Wednesday, November 2, 2011

ஜீவாம்மா...



       ஆண்மா மீது எனக்கு நம்பிக்கையில்லை அப்படியொன்று இருந்தால் ஜீவாம்மா ஆண்மா அமைதிகொள்ளவேண்டுகிறேன். என் இறைவனோடு அறுபதாண்டுகள் வாழ்ந்து  எங்கள் கண்களை குளமக்கிசென்றிருக்கும் ஜீவாம்மாவின் நினவுதேடி இறைவனின் இசையோடு நாங்களும் பயணிக்கிறோம். இளையராஜாவுக்கு இசைதான் உயிர் என்பதாலோ என்னவோ இசையின் கையில் இளையராஜாவை ஒப்படைத்துவிட்டு ஜீவாம்மா ஒய்வுஎடுத்துகொண்டார்போலும்  என்ன ராகம் அமைத்து ராஜாவின் சொகத்தைநம்மால் போக்கமுடியும்.  அவருக்குஆருதல் சொல்ல நமக்கு எது வார்த்தைகள். இசையே இசையை தோற்றிகொள்ளட்டும் ஜீவம்மா மீது கொண்டிருந்த காதலில் இசை இறைவன் இளையராஜா எழுதிய முதல்பாடல்  இதயகோயில் படத்தில் இடம்பெற்ற இதயம் ஒரு கோயில் பாடல்.பாடல்கள் முழுவதும் ஜீவா அம்மாமீது இசை இறைவன் வைத்திருந்த காதல் இசையாய்  சிதறிக்கிடக்கும். இறைவனின்   உழைப்புக்கும் உயர்வுக்கும் உறுதுணையாக இருந்து தன் வாழ்க்கையையே இசைக்காக அற்பணித்து
கொண்ட அம்மாவின் தியாகம் ஈடு இணையில்லாதது. இசையே இசையை தோற்றிகொள்ளட்டும்...


இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நானும் சூட்டுவேன்...

(இதயம் ஒரு }
ஆத்ம ராகம் ஒன்றில்தான் வாழும் உயிர்கள் என்றுமே
உயிரின் 'ஜீவ' நாடிதான் ராகம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதில்லை
எனது 'ஜீவன்'  நீதான்  ஒன்றுதான் என்றும் புதிது
(இதயம் ஒரு...)

காமம் தேடும் உலகிலே 'ஜீவன்' என்னும் கீதத்தால்
ராம நாமன் மீதிலே நாதத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏற்றினாரம்மா
அவர் பாடலின் 'ஜீவன்' அதுவே அவரானார்
என் பாடலின் 'ஜீவன்' எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்றுதான் எங்கே பிரிவது


(இதயம் ஒரு...)

நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்
சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா
எனது பாதை வேறு உனது பாதை வேறம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் 'ஜீவன்' எனை ஆண்டாயே
வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே


(இதயம் ஒரு...)



http://www.youtube.com/watch?v=m07GG32P0cE

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!