு அது. இதைத் தொடர்ந்து, சுந்தரலிங்கம், கட்டபொம்முவின் படைப்பிரிவில் முக்கியப் பொறுப்பில் சேர்க்கப்பட்டுத் தன் அர்ப்பணிப்பு மிக்க வீரச் செயல்களால் தளபதி என்கிறஅளவுக்குஉயர்ந்தார்.
அப்போது தமிழ்நாடு  72 பாளையங்களாகப் பிரிந்திருந்தது  அதில் ஒன்று பாஞ்சாலங்குறிச்சி .ஆங்கிலேயர்க்கு 1772 முதலே ஆறு ஆண்டுகளாகக் கட்டபொம்மு வரிகட்ட மறுத்தார். இந்தச் சூழலில் திருநெல்வேலி, இராமநாதபுரத்தின் ஆட்சியராக 1797-ல் நியமிக்கப்பட்ட ஜாக்சன், 26.10.1797 அன்று, உடனடியாக வரி செலுத்த வேண்டும் என்றும், தூத்துக்குடியில் முகாம் இட்டிருந்த இராணுவ அதிகாரி டேவிட்சனுக்கு உணவுக்காக ஆடுகள் அனுப்ப வேண்டும்என்றும் கட்டபொம்மனுக்குத் உத்தரவு  பிறப்பித்தான். கட்டபொம்மன், இதைப் புறக்கணித்தார். இறுதியில் கட்டபொம்மன். ஜாக்சனைச் சந்திக்கப் புறப்படுகிறார். உடன் சுந்தரலிங்கமும், ஊமைத்துரையும் பாதுகாப்புக்குச் செல்கிறார்கள். பேட்டிக்கு வரச் சொன்ன ஜாக்சன், சுமார் 23 நாட்கள் 400 மைல்கள் அவர்களை அலையவிட்டு அவமானப்படுத்திக் கடைசியில் 10.9.1798 - அன்று மாலையில் சந்திக்கிறான். கட்டபொம்மனை நிற்க வைத்தே பல மணிநேரம் பேசி, அவரை மேலும் அவமானப்படுத்துகிறான். கட்டபொம்மன் நின்றுகொண்டிருந்தார். கைது செய்யும் சூழல் உருவாவதை கட்டபொம்மு உணர்கிறார். தண்ணீர் குடித்துவிட்டு வருவதாகக் கீழே வருகிறார். ஆங்கிலச் சிப்பாய்கள் அவரை மடியைப் பிடித்து இழுக்கிறார்கள். சில சிப்பாய்கள் கட்டபொம்மனையும், ஊமைத் துரையையும் நோக்கிச் சுடுகிறார்கள். கோட்டைக்கு வெளியே நின்றிருந்த சுந்தரலிங்கம், தன் வீரர்களுடன் கட்டபொம்மனைப் பாதுகாக்க வருகிறார். அப்போது ராணுவத் துணைத் தளபதி கிளார்க், கட்டபொம்மனைக் கொல்ல பாய்ந்து வருவதைக் கண்ட சுந்தரலிங்கம், தன் வாளால் அவனை வெட்டிச் சாய்த்தார்.
கட்டபொம்மன்  அப்போது தப்பித்தது, சுந்தரலிங்கத் தேவேந்திரரால்தான்.

பாஞ்சாலங்குறிச்சிப் போரில், கட்டபொம்மனின் தோளுடன் தோளாக நின்று, கடைசிவரை அவருடன் சேர்ந்து போராடித் தம் உயிரைத் தந்தவர்கள் தேவேந்திரர்களும் பகடைகளுமே. 5.9.1799ம் தேதி பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை முற்றுகை இடப்பட்டு அன்றே தாக்கப்பட்டது. சுந்தரலிங்கத் தேவேந்திரர் தலைமையில் காலாடிக் கருப்பத் தேவேந்திரர், வீரமல்லு நாயக்கர், கந்தன் பகடை, பொட்டிப் பகடை முதலான துணைத் தளபதிகளின் வழிகாட்டுதலில் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் ஆங்கில வீரர்களுடன் மோதினார்கள். மிகவும் உக்கிரமாக நடைபெற்ற முதல் நாள் போரில் ஐந்து முக்கிய ஆங்கிலத் தளபதிகள் கொல்லப்பட்டார்கள். ஆங்கிலப் பகுதிக்குப் பெரும் சேதம் விளைந்தது. மறுநாள் 6-ம் தேதி இரவு கட்டபொம்மன், தன் தம்பி ஊமைத்துரையோடு கோட்டையைவிட்டு வெளியேறி, படை திரட்டும் பொருட்டுக் கோலார்பட்டிக்குச் செல்கிறார். மறுநாள் கோட்டை இடித்துத் தள்ளப்படுகிறது. அரண்மனைக்குள் ஆங்கிலேயர்கள் கொள்ளையடிக்கிறார்கள். ஆயிரக்கணக்கான தேவேந்திரர்கள், அதே அளவு அருந்ததியர்கள். களத்தில் பலியானார்கள் என்பது வரலாறு

அதே சமயம் கோலார்பட்டியில் இருந்து கொண்டு படைதிரட்டிக் கொண்டிருந்த கட்ட பொம்மனையும் ஊமைத் துரையையும் எட்டயபுரம் படையும், ஆங்கிலேயர் படையும் சுற்றிக்கொண்டது. கட்டபொம்மனும் ஊமைத்துரையும் தப்பித்து வெளியேறினர். சுந்தரலிங்கம்தலைமறைவாகிறார்.
கட்டபொம்மனைக் கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. சிவகங்கை வட்டத்தைச் சேர்ந்த திருக்களம்பூர் அருகில் கலியபுரம் எனும் இடத்தில் 23.9.1799 அன்று தொண்டைமான் ஆட்கள் கட்டபொம்மன், ஊமைத்துரை, மைத்துனர்கள் இருவர் மற்றும், ஏழுபேரைக் கைது செய்கிறார்கள். 5.10.1799 அன்று அவர்கள் கயத்தாறு கொண்டுவரப்பட்டு 16.10.1799 வரை சிறையில் வைக்கப்படுகிறார்கள். 16.10.1799 அன்று காலை கட்டபொம்மு மீது விசாரணை நடத்தப்படுகிறது. தீர்ப்பை எழுதிவைத்துக்கொண்டு, விசாரணையைத் தொடங்குகிறார் பாளர்மேன். ஐந்து குற்றச்சாட்டுகளை அடுக்குகிறான். ‘ஏதேனும் கூற விரும்புகிறாயா?’ என்று கட்டபொம்மனிடம் கேட்கிறான். பாளர்மேனை அலட்சியப்படுத்துகிறார் கட்டபொம்மன். வேடிக்கை பார்க்க வந்த ஆங்கில  விசுவாசிகளான எட்டயபுரம், சிவகிரிப் பாளையக்காரர்களை மிக ஏளனத்துடன் பார்க்கிறார். தூக்குமேடைக்கு மிகுந்த வீரத்துடன் நடந்து செல்கிறார் கட்டபொம்மன். கயத்தாறு பழைய கோட்டைக்கு எதிரே உள்ள புளிய மரத்தில், கட்டபொம்மன் தன் உயிரைச் சுதந்திரத்துக்கு விலையாகக்கொடுத்தார்.

பாஞ்சாலங்குறிச்சி போரின் அடுத்தகட்டம், ஊமைத்துரையோடு ஆரம்பமாகிறது. உண்மையில் இந்தக் காலகட்டத்தில் கதாநாயகன் சுந்தரலிங்கத் தேவேந்திரன்தான். பாளையங்கோட்டைச் சிறையில் அகப்பட்டு, தூக்குக்குக் காத்திருந்த ஊமைத்துரையையும் மற்றும் உள்ள பாஞ்சை வீரர்களையும் மிகப் பெரிய சாகசம் செய்து தப்பிக்கச் செய்தவர் சுந்தரலிங்கத் தேவேந்திரர்.

பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டது 1799-ம் ஆண்டு. அவருக்குப் பிறகு பாளையக்காரராகத் தம்மை அறிவித்துக்கொண்ட, அவரது தம்பி ஊமைத்துரை கொல்லப்பட்டது 1801-ம் ஆண்டு. இடையில் கழிந்த இரண்டு ஆண்டுகள் மேலும் முப்பது நாட்கள், ஆங்கிலேயருக்கு  எதிராக, ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்தினார் ஊமைத்துரை என்கிற குமாரசுவாமி. ஊமைத்துரையோடு அவருக்கு நிகராக, சில வேளைகளில் மேலாகப் போர்ச் செயல்பாடுகளில் ஈடுபட்டவர், பாஞ்சாலங்குறிச்சியின் தளபதியாக இருந்த கட்ட கருப்பச் சுந்தரலிங்கத்தேவேந்திரர் என்றே வரலாறு பதிவு செய்திருக்கின்றது. இப்போதும் வெள்ளையருக்கு எதிராகப் படைகளும், நாயக்கர்களும் தேவேந்திரர்களும் கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள், ஊமைத்துரைக்கு ஆதரவாக
கயத்தாறில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டபோது (16.10.1799) ஊமைத்துரையும் அவரோடு சேர்ந்து மொத்தம் 16 பேரும் பாளையங்கோட்டைச் சிறையில், தூக்குக் கயிறை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் கைவிலங்கும், கால் விலங்கும் போடப்பட்டு மிக விழிப்பாகக் கண்காணிக்கப்பட்டனர்
அதே நேரத்தில் 9.9.1799 அன்று கோல்வார்பட்டியில் நடந்த சண்டையின்போது தலைமறைவான சுந்தரலிங்கம், சும்மா இருக்கவில்லை. தலைமறைவுக் காலமான அந்த ஐந்து மாதங்களைப் பயன்படுத்திக்கொண்டு, பாஞ்சாலங்குறிச்சியின் பக்கத்தில் அவர் பிறந்த ஊரான சுவர்னகிரி, பசுவந்தனை, பட்டணமருதூர் முதலான ஊர்களில் தேசப்பற்றும் (தேசம் என்பது அந்தக்காலத்தில் பாஞ்சாலங்குறிச்சிதான்), போர் ஆர்வமும் கொண்ட இளைஞர்களைத் திரட்டி படையாக்கிப் போர்ப் பயிற்சி கொடுத்தார். இப்படியாகச் சிறுபடையைத் தயார்செய்து கொண்டிருந்த சுந்தரலிங்கம், பாளையங்கோட்டை சிறையை உடைத்து ஊமைத்துரை மற்றும் குழுவினரையும் மீட்கத் திட்டமிடத் தொடங்கினார். சிறையிலிருக்கும் 
ஊமைத்துரைக்கும் சுந்தரலிங்கம் முதலான புரட்சிக்காரருக்கும் பாலமாக இருந்து பெரும்பணி செய்தவர். பொட்டிப் பகடை. ஊமைத்துரைக்கு உணவு கொண்டு போய் கொடுக்கும் பணியில் இருந்த பொட்டிப் பகடை, ஊமையன் குழுவினர் சொல்வதைப் புரட்சிக்காரர்க்கும், இவர்கள் திட்டத்தை ஊமையனுக்கும் சொல்லி வந்து, சிறை உடைப்புக்கு உருவம் கொடுத்தார். வெளியில் இருந்த புலிக்குட்டி நாயக்கரும் உதவி செய்யதார்
பாளையம்கோட்டை சிறை உடைப்பு 1801-ஜனவரி இரண்டாம் தேதி என்று முடிவு செய்யப்பட்டது. சுமார் 200 புரட்சியாளர்கள், நெல்லை-பாளையங்கோட்டை சாலையில் திருச்செந்தூர், முருகனுக்குக் காவடி எடுப்பதுபோல, காவடிகளைத் தம் தோளில் வைத்துக்கொண்டு சிந்துப் பாடல்கள் பாடியபடி வந்தார்கள். இடுப்பில் மஞ்சள் துண்டு கட்டிக்கொண்டு, மந்திரங்கள் ஓதியபடி பக்தர்களுக்குத் திருநீறு அளித்துக்கொண்டு நடந்தார்கள். முன்னரே அங்கிருந்த வீரர்களுடன் சங்கேதச் சொற்களில் உரையாடியபடியும் பாளை சிறைச்சாலைக்கு முன்பாக நடந்து இடத்தைக் கவனித்தார்கள். அதில் பெரிய காவடி எடுத்தவராகச் சுந்தரலிங்கம் இருந்தார்
இதேநாள், சிறைச்சாலையில் இருந்த ஊமையன் குழுவினர், ஒரு நாடகம் நடத்தத் தொடங்கினார்கள். சிறையில் பெரியம்மை வந்த ஒரு கைதி இறந்ததை முன்னிட்டு, ஊமையன் குழுவினரின் கை விலங்குகள் விலக்கப்பட்டிருந்தது, அவர்களுக்கு நல்ல வாய்ப்பைத் தந்தது. அதோடு, போரில் இறந்த உற்றார் உறவினர்களுக்குத் திதி கொடுக்க விரும்புவதாகவும், அதற்கான வாழைஇலை, தேங்காய், சூடம் பொங்கலுக்கான அரிசி, வெல்லம், விறகு போன்றவை வாங்க அனுமதி வேண்டும் என்று சிறையதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். விஷயம் தெய்வ நம்பிக்கை சார்ந்ததாக இருப்பதால், தனக்குத் தெய்வக் குற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் அதிகாரி அனுமதி கொடுத்தார்


அதே நேரம் காவடி எடுத்துக்கொண்டு வந்த சுந்தரலிங்கம் குழுவினர், விறகுகள், வாழை, பழங்கள், அரிசி, பருப்பு விற்கும் வியாபாரிகளாக உருமாறினார்கள். திருச்செந்தூருக்குக் காவடி எடுத்து வரும் பக்தர்கள், ஆங்காங்கே தங்கிப் பொங்கிச் சாப்பிடுவது யாதார்த்தம் ஆனதாலும், இம்மாதிரி வியாபாரிகள் அங்கு திரிவது இயல்பானது என்பதாலும், சிறை அதிகாரி, ‘இந்தவியாபாரிகளை விகற்பமாக நினைக்கவில்லை. அதோடு, சிறை அதிகாரி, அந்த வியாபாரிகளைச் சிறைக்குள் அனுமதித்தார். சிறைக்குள் புகுந்த வியாபாரிகள் ஊமையனின் சைகையைப் பெற்றவுடன், அந்தச் சமயத்தில் சிறைக்குள் இருந்த இருட்டைப் பயன்படுத்திக்கொண்டு, விறகுச் சுமைக்குள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை வெளியே எடுத்தார்கள். சிறைக்குள் அடுத்து ஏற்பட்ட சண்டையில் சிறைக்கதவு உடைக்கப்பட்டு, ஊமையன் குழுவினர் வெளியேறினர்

சுந்தரலிங்கத்தேவேந்திரர் மற்றும் புரட்சியாளர்கள், ஜனவரி 2-ம் தேதியைத் தேர்ந்தெடுத்தமைக்கான காரணம், அன்று ஆங்கில அதிகாரி மெக்காலே வீட்டில் மாலை நடந்த விருந்துக்கு, இருபது அதிகாரிகளும், அவர்களது பாதுகாப்புக்கு நிறைய சிப்பாய்களும் கலந்துகொண்டிருந்தார்கள். சிறை பாதுகாப்பு பலவீனப்பட்டிருந்தது
ஊமையன் குழுவும், சுந்தரலிங்கம் வீரர்களும் நேராகப் பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்து சேர்ந்தார்கள். ஆங்கிலேயரால் இடித்துப் பாழ்பட்ட கோட்டையை மீண்டும் ஆறே நாளில், கட்டி எழுப்பினார்கள். சுமார் 500 அடி உயரமும் நீளமும், 200 அடி அகலமும் கொண்ட கோட்டை. கோட்டைச் சுவரின் உயரம்12அடிகள்
கோபம் கொண்ட ஆங்கிலப்படை மீண்டும் பஞ்சகுறிச்சி கோட்டைமீது படையெடுப்பை தொடங்கினார்கள்கயத்தாற்றை நோக்கி ஆங்கிலபடைகள் புறப்பட்டன. குலைய நல்லூரிலும் மற்றும் பல ஊர்களிலும் ஊமையனின் கெரில்லா முறைத் தாக்குதலில் பெரும் நஷ்டங்களைச் சந்தித்தது ஆங்கில படை. தொடக்கத்தில் ஊமையன் சில குறிப்பிடத்தகுந்த வெற்றிகளைப் பெற்றார். என்றாலும் ஆங்கிலப் படை பலம், பீரங்கிகள் போன்ற நவீன ஆயுதபலம், தமிழ் நிலத்தில் நிலைபெற்றிருக்கும் துரோக பலம் ஆகியவற்றின் உதவியால்  பாஞ்சாலங்குறிச்சி கோட்டை 24.5.1801-ல் வீழ்ந்தது. ஊமைத்துரையும் சுந்தரலிங்கமும் தப்பித்து வெளியேறினார்கள். பகடைகளும், தேவேந்திரர்களும், நாயக்கர்களும் இரத்தத்தாலும், வியர்வையாலும் கட்டிய கோட்டைசிதைந்ததுபோரிட்டுக் கொண்டே சென்றதில் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் கோட்டைக்கு வெளியே சிதறிக் கிடந்தனர். கோட்டையில் இருந்து மூன்று கல் தொலைவில் இருந்த சுவர்னகிரிக்கு அருகில் ஊமையனும், சுந்தரலிங்கம், வேறு பலரும் வெட்டுக் காயங்களுடன் மண்ணில் கிடந்தனர். வீழ்ந்துக்கிடந்த வீரர்களின் மத்தியில் சுந்தரலிங்கத்தைக் கண்டுபிடித்தார், சுந்தரலிங்கத்தின் தாயாரான முத்தம்மாள். சுந்தரலிங்கம், தன் தாயிடம்என்னை விடு, பக்கத்திலே கிடக்கும் சாமியைக் (ஊமைத்துரை) காப்பாற்றும்மாஎன்று சொல்லி இருக்கிறார். முத்தம்மாள் இருவரையுமே, தன் வீட்டுக்கு எடுத்து வந்து, காயங்களுக்கு மருந்திட்டுக் காப்பாற்றி இருக்கிறார்
உடல் நிலை தேறியதும், ஊமைத்துரையும் சுந்தரலிங்கமும், மருது சகோதரர்களின் உதவியைப் பெற சிறுவயலுக்குச் சென்றார்கள். ஊமையனுக்கு அடைக்கலம் கொடுத்தமைக்காக, ஆங்கிலேயர்கள் சிவகங்கை மேல் படையெடுத்தது. மருது சகோதரர்கள் மற்றும் ஊமைத்துரை, சுந்தரலிங்கம் ஆகியோர் அணிதிரண்டு போரிட்டார்கள். நான்கு மாதங்கள் தொடர்ந்த இந்தப் போரின் இறுதி, மிக்க சோகத்தில் முடிந்தது. மருது சகோதரர்கள் தூக்குக் கயிற்றில் தங்கள் சுதேச மானத்தை எழுதினார்கள். விருப்பாட்சியில் ஊமையனும், சுந்தரலிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலங்குறிச்சி பீரங்கி மேட்டில் வைத்து, 16.11.1801 அன்று ஒரே நாளில் ஒரே இடத்தில் தூக்கிலிடப்பட்டார்கள்


ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிரானபோர் பாஞ்சாலங்குறிச்சியைப் பொறுத்தவரையில் ஒரு முடிவுக்கு வந்தது. மாபெரும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தமிழ் நிலத்துப் போர், தமிழர்கள் பெருமைப்படும் விதத்திலேயே நடந்து முடிந்தது

பாஞ்சாலங்குறிச்சிப் போரில் முக்கியமானவர்களாக, கட்டபொம்மன், ஊமைத் துரை, சுந்தரலிங்கம், சிவத்தையா, தானாபதிப்பிள்ளை, தாலாடி கருப்பணர், கந்தன் பகடை, முத்தன் பகடை, பொட்டிப் பகடை ஆகியோரே முக்கியமானவர்கள்.

பாஞ்சாலங்குறிச்சிப் போரில் முதல் களப்பலியே துணைத் தளபதி கந்தன் பகடை தான்.

பாஞ்சாலங்குறிச்சி வரலாற்றில் வெள்ளையத் தேவன், வெள்ளையம்மாள் இருவரும் புனைப் பாத்திரங்கள் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்  பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் பற்றிய கதைப் பாடல்கள், அவர்கள் அனைவரும் மறைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகே, அதாவது 1850க்குப் பிறகே உருவாக்கப்படுகின்றன. 1847-ம் ஆண்டு, ஆங்கில அரசு அடிமை முறையை ஒழித்த பிறகே, இந்தக் கலை இலக்கியங்கள் வெளிப்படத் தொடங்கின. நாட்டுப் புலவர்கள், தங்களுக்கு வந்து சேர்ந்த நிகழ்ச்சிகளின் புரிதல் அடிப்படையில் மட்டுமே அல்லாது, அவர்கள் காலத்து ஊரின் பாடப்படும் இடத்தின் சாதி மேலாண்மைக்கு இசையத் தம் பாடல்களைப்பாடி இருக்கிறார்கள்கட்டபொம்மனின் படையில் அதிக அளவு வீரர்கள், தாழ்த்தப்பட்ட. சமுதாயத்தை சார்ந்தவர்களே என்று வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்கிறார்கள்.
ஆனால் இன்று புனை பாத்திரங்களான வெள்ளையத் தேவன், வெள்ளையம்மாளுக்கு வரலாற்றில் முக்கியத்துவம் கொடுக்கும் மேலாஆதிக்க தமிழகரசுகள் கட்டபொம்மனின் உண்மையான தளபதிகளான சுந்தரலிங்கத் தேவேந்திரர், கந்தன் பகடை, முத்தன் பகடை, பொட்டிப் பகடை மற்றும் அவர்களோடு நின்று ஆங்கிலேயனை எதிர்த்து போரிட்ட தலித் மக்களை வரலாற்றில் இருந்து முழுமையாக புறக்கணித்துவிட்டது என்பது கசப்பான உண்மையே.

10.9.1798 - அன்று நடந்த பேச்சு வார்த்தையின்போது கட்டமொம்மனை சதித்திட்டம் செய்து ராணுவத் துணைத் தளபதி கிளார்க், கொலைசெய்ய முயர்ச்சித்தபோது, தன் வாளால் அவனை வெட்டிச் சாய்த்து. கட்டபொம்மனை காப்பற்றினார் தேவேந்திரனார் அப்போது கட்டபொம்மன் தப்பித்தது, சுந்தரலிங்கத் தேவேந்திரரால்தான்.   

பாளையம்கோட்டை சிறையில் தூக்கு தண்டனை எதிர்பார்த்திருந்த மாவீரன் ஊமைதுறையை   1801-ஜனவரி இரண்டாம் தேதி சிறையை உடைத்து வெளிக்கொண்டுவந்தவர் வீரன் சுந்தரலிங்கத் தேவேந்திரர் தான். இப்படி பஞ்சலகுரிச்சி வீரர்களோடு மட்டுமல்ல மருது சகோதர்களோடும் இணைந்து ஆங்கிலேயனுக்கு எதிராக இறுதிவரை போராடி வீரசாவடைந்த அந்தமாவீரனுக்கு இந்த அரசுகள் செய்த மரியதைஎன்ன தெரியுமா?

பேருந்துகளுக்கு அவர் பெயர்வையுங்கள். என கோரிக்கை வைத்ததற்காக ஒட்டுமொத்த தமிழக பேருந்துகளின் பெயரயும் மாற்றியதே இந்த அரசுகள் அவருக்கு செய்த மரியாதை.

இந்த இடத்தில் ஒன்றை சொல்லிக்கொள்ளவிரும்புகிறேன். இந்தியாவில் தலித் மன்னனாக இருந்தாலும் சரி, சராசரி மனிதனாக இருந்தாலும் சரி. அவன் சாதனைகள் வரலாற்றில் மறைக்கபடும். என்பதற்கு தமிழகத்தில் பேருந்துகளுக்கு சுந்தரலிங்கனார் பெயரா? என்பதற்காக எல்லா பேருந்துகளின் பெயர்களின் மற்றபட்டதே உண்மையான சாட்சி.

(இந்த கட்டுரை நான் படித்த பல புத்தகங்களின் தொகுப்பே, இதில் தவறுகள் இருந்தால் சுட்டி காட்டுங்கள் திருத்திகொள்வோம்.)


 May 15, 2010

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!