Saturday, September 17, 2011

மரணதண்டனைக்கு விடைகொடுப்போம்...

     


                            உலகில் பல நாடுகளின்      சட்டபுத்தகங்களிலிருந்து  மரணதண்டனைவிடை பெற்று விட்டது, கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 22 நாடுகள் மரண தண்டனைக்கு தங்கள் சட்டப் புத்தகத்திலிருந்து விடைகொடுத்துவிட்டன. இப்போது 95நாடுகளில் மரணதண்டனை சட்டப்படி ஒழிக்கப்பட்டு விட்டது.  40 நாடுகளில் மரணதண்டனை வழங்கபடுவதில்லை, ஐய்ரோப்பிய ஒன்றியம் முழுதும் (பெலாரஸ்என்ற நாட்டைத் தவிர) மரணதண்டனை  ஒழிக்கப்பட்டு விட்டது. மரணதண்டனை நிறைவேற்றும் நாடுகளின் எண்ணிக்கையும் 58ஆக குறைந்துள்ளது.  அமெரிக்காவில் பல மாநிலங்களில் மரணதண்டனை விடைபெற்றுவிட்டது  சில மாநிலங்களில் மட்டுமே மரணதண்டனை அமுலில் உள்ளது. மரணதண்டனை அமுலில் உள்ள சீனாவில் அந்நாட்டின் உச்சநீதி மன்றம் தவிர்க்கவே முடியாத வழக்குகளில் மட்டும் மரணதண்டனைவிதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ரஷ்யா நாட்டில் மரணதண்டனை சட்டத்தில் இருந்தாலும் 2009ஆம் ஆண்டு முதல்  மரணதண்டனை அமுல்படுத்துவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது உலகில் பலநாடுகளும் மரதண்டனைக்கு விடைகொடுத்துவரும் நிலையில் இந்தியாவில் மட்டும் (உலகில் மிக பெரிய ஜனநாயநாடு!!!) மரணதண்டனை இருப்பது நமது துரதிஸ்டமே. மரணதண்டனைக்கு எதிரான குரல் இப்போது இந்தியாவில் பெரியஅளவில் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது இந்தியாவின் தலைமாட்டில்-காஷ்மீரில்(13டிசம்பர்2001. காலை 11.30மணி. பாராளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கும்போது தாக்குதல் நடத்துவதற்கு உதவியதாக திரு.அப்சல் குரு என்பர் மீது குற்றம் சுமத்தப்பட்டு மரணதண்டனையை எதிர் நோக்கியிருப்பவருக்கு  -ஆதரவாக)இந்தியாவின் கால்மாட்டில்-தமிழ் நாட்டில் (திரு.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு மரணதண்டனையை எதிர்நோக்கியிருக்கும் முருகன் சாந்தன் பேரறிவாளனுக்கு-ஆதரவாக)...   நாமும் மரணதண்டனைக்கு எதிராக குரல் கொடுப்போம்


மரதண்டனை குற்றங்களை தடுக்குமா?

                      தண்டனைகள் வழங்க படுவதன் நோக்கமே தண்டிக்கப்பட்டவர் திருந்துவதற்கும், அவருக்கு கொடுக்குபடும் தண்டனை மற்றவருக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பதேயாகும் இது உண்மைஎன்றல் இரண்டயிரவருடமாக தண்டிக்கபட்டுவரும் மனிதஇனம் இன்று முழுமையாக திருந்திய குற்றமில்லாத சமுகமாவவே இருந்திருக்கவேண்டும். இன்னும் தண்டனைகள் தொடர்கிறதே!. தண்டனைகள் ஒருபோதும் மனிதனை மாற்றாது, திருத்தாது  என்பது என்னுடைய அசைக்கமுடியாத நம்பிக்கை.  நான் படித்த சில தகவல்கள் உங்களுக்காக,  இங்கிலாந்தில் சிறு திருடர்களுக்கு கூட மரண தண்டனை விதிக்கப்பட்டு வந்த காலகட்டத்தில் நிகழ்ந்த ஒரு சுவரசியமான சம்வத்தை நினைவு படுத்துகிறேன் (தத்துவவாதியான ஆர்தர் கொட்ஸ்லர் அவர்கள் சொன்னது ) குட்டித் திருட்டுகள் புரியும் நபர்களை மரண தண்டனை தடுக்கும் என்ற எண்ணத்தில்தான் மரண தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு திருடன் தூக்குமேடையேற்றப்படும் போதும் மக்கள் கூட்டம் கூட்டமாக அக்காட்சியை காண வருவர். அவ்வாறு ஒரு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அக்காட்சியைக் கண்டுகொண்டிருந்த மக்களில் 63 நபர்களின் பணம் அந்நிகழ்ச்சியின் போது திருடப்பட்டதாக காவல்துறையினருக்கு செய்திகள் கிடைத்தது. மரண தண்டனை, குற்றத்தைத் தடுக்காது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு

                   K.T.தாமஸ் அவர்கள், மரணடதண்டனை பற்றி கூறியது  (முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி)(ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நான்கு கைதிகளுக்கு மரண தண்டனை விதித்த ஆயத்தின் தலைமைப் பொறுப்பை வகித்தவர்.) மரண தண்டனையின் தாக்கத்தையும் ஆயுள் தண்டனையின் தாக்கத்தையும் எவரும் ஒப்பீடு செய்து பார்த்ததில்லை ஆனால் நம்மிடம் திருவிதாங்கூர் மற்றும் கொச்சி மாகாணங்களைச் சார்ந்த பதிவுகள் உள்ளன. திருவிதாங்கூர் அரசர்தான், 1940இல் முதலில் மரண தண்டனையை ஒழித்தார். பின்னர் அதே வருடம் கொச்சியின் அரசரும் இதே போன்றதொரு அறிவிப்பை விடுத்தார். பின்னர் இந்த மாகாணங்கள் 1950இல் இந்திய குடியரசில் இணைந்த போது இங்கு மரண தண்டனையையை மீண்டும் அமுலுக்கு கொண்டுவரவேண்டியிருந்தது. இது இவ்வாறிருக்க, இவ்விரு மாகாணங்களிலும் 1940லிருந்து 1950 வரையிலும், 1950லிருந்து 1960 வரையிலும் நடந்தேறிய கொலைகளை குற்றவியல் நிபுணர்கள் ஒப்பீட்டு ஆய்வு செய்தனர். மரண தண்டனை நிலுவையில் இல்லாத காலத்தில் இருந்ததை விட 1950லிருந்து 1960 வரையிலான காலத்தில் கொலை விகிதம் அதிகமாக இருந்ததைக் கண்டறிந்து அவர்கள் திகைப்புற்றனர். குற்றம் நிகழ்வதிலிருந்து தடுக்கும் கருவியாக மரண தண்டனை அமையும் என்ற கருத்தில் உண்மையில்லை என்பதை இது தெளிவாக்குகிறது

2010ம் ஆண்டில் மட்டும் சீனாவில் 5000 பேருக்கும் , ஈரானில் 252பேருக்கும், வட கொரியா 60பேருக்கும், ஏமன் 53பேருக்கும், அமெரிக்கா 46பேருக்கும், சவுதி அரேபியா 27பேருக்கும், லிபியா 18பேருக்கும், சிரியா 17பேருக்கும். மரணதண்டனை கொடுத்துள்ளது இதோடு அந்தநாட்டில் குற்றங்கள் குறைந்து விட்டதா? இல்லையே கிட்டத்தட்ட இதே அளவுள்ள இன்னொரு கூட்டம் மக்கள் மரணதண்டனையை எதிர்நோக்கி சிறைக்குள் இருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மையே, உலகிலே  அரபுநாடுகளைபோல மற்ற எந்தநாடுகளிலும் மிக கொடூரமான மரணதண்டனை வழங்கபடுவதில்லை, மனிதனை நடுரோட்டில் வைத்து சுட்டுகொல்வது, சிறைசெதம் செய்வது, கைகளை வெட்டுவது இந்த செய்திகளெல்லாம்   அந்தநாட்டின் ஊடகங்களில் காட்டபடுகிறது youtube.com
போன்ற இணையதளகளில் பார்க்கலாம். ஏன் தண்டனைகளே  மக்கள் முன்னிலையில்தான் வழங்கபடுகிறது அப்படி இருந்தும்   அந்தநாட்டில் குற்றங்கள் குறைந்து விட்டதா இல்லையே? இன்னும் அந்த நாடுகளில் மரணதண்டனைகள் தொடரதனே செய்கிறது? ஆட்டோ சங்கர் மரணதண்டனைக்கு பிறகு தமிழ் நாட்டில் ஆள் கடத்தல் இல்லையா? கற்பழிப்பு இல்லையா? கொலைகள் இல்லையா? அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை இன்றைய தலைமுறைக்கு தெரிந்ததுதானே. முன்பைவிட தமிழ் நாட்டில் தவறுகள் அதிகரிக்கவே செய்கிறது என்பதுதானே உண்மை . 

குற்றங்களை நியாபடுத்துவது இந்த கட்டுரையின் நோக்கமல்ல மரணம் என்பது ஒரு மனிதனின் வாழ்வின்  முடிவு. எல்ல முடிவுகளும் ஒரு ஆரம்பத்தை விட்டுசெல்வதால் மரணதண்டனை நிச்சயமாக தீர்வாகாது
 "கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்று வந்துவிட்டால் இந்தஉலகமே குருடாகிவிடும்" என்ற காந்தியத்தை நினைவில்கொள்ளுவோம்.

சட்டங்களும் மரணடண்டனைகளும்:    

            இந்தியாவில் கொலை, தீவிரவாதம் போன்ற மரண நிகழ்வுகளுக்குதான் மரணதண்டனை வழங்கபடுகிறது.            இந்தியாவின் சட்டங்களால் முழுபாதுகாப்பைபெருவது சதிபடைத்தவர்களும் மேல்தட்டு மக்களுமே, கொலைவழக்கு மற்றும் பிற    வழக்குகளில், குற்றவாளிகளாக கருதப்படுபவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் இவர்களில் 90 விழுக்காட்டினர் ஏழைகளும் சமூகத்தின் கீழ் வர்க்க மக்கள் மட்டுமே, இரண்டு அடிப்படியில்தான் இந்தியாவில் மரணதண்டனை வழங்கபட்டிருக்கிறது, ஓன்று பாதிக்கப்பட்டவர் பணக்காரர்,அரசியல்வாதி  இரண்டு பதிக்கபட்டவருக்காக மக்கள் ஓன்று பட்டு குரல் கொடுக்கம்போது இந்த இரண்டிலும் கண்டிப்பா உண்மையான குற்றவாளிகளில் தண்டிக்கப்பட்ட வரலாறு இதுவரை இந்திய வரலாற்றில் இல்லை. அப்பாவிகளை தண்டித்துவிட்டு உண்மையான குற்றவாளிகளை காப்பாற்றுவதே இந்தியாவின் நீதிதுரைவரலாறு இதுவரை ஒரு பணக்கரனுக்குகூட இந்தியாவில் மரணதண்டனை வழங்கப்பட்டதில்லை சில வரலாறுகள் உங்களுக்காக

1.காந்தி சுட்டு கொல்லப்பட்டபோது தடைசெய்யப்பட்டRSS, PJB என்றபெயரில் இந்த நாட்டை பத்துவருடம் இந்த நாட்டை ஆண்டுவிட்டது, அப்போது வழங்கப்பட்ட தண்டனை, தடை என்னாயிற்று?    
2.இந்திராகாந்தி சுட்டுகொல்லபட்டபோது சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3000அப்பாவி சீக்கியர்கள்  கொல்லபட்டர்கள் அவர்களுக்கு இதுவரை நீதிகிடைக்கவில்லை

3.ராஜீவ் காந்தி கொலையில் நேரடிதொடர்புடைய அத்தனைபேரும் செத்துபோனபிறக்கும், விசாரணை இன்னும் முடியாதநிலையில் சந்திர சாமீ, சுப்ரமணிய சாமீ போன்றவர்கள் மீது குற்றம் சுமத்தபட்டும் அவர்களை விசாரிக்காமலே  மூன்று அப்பாவிகளுக்கு மரணதண்டனை கொடுக்க துடித்துகொண்டிருக்கிறது இந்திய நீதிமன்றம்

4.போபால் விசவாய்வு தாக்கப்பட்டு இறந்துபோன 25000 அப்பவிமக்களுக்கும் பாதிக்கப்பட்ட 100000 மக்களுக்கும் இதுவரை எந்தநீதியும் கிடைக்கவில்லை அதற்க்கு காரணமான அமெரிக்ககாரன் ஆண்டர்சன் மற்றும் ஏழு இந்திய தொழிலதிபர்களுக்கும் கிடைத்த தண்டனையை நாடேஅறியும் (25000பேர் சாவுக்கு காரனமனவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்படவில்லை)
 

5.நூற்றுக்கு மேற்ப்பட்ட அப்பாவிகள் பலியான மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய  காவித் தீவிரவாதீ சுனில் ஜோஷி,  முன்னாள் இராணுவ அதிகாரி புரோஹித், மற்றும் பெண் சாமியார் சாத்வி பிரக்யா,  சாமியார் ஆசிமானந்த்துக்கு இதுவரை எந்ததண்டனயும் வழங்க படவில்லை

6.மும்பை குண்டுவெடிபில் தொடர்புடைய அமெரிக்ககாரன் ஹெட்லியை இந்தியாவில் கொண்டுவந்து விசாரிக்ககூட முடியவில்லை

7.தர்மபூரி வேளாண் கல்லுரி மாணவிகள் உயிரோடுவைத்து எரித்ததற்கு காரணமாயிருந்த ஜெயலலிதாவுக்கு தண்டனையில்லை அவர்  முதலமைச்சர், மதுரை தினகரன் அலுவலகத்தில் உயிரோடுவைத்து எரித்ததற்கு காரணமாயிருந்த அழகிரிக்கு தண்டனையில்லை அவர்   மத்திய அமைச்சர்

8.நொய்டா  நிதாரி கிராமத்தில் சிறுமிகள் கற்பழிப்பு, படுகொலைகள் எனகுற்றம் சாட்டப்பட்ட   பணக்காரன்  மொகீந்தர் சிங் பாந்தர்  மற்றும் வீட்டு வேலைக்காரன் சுரேந்தர் கோலிக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது இதில் இப்போது வழக்கம் போல பணக்காரன் தப்பித்துவிட வேலைக்காரன் மரணத்தைஎதிர்நோக்கி இருக்கிறான்

9. 13டிசம்பர்2001பாராளுமன்றத் தாக்குதலுக்கும் தனக்கும் எந்ததொடர்பும் இல்லை தான் நிரபராதி   எனக்காக வாதாட ஒரு வழக்கறிஞர் நியமித்து தன்னை காப்பாற்றுங்கள் என்று பத்திரிக்கையார்ளர்கள் முன் கதறிய  திரு.அப்சல் குரு மீதான குற்றம் சரிவர விசாரிக்கபடமலே  மரணதண்டனையை வளங்கபட்டிறிக்கிறது (அவருக்கு ஆதரவாக வழக்கறிங்கர்களும் ஆஜராகவில்லை)

இந்தியாவில் சட்டதிட்டம், தண்டனையெல்லாம் ஏழைகளுக்கு மட்டும்தான். இது வரை ஒரு பணக்காரன்கூட தண்டிக்கப்பட்டதில்லை என்பதே உண்மை. நீதித்துறை காவல்துறை இரண்டுமே பணக்காரர்களின் அடிமை. ஒரு வழக்கில் வாதாடும் வழக்கறிஞரை பொறுத்தே வழக்கில் தீர்ப்பு இருக்கும்  என்று நீதியரசர் கிரிஷ்னையார் சொன்னதை நினைவுபடுத்துகிறேன், பணம் இருக்கிறவன் ரம்ஜட் மலாணியை யைத்து வாதாடுவான் பணம் இல்லாதாவன் நிலைமை தண்டனை மட்டுதான் இப்படிப்பட்ட நிலையில் வழங்கப்படும் நீதி! நமக்குள் எழுப்பும் கேள்வியே நாம் மரணதண்டனை வேண்டாம்மென்போம்,

இந்திய சட்ட புத்தகத்திலிருந்து மரணதண்டனைக்கு விடைகொடுப்போம்.


"குற்றம் சாட்டப்பட்டவர் உண்மையிலேயே  நிரபராதி என்று தெரிந்தும்  கொலை வெறிநிறைந்த மக்கள் கூட்டம் ஒன்றை சமாதானப்படுத்துவதற்கு  நிரபராதி ஒருவருக்கு  மரணதண்டனை வழங்கினார் நீதிபதி. இது 2000 வருடங்களுக்கு முன்னர் எருசலேம் நகரில் நடந்தது. அந்த நீதிபதியின் பெயர் பொந்தியு பிலாத்து என்றும் அந்த கைதியின் பெயர் நாசரேத்தைச் சேர்ந்த இயேசு என்றும் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய தேவை இல்லை!"

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!