Thursday, November 14, 2013

இப்படிக்கு அம்மு...




நகரத்து ஆட்டோ போல
நானும் என்  காதலும்
விருப்பமிலாமலும்!
விரும்பப்படாமலும் !!
ஓடி கொண்டே இருக்கிறோம்.

Thursday, August 15, 2013

அன்பு தோழிக்கு...

     தோழியெனக்கு வாழ்த்து சொல்லி ஒரு இந்திய கொடியை என் சட்டையில் ஒட்ட  வந்தபோதுதான்  தெரிந்தது எனக்கு இன்று இந்தியாவின் 67 வது சுதந்திர தினம் என்று... வேண்டாமென்று தடுத்ததால் என்னவோ இன்னும் அவள் என்னோடு  பேசவில்லை

தோழிக்கு.

எதை சுதந்திரம் என்கிறாய்? யாரை மகாத்தமா என்கிறாய்

உன் வாழ்நாளில் ஒருநாளாவது எங்கள் கிராமத்துப்பக்கம் வா எங்கள் வீட்டு நாய் கூட ஆதிக்க வீதிகளில் சுதந்திரமாய் நடக்கமுடியாது. எங்கள் காதல்  தண்டவாளங்களில் முடியும் கதை உனக்கு தெரியுமோ தெரியாதோ?
 67 ஆண்டு சுதந்திர இந்தியாவின்  நீங்கள் எங்களுக்கு கொடுத்த பரிசுயென்ன தெரியுமா இன்னும் உங்களின் மனித கழிவுகளை நாங்கள் தலையில் சுமந்து செல்வதுதான், தெரியுமா உனக்கு எங்களை அனுமத்திக்காத பள்ளிகுடங்கள், கோயில்கள்,பொது இடங்கள் எத்தனை என்று,  இன்னும் நாங்கள் தீண்ட தகாதவர்களாகவே இருக்கிறோம் என்பது தெரியுமா உனக்கு, எங்களில் நிலங்களை பணக்காரர்களுக்கு விற்று விட்டு எங்களை தீவிரவாதிகக்கிய வரலாறு உனக்கு தெரியுமா? எதை சுதந்திரம் என்கிறாய்? வெள்ளக்காரன்  விட்டு சென்ற எச்சத்தையா?.

  இன்னும் வேலைக்காய்  வெளிநாடுகளிடம்தான் நாம் கையெந்திகொண்டிருக்கிறோம்   என்பதை நான் சொல்லி உனக்கு தெரியவேண்டியதில்லை, உலக நாடுகள் எல்லாம் இந்தியாவை வெறும் குப்பையாக (விற்காத பொருளின் சந்தையாக) மட்டுமே பயன்படுத்துவது உனக்கு தெரியுமா? உலகளாவில் அடிமைப்பணி  செய்வதில் இந்தியர்கள் தான் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்பது உனக்கு தெரியுமா? இன்னும் இந்த நாட்டில் முஸ்லிம்களை  தீவிரவாதிகளாக சித்தரித்து அவர்கள் படும் வேதனை உனக்கு தெரியுமா ? பிரசவத்தின் பொது சாகும் தாய்மார்களின் எண்ணிக்கையும் , சாப்பாடு இல்லாமல் சாகும் குழந்தைகளின்  எண்ணிக்கையும் எவ்வளுவு என்று  உனக்கு தெரியுமா?  

உனக்கு ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன்... 
சுபாஸ் சந்திரபோஸ், பகத்சிங் ,வாஞ்சிநாதன் ,கட்டபொம்மன்,சுந்தரலிங்கம், போன்ற இலட்ச கணக்கான தியாகிகளின்  இரத்தத்தில் கிடைத்த சுதந்திரத்தை கக்கத்தில் குமாரிகளை இடுக்கிக்கொண்டு எப்போது காந்தி கையெழுத்து போட்டு வாங்கினாரோ அப்போதே வீழ்ந்துவிட்டது இந்தியர்களின் உண்மையான சுதந்திரம்
“உண்மையிலே இது பெற்ற சுதந்திரமில்லை வெள்ளகாரனால் வேண்டாமென்று வீசியெரியப்பட்ட சுதந்திரம்”.


தோழியே உனக்கு தெரியுமா என்  மிகபெரிய ஆசையே  கண்ணை மூடும்  முன் ஒருநாளாவது சுதந்திர இந்தியாவின் காற்றை சுவாசிக்க வேண்டுமென்பதே ...

                                                                                                        இப்படிக்கு 
                                                                                                            அம்மு 


Wednesday, July 3, 2013

அதிஷ்டம்



முதலிரவில்
தோற்றவனும்
நானும் ஓன்று
இன்பம் இருந்தும்
அதிஷ்டம் இல்லையே!

Wednesday, June 26, 2013

கண்ணீர்





திரைகளுக்கு  பின்னால்
ஒளிந்திருக்கும் என்
கண்ணீர்
உன் ஒற்றை பார்வைக்கு
நதியாய் பெருக்கெடுக்கிறது






Saturday, May 4, 2013

ஒரு தபால்காரனை போல...


அவளின் 

கடிதத்திற்காய் திறந்தேயிருக்கும் 
என் தபால் பெட்டியில் 
ஒரு பறவையின் இறக்கை 

எந்த பறவை யாருக்குயெழுதியதோ ...

கூட்டுக்கு சுள்ளியேடுக்கபோன
கணவனுக்கு மனைவியெழுதியதோ!

இரைதேடிபோன அம்மாவுக்கு 
குழந்தையெழுதியதோ!!

விட்டுப்போன காதலிக்கு 
காதலன்யெழுதியதோ!!!

நுனி இறகின் உலறா 
குருதிபோல்...
நானும் காத்திருக்கிறேன் - அந்த
பறவைக்காய்

ஒரு தபால்காரனை  போல...   





தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!