Monday, July 11, 2011

விழுதுகளின் விழா...


அன்று -
விதையாய் ஊன்றப்பட்டு -பெரும்
விருட்சமாய் உயர்ந்து ..
50 வது ஆண்டு பொன் விழா காணும்
பெட்டை குளம்...
இல்லை இல்லை
பெருமை மிகு குளம்.
கா.மீ .சா மேல்நிலை பள்ளியே

இன்று உலகம் உன்னை வாழ்த்துவது இருக்கட்டும்
அதற்க்குமுன்-
விழுதுகளாகிய நாங்கள் உன்னை
வணங்குகிறோம்

பெற்ற பிள்ளைகளுக்கு வேண்டுமானால்
பெற்றோர் முதன்மை தெய்வமாக இருக்கலாம்
பல "பேர் " பெற்ற எங்களுக்கோ...
கல்லாமையே இல்லாமையாக்கிவரும்
கா.மீ .சா.பள்ளி கல்வியாளர்களே
முழுமை தெய்வங்கள்

பக்தர்களுக்கு வேண்டுமானால்
மெக்கா,மெதீனா,
ஜெருசலம் ,பெத்லகம்
காசி, இராமேஸ்வரம்
கயா,கண்டி- என
புண்ணிய தலங்கள் பலவாக இருக்கலாம்
பழைய மாணவர்களான எங்களுக்கோ
நீ- வீற்றிருக்கும்
பெருமைமிகு பெட்டைகுளமே
ஒரே புனிதன் தலம்

தரணியில்-
காதலர்களுக்கு வேண்டுமானால்
தாஜ்மஹால் உலக அதிசயமாக இருக்கலாம் !
தென்னக கல்வியாளர்களுக்கோ-
எங்கள்  கா.மீ .சா.பள்ளியே ஒரே அதிசயம், அற்புதம்

அறிவின் பிறப்பிடமே எங்களை
ஆளாக்கிய அகிலமே...
பொன்விழா காணும்
பொக்கிசமே...
இன்றல்ல...

நாங்கள் இம்மண்ணை விட்டு மறைந்தாலும்
என்றும் உன்புகழ்
எம் பகுதி மக்களின் மனதை விட்டுமறையாது...

வாழையடி வாழையாய் நிலைத்து
ஆல்போல் தழைத்து நிற்க
விழுதுகளாய் வீற்றிருப்போம்.
  
 (நான் படித்த பள்ளியின் ஐம்பதாவது ஆண்டு பொன் விழா, விழுதுகளின் விழாவாக கொண்டபட்டது. அதன்  பொன் விழா மலர்க்காக நான் எழுதிய வாழ்த்து கவிதை .)

May 08, 2010

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!