Monday, December 13, 2021

காற்றில் வரும் ஞாபகங்கள் (என் பழைய பரணியிலிருந்து )

   



அர்ஜுன் மீது எனக்கு எப்போதுமே பாசம் அதிகம், அவனுக்கும்தான். ஆனால் நாங்கள் இருவரும்  கடைசியா பேசி  ரெண்டுவருசத்துக்குமேல இருக்கும். இப்ப அவனுக்கு என்னை ஞாபகம் இருக்குமான்னு தெரியல.  கிட்டத்தட்ட இரண்டுவருசமா ஒன்னா தூங்கி, ஒன்னா சாப்பிட்டோம்.   அவனும் நானும் பழக ஆரம்பிக்கும்போது எனக்கு இருபத்திரண்டுவயசு,  அவனுக்கு மூணுவயசு.  அர்ஜுன், எங்க மச்சான் பையன். நா மச்சானோட லேப்பில வேலபாத்துக்கிட்டுருந்தேன். அக்காவுக்கு E.B.ல  வேலை, அர்ஜுன் எல்.கே.ஜிக்கு போயிட்டுயிருந்தான். ஸ்கூல் முடிஞ்சி பெரும்பாலும் மாலை நேரங்களில் நானும் அவனும் ஒன்னாத்தான் இருப்போம், ரோட்டு ஒரமா நின்னுகிட்டு போறவார வண்டியெல்லாம் வேடிக்கை பாப்போம். எதாவது பொண்ணுபோனா, பிகிற் போதுன்னு சொல்லுவேன்; அவனும் தலையாட்டுவான்.

சைக்கிள்ல ரெண்டுபேரும் ரௌண்டடிப்போம், ரோட்டோரத்தில எதாவது கோயில் இருந்தா கன்னத்தில போட்டுக்குவான். என்னன்னுகேட்டா, சாமின்னு சொல்லுவான்.

யய்ய அது சாமியில்ல கல்லு

 அம்மா, சாமின்னு சொன்னா

 உன்கிட்ட பொய்சொல்லிருக்கா

 அப்ப அது…

 பொம்ம.

 சாமிய பத்தி தப்பா பேசினா கண்ண குத்தும்னு அம்மா சொன்னா

 இப்ப நம்ள குத்திச்சா

 தலையாட்டினான்)

 அப்பனா, நீ சாமிமேல கல்லதூக்கிபோடு

 ஒரு சின்ன கல்ல தூக்கி போட்டேன்

 மாமா  நானும்

சின்ன கல்ல தூக்கி போட்டான். வா போவோம் சாமி செத்து போச்சி. மச்சான், அக்காவவிட அவனுக்கு எம்மேல பாசமும் நம்பிக்கையும் அதிகம்.

ஒருநாள் அவனும் மச்சானும் டாக்டரை பாக்கபோயிருக்காங்க. டாக்டர்கிட்ட நின்ன நர்சபாத்து பிகிருனு சொல்ல, மச்சான் என்னைய அடிக்காத கொரதான்.

ஸ்கூல் மிஸ்ஸபாத்து பிகிருனு சொல்லிருக்கான். யாரு சொல்லித்தந்தான்னு கேட்டதுக்கு மாமான்னு சொல்ல அந்தம்மா நோட்டுல, பையன நல்லவன்கிட்ட  மட்டும்  சேரசொல்லுங்கன்னு எழுதி அனுப்பிருச்சி. இத வாசிச்ச எங்க அக்கா, ஒரே ஏச்சி, இவனபாத்தா நல்லவன் மாதிரி அக்காகிட்ட ஒட்டிகிட்டுயிருந்தான். எல்லா தப்பயம் எங்கூட சேந்துசெய்வான்; ஆனா அக்கா, மச்சான் திட்டுனா நல்லவன் மாதிரி மூஞ்சவச்சிக்கிட்டு என்னைய மாட்டிவிட்ருவான்.

ஒருநாள் வீட்டு பக்கத்தில ஒரு பச்ச பாம்பு  தலையில மட்டும் அடிபட்டு கிடந்துச்சி,

  யய்ய இங்கவால

 என்ன

 அந்த பாம்ப புடி

 நீ புடி

 வாலை புடித்து தூக்கினேன்

 கீழ போடு நா புடிக்கேன்

 பாம்பை தூக்கி என்னையவே பயங்காட்டினான் .

 அவன் என்மேல் வைத்திருந்த நம்பிக்கை எனக்கு அப்பதான் தெரிஞ்சிச்சி.  

அடிக்கடி எங்களுக்குள் சின்னசின்ன சண்ட வரும்; கொஞ்சம் கழிச்சி சேந்துக்குவோம். விளையாட்டு, சாப்பாடு, தூக்கம்னு சந்தோசமா போன எங்க வாழ்க்கையில அவனுக்கு முழாண்டு பரிட்ச முடிஞ்சி, லீவுக்கு பாட்டி வீட்டுக்கு போனான். நானும் சினிமா கனவுல சென்னைக்கு வந்து ஆறேழுவருஷமாச்சி. 

இப்போதும் சென்னையில் அவன் வயது குழந்தைகளை பார்க்கும்போது காற்றில் அவன் ஞாபகங்கள்  வந்துபோகிறது ...


  மே 08, 2010

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!