Wednesday, October 26, 2011

தீபாவளி...





























எவன்செத்தாலும்
குடி கூத்து
நரகாசுரன் காலத்திலேயே
ஆரம்பித்துவிட்டது
தமிழனின் பண்பாடு|!

தமிழர்களை
அறிவளியக்கவே
ஏழாம் அறிவுபோன்ற
படங்கள்!!

திதி நாளை
துக்கநாளாக கடைபிடிக்கும்
தமிழன்
நரகாசுரன் திதியைமட்டும்
ஊத்தி கொண்டாடும்
வினோதம்!!!

நாம் வெடிக்கும்
ஒவ்வொரு வெடியும்
ஒரு குழந்தை தொழிலாளியை
உருவாக்கி- அவன்
வறுமையும்  வலியும்தான்
நாம் பற்றவைக்கும்போது
வேடித்துசிதருகிறது

இருக்கிறவன்
தின்று தூங்குகிறான்
இல்லாதவன்
ஏங்கி சாகிறான்

எப்போது புதுஆடை
என்ற ஏக்கத்தில்
அழுது தூங்கி போகும்
குழந்தைகளுக்கு நாம்
சொல்லுவோம்
ஒருநாள் நரகாசுரனும்
வதம் செய்வான்
அதுதான் நம் தீபாவளி...
 
 


No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!