Monday, September 12, 2011

அடங்க மறுத்து அத்துமீராமல் அடிமைத்தனம் ஒழியாது...




                     தியாகி இம்மானுவேல் சேகரன் நினவுதினத்திற்கு அஞ்சலி செலுத்தவந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் அவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தியது, அதனை தொடர்ந்து தலித் மக்கள் போராட்டம், போலீஸ் கண்முடித்தனமான துப்பாக்கிசூடு, என் உறவுகள் 7 பேர் மரணம்  இந்த செய்தியெல்லாம் படிக்கும்போது நெஞ்சம் வெடித்து சிதறுகிறது. ஊடகங்களும், அறிவிஜிவிகளும் பொதுசொத்தை செதபடுத்தியதால் காவல்துறை தற்பாதுகாப்பு நடவடிக்கைக்காக தூப்பாக்கி சூடு நடத்தியதாக வியாக்கியானம் கொடுக்கிறார்கள். அறிவிஜிவிகளுக்கும், ஊடகங்களுக்கும் நாம் முன்வைக்கும் கேள்விகள்...

1.தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவுநாள் பதட்டமான நாள் என்றல்   தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் அவர்களுக்கு மாலை(12 -09 -11 ) 3 மணி முதல் 5 மணி வரை என்னமைத்துக்கு அரசு அனுமதிகொடுத்தது?

2.முத்துராமலிங்கம் குருபுஜைக்கு வரும் எல்ல தலைவர்களுக்கும் ரவுடிகளுக்கும் உரிய பாதுகாப்பு கொடுத்து அவர்களின் கால்களை நக்கும் போலீஸ் துறை இம்மானுவேல் சேகரன் குருபூஜையில் இந்த பாதுகாப்பை கொடுககத்துயேன் இது ஜாதி வெறிஎன்று சொல்லாமல் வேறேன்னசொல்ல?

3.கடந்த மூன்று நான்கு நாட்களாவே பரமக்குடியில் போலீஸ் மூகமிட்டு ஒரு பதட்டத்தை மக்களிடத்தில் ஏற்படுத்தியதின் நோக்கமென்ன? எங்கு வைத்து தலித்களை சுட்டுகொல்ல இடம் குறித்ததோ போலீஸ் நாய்கள். இதைப்பற்றியெல்லாம் பத்திரிகை துறை  மக்களுக்கு தெரிவிக்காமல் மறைத்துயேன்?

4.எல்லா கட்சி தலைவர்களும் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு வருவதற்கு அனுமதியிருக்கும்போது தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் அவர்களுக்கு மட்டும் அனுமதி மறுத்தது ஏன் ?

5.பல்லாயிரக்கணக்கில் மக்கள் அங்கே கூடியிருக்கும் வேளையில் ஒரு சமூகத் தலைவரை அங்கே செல்லவிடாமல் தடுப்பது அப்பகுதியில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் என்பது காவல்துறையினருக்கு தெரியாதா? இல்லை காவல்துறை ஜாதிவெறியோடு நடந்துகொள்கிறதா?

6.தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் அவர்களை (12 /09  /11 ) காலை சுமார் 10 மணியளவில் வல்லநாடு அருகே காவல்துறையினர் வழிமறித்துக் கைது செய்துள்ளனர். காரணம் கேட்டால், ஜான்பாண்டியன் பரமக்குடி சென்றால் வன்முறை உருவாகும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். ஆனால், ஜான்பாண்டியன் பரமக்குடிக்கு செல்லாமலேயே மிகப் பெரிய வன்முறை காவல்துறையால் அரங்கேற்றப்பட்டுள்ளது இது திட்டமிட்ட சதியா? இல்லை ஜாதி வெறியா?

7.தியாகி இம்மானுவேல் சேகரன் நினவுதினத்திற்கு அஞ்சலி செலுத்த பல்லாயிரகணக்கான மக்கள் வருவார்கள் என்று தெரிந்துதானே அனுமதிகொடுத்தது காவல்துறையும், அரசும். பின்பு திடீரென அனுமதி மறுத்து 144 தடை உத்தரவு போட என்ன காரணம்?

8.முதல் நாள் இரவே (10 /09 /11 ) பரமக்குடி அருகே பழனிக்குமார் என்கிற பள்ளி மாணவன் ஒருவனை காரண காரியமில்லாமலேயே சாதிவெறிக் கும்பல் படுகொலைசெய்து. தியாகி இம்மானுவேல் சேகரன் நினவு தினத்தில் பரமகுடியையே பதட்டமான பகுதியாக மற்றிவைத்திருன்தது சாதிவெறி கும்பல். இவ்வளும் தெரிந்தும் அனுமதிகொடுத்ததுயேன்? போதிய பாதுகாப்பை காவல்துறை மேற்கொள்ளததுயேன்?

9.அறுபதுஆண்டுகால சுதந்திர இந்தியாவில் வெறும் ஆயிரகணக்கான மக்கள் கூட்டத்தைகூட கலைப்பதற்கு துப்பக்கிசூடுமட்டும்தான் வழியேன்றல், மனித உயிர்தான் விலையேன்றல் இது காவல்துறைக்கு அவமானமில்லையா இதைபற்றி ஒரு வார்த்தைகூட  ஊடகங்களும் அறிவிஜிவிகளும் பேசாமல் போத்திக்கிட்டுயிருப்பதேன்?  இதே துப்பாக்கி சூடு நிகழ்வை உயர் ஜாதி கூட்டத்தில் உங்களால் செய்யமுடியுமா? இல்லை அப்படியொரு வரலாறுதான் உண்டா ? எங்கே போனது உங்களின் ஊடகங்களின் தர்மம்? 

10.வருடம்தோறும் முத்துராமலிங்கம் குருபூஜைன்போது வன்முறைகள் நடக்கத்தான் செய்கிறது ஏன் கடந்த வருடம் ஜெயலலிதாவின் காரெல்லாம் கல்வீசிதாக்கப்பட்டது.  அவ்வளவு பெரிய கூட்டத்தியே "லத்தி ஜார்ஜ்"  மூலம் கட்டுபடுத்திய காவல்துறை இப்போது மட்டும் துப்பாக்கியை எடுத்ததுயேன்? இந்த செய்தியெல்லாம் ஊடகங்களுக்கு எப்படி தெரியாமல் போனது? இதெல்லாம் தெரிந்தும் ஊடகங்களுக்கும். அறிவிஜிவிகளும் தலித்கள் மீது மட்டும் குற்றம்சொல்லுவது ஜாதி வெறி இல்லையென்றல் இதற்க்கு பெயரென்ன?

11.தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு நாளை சீர்குலைப்பதர்க்கவே பழனிக்குமார் என்ற அப்பாவி தலித் மாணவனை கொலைசெய்தவர்களை  இதுவரை காவல்துறை கைது செய்யாததுயேன்?  கொலைக்கு   உரிய நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் அமைதியை ஏற்படுத்த அக்கரை காட்டாத காவல்துறையைபற்றி ஊடகங்களும் அறிவிஜிவிகளும் பேசமுன்வராததுஎன்?

12.இந்த சம்பவத்திற்கும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் அவர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாதபோது அவரை இதுவரை விடுதலை செய்யததுயேன்?

13.  பரமக்குடி தாக்குதலுக்கு நீதிவிசாரணை கிடையாது. வருவாய் வட்றட்சியர் விசாரிப்பார் என்று ஜெயலலிதா  சட்டமன்றத்தில் பேசியதிலிருந்து இது திட்டமிட்ட படுகொலை என்று ஊடகங்களுக்கும் அறிவிஜீவிகளுக்கும் தெரிந்திருந்தும் தலித்கள் மீதும் மட்டும் குற்றம் சுமத்துவது உங்கள் ஜாதிவெறி இல்லையேல் இதற்க்குபெயரென்ன?

14.வேண்டுமென்றே கலவரத்தையும் தூண்டிவிட்டு எம் அப்பாவி உயிர்களை பறித்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததுயேன்?

15.போலீஸ் செய்த தவறுகளை மறைப்பதற்காக  பள்ளி கல்லூரிகளுக்கெல்லாம் விடுமுறை கொடுத்துவிட்டு தமிழகத்தை ஜாதி போர்க்களம் போல் காட்டவேண்டிய அவசியமென்ன? இதையெல்லாம் பற்றி எழுதாமல் ஊடகங்களும் அறிவிஜீவிகளும் நக்கி கொண்டிருப்பதேன்?

16.பொது சொத்தை செதப்படுத்துபவேனுக்கெல்லாம் துப்பாக்கி குண்டுதான்யேன்றல் பொதுமக்களின் சொத்துகளை கோடிகோடியாய் அபகரித்து வைத்திருக்கும் கருணாநிதி ஜெயலலிதாவை இன்னும் ஏன் சுட்டுகொல்லவில்லை இதை கேட்பதற்கு எந்த ஊடகத்திர்கவது திராணி இருக்கிறதா எந்த அறிவுஜீவிகளுக்காவது ஆண்மை இருக்கிறதா?

இப்போது நடந்திருப்பது அரசின் திட்டமிட்ட இன படுகொலை. இந்த கலவரமும், அரசின்துணையோடு நடந்தஜாதிவெறி படுகொலையும் உறவுகளே நமக்கு உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான். நாம் இந்தியன் இல்லை நாம் தமிழன் இல்லை நாம் திராவிடனும்  இல்லை நாம் தலித்துகள், பள்ளனாய் பறையனாய் வான்னானய் அருந்ததியர்களாய் பிரிந்துகிடைக்கும்வரை இந்த ஜாதி ஓநாய்கள் நாம்மை வேட்டையாடத்தான் செய்யும். நாம் தலித்துகளாய்  ஒன்றுபடுபோம்... நம் எதிரி நாம் எந்தாயுதத்தை எடுக்கவேண்டுமோ அதை ஆனவனே  தீர்மானித்துவிட்டான் இப்போது நம் கையில் இருக்கும் ஆயுதம் நம் எதிரி தந்தது, ஜாதி பிரச்சினைக்கு வன்முறைதான் தீர்வு என்றல் நாமும் ஆயுதம்  எடுப்போம்... மரணங்களும் ஆயுதங்களும் நமக்கு ஒன்றும் புதிதல்ல. விட்டுக்கு ஒருவன் கள பணியாற்றுவோம்... களபலியாகுவோம்... நம் விடுதலையை நாமே தீர்மானிப்போம்... எந்த அரசும் எந்த சட்டமும் நம்மை அடக்காது. அடக்கமுடியாத நிலையை நாம் உருவாக்குவோம் "உயர் சாதிக்கரனோடு நாம் செய்துகொள்ளும் சமாதனம் நம் தலைமுறைக்கு கொடுக்கும் ஒரு கோப்பை விசத்திற்கு சமம் "  இனியும் அடிமைகளாய் வாழ்வதைவிட வீரனாய் சாவோம் நமது போராட்டத்தை ஊடகங்களும்,அரசும் அறிவிஜிவீகளும், தேசதுரோகம், வன்முறை எப்படி வேண்டுமானாலும் சொல்லட்டும்... எவனை பற்றியும் எதை பற்றியும் நமக்கு தேவையில்லை...    வன்முறையும் ஆயுதமும் தான் தீர்வென்று வந்துவிட்டபிறகு நாமும் ஆயுதம் எடுப்போம்.
     
அடங்க மறுத்து அத்துமீராமல் அடிமைத்தனம் ஒழியாது...

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!