Thursday, July 10, 2014

இந்திய ரசிகனுக்கும் அரசியல் வாதிகளுக்கும்.. சில உண்மைகளும், கேள்விகளும்…

      

         உலகம் முழுவதும் கால்பந்து ஜுரம் பத்திக்கொண்டு எரிகிறது... 110கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாடு உலக கால்பந்து நாடுகள் வரிசயில் 152வது இடத்தில் இருக்கிறது. ஏன் நமக்கு கிரிக்கட் மட்டும்தான் விளையாட்டா? அப்படிஎன்றல் மற்ற விளையாட்டில் விளையாடும் வீரர்களின் நிலைமை என்ன ? அவர்களின் வாழ்வாதாரம் என்ன? இந்த அரசுகள் ஏன் இன்னும் கிரிக்கட்டை மட்டும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது??? நேற்றிரவு பிரேசில் ஜெர்மனி ஆட்டமும் முடிந்த பின்பு எனக்குள் எழுந்த கேள்வி இது.  இப்போது இந்திய கால்பந்து அணிக்க விளையாடும் வீரர்களின் மன நிலைமை எப்படி இருக்கும். இன்று உண்மையிலே அவர்கள் சாப்பிடுவதற்கு உணவு கிடைத்திருக்குமா? இந்திய சமுகம் புறக்கணிக்கும் இந்த இரவு அவர்களுக்கு எத்தனை அருவருப்பாக இருக்கும். கிரிக்கட்டை மட்டும் தூக்கி வைத்து கொண்டாடும் இந்திய ரசிகனுக்கும் அரசியல் வாதிகளுக்கும்.. சில உண்மைகளும், கேள்விகளும்…

     நானும் நண்பர் ஒருவரும் Coffee shopக்கு போயிருந்தோம், அபோது அங்கு வந்த ஒருவரை நண்பர் எனக்கு அறிமுக படுத்தினார், ஒரு நிமிடம் என்னால் நம்பவே முடியவில்லை. இந்திய கால்பந்து அணிக்காக விளையாடி கொண்டிருக்கும்  வீரர் அவர். ஒரு நிமிடம் திகைத்து போனேன். கரணம் அங்கிருந்த யாருக்கும் நான் உட்பட யாருக்கும் அவரை  தெரிந்திருக்கவில்லை, இதுவே அவர் ஒரு கிரிக்கெட் வீரராக இருந்திருந்தால் அந்த Coffee shop அவளவுதான். மனதில் ஏதோ ஒரு சின்ன கணம், அவரோடு சேர்ந்து நின்று புகைப்படம் எடுக்க வழியில்லாம் போய்விட்டது. இன்னொருநாள் The People's Voiceலிருந்து ஒரு அழைப்பு. வெளிநாட்டில் 16 வயதுக்கு உட்பட்டோர் கால்பந்து போட்டியில்  விளையாடி ஊர் திரும்பும் வீரரை வரவேற்க போகவேண்டுமென்று. ஆர்வத்தோடும் பூங்கோத்தொடும். ஒரு சிறிய கூட்டம் என்னை போலவே அவருக்காக காத்திருந்தது, ஒரு அரசு பேருந்தில் இருந்து இறங்கினர் இந்திய அணிக்காக விளையாடுபவர். ஒரு கணம் திகைத்தே போய்விட்டேன், Airportல் இருந்து அரசு பஸ்ஸில் வரும் அளவுக்குத்தான் இருக்கிறது இந்திய கால்பந்து அணியின் நிலைமை.

இன்னொருநாள் நண்பர் ஒருவர் விட்டிற்கு இப்தார் விருந்திற்கு அழைத்திருந்தார், அங்கு அவர் எனக்கு இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரரை  அறிமுகபடுத்திவைத்தார், அவர் இப்பொது லோடு ஆட்டோ ஓட்டுகிறார். இதுவே அவர்  ஒரு முன்னாள்     கிரிக்கெட் வீரராக இருந்திருந்தால், அந்த இப்தருக்கு கண்டிப்பா Benz  Car தான் வந்திருப்பார்.
இன்னொருநாள் ஒரு கால்பந்து கோச் க்கு விருது வழங்கும் வாய்ப்பு The People's Voice முலமாக கிடைத்தது, அவர் மிகவும் சாதரணமாக இருந்தார் , இந்திய அணிக்கும் மாநில அணிக்கும் பல வீரர்களை உருவாக்கியவர், இன்னும் அந்த வேலையை இலவசமாக செய்து கொண்டிருப்பவர், ஆனால் அவர் இன்னும் பொருளாதரத்தில் மிகவும் பின்தங்கி இருக்கிறார், இன்னும் சொல்லப்போனால் எந்த நிரத்தர வேலையும் இல்லாமல் கிடைக்கிற எல்ல வேலைகளையும் செய்கிறார். இதுவே அவர் ஒரே ஒரு வீரருக்கு பயிற்ச்சி கொடுத்து , மாநில அல்லது IPL அணிக்கு அந்த வீரார் தேர்ந்தெடுக்க பட்டாலே போதும் , ஒட்டு மொத்த அப்பா அம்மாவும் அவர் விட்டு வாசலில் குழந்தையோடு வந்து நிற்கும், தங்கள் மகனுக்கும் பயிற்சி கொடுக்க பணபையோடு.

நிற்க ... ரஷ்மித பட்ரோ (Rashmitra Patro)   ஓடிசவை சேர்ந்த இந்த   பெண்,  முன்னாள் இந்திய கால்பந்து   வீராங்கனை. இப்போது தெருஓரம் வெத்தலைபாக்கு கடை நடத்தி பிழைப்பு நடத்துகிறார், நம்மில் எத்தை பேருக்கு நினைவிருக்குமென்று தெரியவில்லை, வறுமை காரணமாக இந்திய கால்பந்து அணியின் முன்னாள் captain தாம்பரத்தில் மின்சார ரயில் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது .

இந்தியாவை 2020ல் வல்லரசக்காக போவதாக எல்ல அரசியல் வாதிகளும் வார்த்தை ஜாலம் வீசுகிறார்கள், உண்மை மிகவும் கசப்னதாக இருக்கிறது ... தகுதி இருந்தும் தெருவில் கிடக்கும் இந்த திறமைசாலிகளை ஊக்குவிக்காமல் எந்த வல்லரசை கட்டமைக்க போகிறீர்கள், கிரிக்கட் வீரர்களுக்கு கொடுக்கும் விருதுகளும் , வாய்ப்புகளும், கவுரவமும் மற்ற விளையாட்டிற்கு இல்லாதது ஏன்?  உண்மையிலே உங்கள் அரசியல் யாருக்கானது ?
  
வெண்ணிலா கபடி குழு படத்தின் ஓர் வசனம் இப்போது ஞாபகத்திற்கு வருகிறது…
“வேலயட்டுல சாத்திய கொண்டுவாரயால பணமுன்ன பீய திம்பியால, செரிக்குல்ல  தலைய அருத்திருவன்"

சாதி, வர்க்கம், பணம் உயர்ந்தவன் , தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இல்லது தகுதியனவனுக்கு வாய்ப்புகள் கொடுக்கும்போதுதான் இந்திய வல்லரசாகும் அது விளையாட்டோ பொருளாதாரமோ... 


தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!