Saturday, December 17, 2011

அய்யோ..’ அப்பா...


          இன்னா நைனா உன்னால ஒரே பேஜர பூஜ்ஜி. காத்தல சொன்ன அந்த போட்டவுல புலி மேல குந்திக்கினவரு பேரு மணிகண்டன்னு... ஆயா சொல்லுது அந்த மொள்ளமாரி பேரு ஐய்யப்பன்னு...  மணிகண்டன் எப்புடி நைனா அயப்பனா மாறினாரு சொல்லு நைனா...

அட கஸ்மாலம்...அந்த பெமானியோட உண்மையான பேரு மணிகண்டன்தான் அவங்க அம்மா வச்சது (யாருகண்ட) ... அப்பால அவரு பெரிய ரவுடியா நாம்ப டவுசர் பாண்டி நைனா மாதிரி, அவுங்க  பேட்டையில இருக்கிற புள்ளபுச்சிகள அந்த பேமானியும் அவன் செக்களிகளும் சேந்து அடிச்சி திருடி வயிறு வளத்திருக்கன் இந்த முடிச்சவிக்கி. இவன பாத்ததும் அந்த அப்பாவி சனங்க அயோ அப்பான்னு ஓடி ஒளிஞ்சிருக்காங்க... இந்த அயோ அப்பாதான் அவன் கடவுளான பின்னால   ஐய்யப்பன மாறிடுச்சி...




அண்ணன் பாலாவின் கார்ட்டூன் அதை நிருப்ப்பதை நீங்கள் மேலே பார்த்து உருதி படுத்திகொள்ளுங்கள்

Tuesday, December 6, 2011

இந்திய ஒருமைபாட்டிற்கு வைக்கப்பட்ட உலை...

                    இந்துமதவெறியர்களால் 1992 டிசம்பர் ஆறு அன்று பாபர்மசூதி இடிக்கப்பட்டு இன்றோடு 19ஆண்டுகள் முடிந்து விட்டன. பாபர் மசூதி இடிக்கப்பட்டது இந்திய ஒற்றுமைக்கும்,இறையாண்மைக்கும்,   விடப்பட்ட மிகபெரிய சவால்... இந்தியாவின் ஒற்றுமையை நிலைநாட்டவும், பாபர் மசூதியை மீண்டும் கட்டவும் அதன் முழு உரிமைகளையும் இசுலாமியர்களுக்கு வழங்கவும்... பாபர் மசுதியையை இடித்த கயவர்களை தண்டிக்கவும் குரல் கொடுப்போம்... போராடுவோம்...

இந்தியாவில் பாபர் மசூதி கட்டிமுடிக்கபடதவரை...
இசுலாமியர்களுக்கு சமயுரிமை கொடுக்கபடதவரை...
இசுலாமியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தடுத்து நிறுத்தபடவரை...
இந்தியா ஜனனயநாடு என்றோ, இந்தியா ஒரு சுதந்திர நாடு என்றோ,
இந்தியாவின் இறையாண்மை பற்றிபேசவோ. எந்த நாய்களுக்கும்  தகுதி  இல்லை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து...

Sunday, December 4, 2011

மழை...


மாலை நேரம்
பூங்கா ஒன்றிற்குள் நுழைந்தேன்...

உடல் சுமை குறைக்க
ஒருகூட்டமும்
மன சுமை இறக்க
ஒருகூட்டமும்
அங்கும் இங்குமாய்...

உதிர்ந்துபோன நினைவுகளை
அழகாய் கொர்த்துகொண்டிருன்தது
வயதான தம்பதிகள்...

மரங்களெல்லாம்
காதலர்களுக்கு மறைவிடமாய்
சிலமரங்கள்-
கன்னைமூடிகொண்டன
சிலமரங்கள்-
ஓரகன்னல் பார்த்தது கொண்டன
சிலமரங்கள்-
அவர்களயே பார்த்து கொண்டிருந்தது...

குழந்தைகளின்
உதைகளுக்கு அஞ்சி
சிதறி ஓடிகொண்டிருந்தது
பந்துகள்!

வேலைதேடுபவன்...
காதலைதொலைத்தவன்...
அன்புக்கு ஏங்குபவர்கள்...
புர்க்களை பித்து கொண்டிருந்தனர்

கடலைவியபாரி
பூக்காரம்மா
பிச்சைகாரர்கள்
காற்றுகிழிய கத்திகொண்டிருந்த்னர்...

நள்ளிரவில்
வானம் துளைத்து
விண்மீன் தேடிகொண்டிருந்தபோது 

மேகம் வெடித்து
ஓவென கொட்ட தொடங்கியபெருமழை...
 பூங்காவிற்குவெழியே -
அடித்து தள்ளியது
மனிதர்கள் இறக்கிசென்ற
சுமைகளையும்...
என்னையும்...

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!