Saturday, November 12, 2011

லிபிய சுதந்திரம் ஒரு கேள்விகுறி?




நான் சர்வதேசத் தலைவன்
அரபு ஆட்சியாளர்களின் முதல்வன்
ஆப்ரிக்காவின் அரசன்
முஸ்லிம்களின் இமாம்
                      -லிபியா அதிபர் மம்மர் கடாபி

லிபிய போராட்டத்தின்போது உயிருக்கு பயந்து பாதாழசாக்கடையில் பதுங்கி கிடந்த கடபியயை ஒரு தெரு நாயை சுட்டு கொல்வதைபோல் சுட்டுகொன்றபோது காற்றில் நம்முன் பறந்துவந்த வார்த்தைகள் இவை

இன்று லிபிய மக்கள் சர்வாதிகாரத்தை ஒழித்து சுதந்திரலிபியாவில் தங்கள் வாழ்வதாக பிரகடனபடுத்திவிட்டார்கள்

காடபியிடம் இருந்து பெற்ற விடுதலையை  லிபிய மக்கள் அமெரிக்கா என்னும் ராட்ச்சசனிடம்  பறிகொடுத்திருப்பதுதான் சுதந்திரமா!  இந்த மிருகம் இன்னும் கொஞ்ச நாளில் தன் சுயரூபத்தை காட்டதொடங்கும்போது எங்கே ஓடி ஒழிவார்கள் அப்பாவி லிபிய மக்கள்? "சுதந்திரம் என்பதற்கு கெளரவம்" என்பதுதான் அர்த்தமே தவிர  அமெரிக்காவின் அடிமையென்று பொருளல்ல... இசுலாமிய நாடுகள் தங்கள் நாட்டில் இருக்கும் சர்வாதிகராட்ச்சிக்கு எதிராக போரடதுனிந்திருப்பது வரவேர்க்கவேண்டியதுதான். நாம் வரவேற்கிறோம்.   அதற்காக அவர்கள் அமெரிக்காவை துணைக்கு தேர்தெடுத்திருப்பது முட்டாள்தனமான முடிவோயென      அஞ்சதோன்றுகிறது . இப்போது லிபியாமீது அமெரிக்கா காட்டும் அக்கறை ஆடு நனைய ஓநாய் வருத்தபட்டகதைதான் "ஆதாரமில்லாமல் ஐய்யர் ஆத்தில் இறங்கமாட்டார்"  அமெரிக்காவும் இசுலாமிய நாடுகளின் எண்ணை வளங்களை குறிவைத்தே காய் நகர்த்துகிறது இது தெரிந்தும் புரட்ச்சி என்றபெயரில் அமெரிக்காவுடன் கைகோர்த்திருப்பது லிபிய மக்களின் அறியாமை என்பதைத்தவிர வேறென்ன சொல்ல... உலகின் ஒட்டுமொத்த எண்ணை வளத்தில் இரண்டு சதவிதம் லிபியாவில் இருக்கிறது, இந்தவளத்தின் மிது தங்களிக்கிருந்த ஆசையை லிபியமக்களின் மீதான பாசமென  சப்பைகட்டு கட்டுகிறது அமெரிக்கமற்றும் ஐரோப்பிய நாடுகள். லிபிய புரட்ச்சிகரர்களுக்கு பிரிட்டிஷ் எண்ணை நிறுவனமான வீடோல் இங்க்லாந்து அமைச்சர் ஆலன் டங்கன் மூலமாக 5000கோடி ரூபாய் கொடுத்துள்ளது(சொந்த நாட்டையே தீக்கிரையாக்க ஆயுதம் வாங்க ).  அரபு நாடுகளின் எண்ணை வளங்களை தங்களின் நேரடிகட்டுபட்டில் கொண்டுவரும் முதற்கட்ட முயற்சியில் இறங்கியுள்ளதது அமெரிக்கமற்றும் ஐரோப்பிய எண்ணை நிறுவனங்கள் .

எது எப்படியோ லிபியாவில் ஜனநாயக ஆட்ச்சி மலர்ந்துவிட்டது! இப்போது மலர்ந்திருப்பது ஜனநாயக ஆட்ச்சியா இல்லை அமெரிக்காவின் ஏகதிபத்தியா ஆட்சியா என்பது போகபோகதான் லிபிய மக்களுக்கும் உலகிற்கும் தெரியவரும் 

 42 ஆண்டுகால கடாபியின் ஆட்ச்சிகலத்தில் ஏற்ப்பட்ட எண்ணற்ற வளர்ச்சிகள்என அப்ப்ரிக்கநாட்டிலே லிபியாவில்தான் கல்வியறிவு பெற்றவர்கள் அதிகம், ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற மருத்துவ கட்டமைப்பு, ஒவ்வொரு லிபியனுக்கும் சொந்தவீடு, கல்வியும் சுகாதாரமும் நாட்டின் முக்கியமாக ஒன்ற்றகருதபட்டது. சின்ன தொழில்கள் மக்களிடமும் பெரியதொழில்கள் அரசிடமும் இருக்க வேண்டுமென்கிற பொருளதரவியுகம். 2010 கூட லிபிய உள்ளநாட்டு உற்பத்தியில் 10.6 சதவிதம் வளர்ச்சி என அடிக்கிக்கொண்டே போகலாம், இதே மக்கள்தான் கடாபியை ஆபிரிக்காவின் சே என அழைத்தார்கள். இறந்து போன கடாபியின் பெருமை அல்லது சிறுமை பேசி இனியென்ன பயன் எல்லாம் முடிந்துபோயிற்று.

கடாபி லிபிய வளர்ச்சிக்கு பல தொலைநோக்கு திட்டங்கள் செய்திருந்தாலும் கடைசிவரை ஜனநாயகம் என்றவார்த்தைக்கு அர்த்தம் தெரியாததால் மக்களால் தூக்கி எரியபட்டிருக்கிறார் எந்த அடக்குமுறைகளும் மக்கள் போராட்டங்கள் முன் நிற்கமுடியாது என்பதற்கு கடபியே பெரிய உதாரணம்...மக்கள் போராட்ட புயலுக்குமுன்னல் எந்த சர்வதிகாரமும், அடக்குமுறைகளும், ஆட்ச்சியாளர்களும் நிர்க்கமுடியாமல் தூக்கிஎரியபடுவார்கள் இந்த நிலை கண்டிப்பாக ஒருநாள் அமெரிக்காகவும் வரும்... தொலைவில் இல்லாத காலமது .

இனி லிபியாவின் நிலைமை!!!???

ஜனநாயகத்துக்காக சர்வாதிகாரத்தை வீழ்த்தி ஏகாதிபத்தியத்திடம் சரண் அடைந்து இருக்கிறார்கள் லிபிய மக்கள். வேறென்ன சொல்ல?

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!