Monday, July 11, 2011

சொன்னதை சொல்லும் கிளிபிள்ளை தீர்ப்பு: ஆமையடி மகேஷ்








1984 டிசம்பர் 3.  இதயம் உள்ள இந்தியன் யாரும் மறக்கமுடியாத சோகமா அமைந்துவிட்டது மத்திய பிரதேசத்தின்   போபால் நகரில் இயங்கிய யூனியன் கார்பைடு கெமிக்கல் தொழிற்சாலையில்  இருந்து கசிந்த ஐஷோ சயனேட் என்ற விஷ வாயுவால் சுமார் இருபத்திதைந்தாயிரம் பேர்  பலியானார்கள். ஐந்து லட்ச்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். இன்று வரை அவர்களுக்கு பாதிப்புகள் தொடரவே செய்கிறது. இன்று போபால் நகரில் பிறக்கும் குழைந்தைகள்கூட எதாவது ஒரு ஊனத்த்துடனே பிறக்கிறது இவ்வளவு பெரிய குற்றத்திற்கு போபால் நகரசிறப்பு   விரைவு!    நீதிமன்றம் 26 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு சொல்லிருக்கிறது.

 
குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மொத்தம் எட்டு பேர் அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். மிச்சமுள்ள ஏழுபேருக்கும் தலா  இரண்டு ஆண்டு சிறைதண்டனையும்! இரண்டு லட்சம் அபராதமும் விதித்து வரலாற்றில் சிறப்பு சேர்க்கிறத் திர்ப்பபை வளங்கிருக்கிறது காங்கிரஸ் அரசு.
  
இருபத்திதைந்தாயிரம்பேர் சாவுக்கும், ஐந்து லச்சத்துக்கும் அதிகமானோர் வாழ்க்கை பறிபோனதற்கு காரணமானவர்களுக்கு கொடுக்கபட்ட  தீர்ப்பு பார்த்து உலகமே சிரிக்கிறது. இவ்வளவு கேவலமான, மக்கள் விரோத  இந்த தீர்ப்பை வழங்குவதற்கு இருபத்திதைந்து வருடம் எடுத்துகொண்டது இந்திய அரசு.

இந்த இடத்தில் ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன் குற்றம் நடந்ததும், திர்ப்பும் வழங்கிருப்பதும் கண்ணியமிகு காங்கிரஸ் ஆட்ச்சியில்தான் அதுதான் குற்றவாளிகளுக்கு இவ்வளவு கடுமையான (கொடுமையான) வரலாற்றுமிக்க தீர்ப்பை வழங்கிருக்கிறது காங்கிரஸ் கோர்ட் (மன்னிக்கவும் இந்திதிய கோர்ட்)

இந்த தீர்ப்பில் ஒரு வரிகூட ஆண்டர்சனை பற்றி குறிப்பிடவில்லை என்பது மிக பெரிய கொடுமை.

தீர்ப்பு ஒருபக்கம் கிடக்கட்டும். இந்த தீர்ப்ப மதிச்சாவது ஏழுபேரும் போலீஸ் கைதுபன்னுவங்கன்னு பார்த்தா அதுவும் நடக்காது போலிருக்கே? இத்தனை பேரின் சாவுக்கும் முக்கியகாரனமான யூனியன் கார்பைடு தலைவர். அமெரிக்காரன் வாரன்ஆண்டர்சன் என்னை நீங்க கைதுபன்னமுடியாது உங்க நாட்டு டுபாக்கூர் சட்டம் என்னை (அமெரிக்கர்களை) கட்டுபடுத்தாதுன்னு திமிரவேற பேசுறான்.

மும்பை தாக்குதலுக்கு மூளையா செயல்பட்ட அமெரிக்ககாரன் ஹேட்லிய  இந்தியாவால ஒன்னும் பண்ணமுடியல. அவன இந்திய கொண்டுவந்து விசாரிக்ககூட இந்தியாவல முடியல இதெல்லாம் Mr.ஆண்டர்சனுக்கு நன்னா தெரியும். உங்க சட்டமும் புண்ணாக்கும்ன்னு அவா சிரிப்பா சிரிக்கிரா.

போபால் சம்பவம் நடந்தத்தும் ஆண்டர்சன் (1894 டிசம்பர் 7) இந்தியா வந்தார். பின்னர் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டார். கொஞ்ச நேரத்தில் விடுதலை செய்யப்பட்டு அன்றைய மத்திய பிரதேச முதல்வர் திரு. அர்ஜுன் சிங் தயவால் தனி விமானத்தில் டெல்லி அனுப்பபட்டார் அங்கிருந்து அன்றைய பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் ராஜ மரியாதையோடு அமெரிக்கா அனுப்பப்பட்டார்

அண்டர்சன் தப்பி செல்வதற்கு மத்திய பிரதேச முதல்வர் அர்ஜுன் சிங் உதவினார் என்பதற்கும்,    மத்திய பிரதேசத்தில் இருந்து அவர் முதல்வரின் தனி விமானத்தில் டெல்லிக்கு அனுப்பப்பட்டதற்கும். அப்போது போபால் மாவட்ட ஆட்ச்சியாளர இருந்த திரு.மோத்திசிங். விமான போக்குவரத்து துரையின் போபால் பிரிவு தலைவர் கேப்டன் R.S. சோதி, முதல்வரின் தனி விமானத்தை இயக்கிய கேப்டன் அலி ஆகியோர்  இன்னும் சாட்ச்சியாக இருக்கிறார்கள்.

இருபத்திதைந்தாயிரம் மக்கள் மரணத்துக்கு காரனமனவர்களுக்கு ஏன் இவ்வளவு சாதாரண தண்டனை?
குற்றவாளியென்று தெரிந்தபின்னும் ஆண்டர்சனை அமெரிக்காவிற்கு அனுப்பியதின் நோக்கமென்ன?

மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசப்புக்கு விரைவாக தீர்ப்பு வழங்கி மரணதண்டனை விதித்த இந்திய அரசு இருபத்திதைந்தயிரம் மக்களின் மரணத்துக்கு காரணமான அண்டர்சன் உள்ளிட்டோர்களுக்கு மரண தண்டனை விதிக்காததுயேன்? ஒருவேளை இந்த அப்பாவி மக்களும் ஸ்டார் ஹோட்டலில் தங்கிருந்தால் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கபடுமோ என்னவோ? காங்கிரசைதான் கேட்கவேண்டும்.

எப்போது இந்தியாவில் ஏழைகளுக்கும் நீதி கிடைக்கும். நம் நாட்டில் நீதிபதிகளெல்லாம் கிளிபிள்ளைகளாகவே இருக்கிறார்கள். ஆட்ச்சியளர்களின் அடிமையாகவே இருக்கிறார்கள் எப்போது இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கும் அமெரிக்காவிடமிருந்து...

போபால் மக்களுக்கு நீதி கிடைக்க போராடுங்கள் தோழர்களே. -நன்றி
June 17, 2010

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!