Tuesday, March 13, 2012

இனியும் தொடரவேண்டுமா இலவசங்கள்?

              

                      வாங்கும் சக்தியை விட இலவசத்திர்க்காக ஏங்கும் சக்தியே இப்போது தமிழக மக்களிடம் மேலோன்கிநிர்க்கிறதுமுன்பெல்லாம் என் கிராமத்துக்கு போகும்போது தங்கள் வருமானத்தில் அவர்கள் மொத்தமாய் வாங்கமுடியாத பொருட்களை installmentல்    மிக்சி, டிவி, கிரைண்டர், கட்டில் போன்ற தேவைகளுக்கு தன்னுடைய உழைப்பின் சேமிப்பில் இருந்து வாங்குவதை பார்க்கும் பொது மிகுந்த மகிழ்ச்சிஆனால் இப்போதெல்லாம் அதை பற்றியே பேச்சுகளே இல்லை எல்லாமே இலவசமாக தமிழக அரசுகளே கொடுத்துவிட்டது. விளைவு சோம்பேறித்தனமும் சேமிப்மின்மையும்  கூடவே வளர்ந்துவிட்டது எல்லாம் தமிழக அரசுகளே கொடுத்திவிட்டதால் அவர்களின் சேமிப்பு உயர்ந்திருக்கிறதா? வாழ்கை தரம்தான் மாறியிருக்கிறதா? அப்படி ஒரு அதிசயமும் நிகழவில்லை அப்படிஎன்றல் அவர்கள் வியர்வை சிந்தி உழைக்கும் வருமானம் எங்கே போகிறது
        
                    இன்றைக்கு ஒரு இந்தியனின் சராசரி நாள் வருமானம் 111 ரூபாய் என்கிறது அரசு புள்ளிவிபரங்கள் ஆனால் ஒரு குவாட்டர் விலை 80 ரூபாய் கிராமத்துகாரர்கள் அதை வாங்குவதற்கு பேருந்து செலவு குறைந்தபட்டசம் 10 ரூபாய். ஊறுகாய், மிச்சர் செலவு 15 ரூபாய், பீடி சிகரட் செலவு 20 ரூபாய் இப்போது அவரின் கையிருப்பு -14 ரூபாய் இதே நிலையில் தொடரும் ஒரு தின குடிகாரனின் ஓராண்டு கடன் 5110ரூபாய்  இது ஒரு கிராமத்து குடிகாரனின் ஆண்டு வருமான இழப்பு, இதே கணக்கை ஒரு நகரத்துவாசியோடு ஒப்பிட்டால் போதையடிக்காமலே  நமக்கு தலைசுத்துது. அதாவது ஒரு சாதாரண பாரில் குவாட்டர் விலை 150 ரூபாய் பறப்பது நடப்பது ஊர்வது இதன்விலை குரந்தபட்ச்சம் 50 ரூபாய் சிகரட் 30 ரூபாய் இப்போது அவரின் கையிருப்பு -119ரூபாய். இதே நிலையில் தொடரும் ஒரு தின குடிகாரனின் ஓராண்டு கடன் 43435ரூபாய் இது ஒரு நகரத்து குடிகாரனின் ஆண்டு வருமான இழப்பு. தமிழக மக்கள்தொகை இப்போது கிட்டத்தட்ட ஆறரைகோடி, டாஸ்மார்க் ஆண்டு வருமானம் கிடடத்தட்ட முப்பதாயிரம் கோடியைதாண்டி ஓடிகொண்டிருக்கிறது!!! (கண்ணகட்டுது சாமி) தற்போது தமிழக அரசின் கடன் ஒருலட்சம் கோடி... டாஸ்மார்க்கின் வருமானத்தில்தான் தமிழக அரசுகள் இலவசங்களை அள்ளி எரிந்துகொண்டிருக்கிறது. நம் பணத்தையே நமக்கு தருவதற்கு பெயர் இலவசமா?    தமிழக அரசு இதுபோன்ற இலவசங்களை கொடுக்காவிட்டால் இன்னும் எத்தனயோ வீடுகளில் டிவி பேன் போன்ற பொருட்டகளை அவர்களால் (ஏழைகளால்)   வாங்கமுடியாமலேயே போயிருக்ககூடும் என்பதை ஒரு வாதத்திற்காக எற்றுகொண்டால்கூட அதனால் நாம்பெறும் நன்மைகளைவிட தீமைகளே அதிகம்...

             ஒரு சின்ன ஒப்பிடு பார்ப்போம்.  எனக்கு தெரிந்து பதினைந்து வருடத்திற்கு முன்னால் ஒரு கிளாஸ் சாராயத்தின் விலை இரண்டு ரூபாய் ஊருகாய் இலவசம், அதிகபட்ச்சமாக ஒரு நபர் மூணு கிளாஸ் குடிக்கமுடியும் பீடி தீப்பட்டி என எல்லாம் சேர்த்தால் சராசரி ஒரு குடி மகனுக்கான செலவு 10ரூபாய் அப்போது  சராசரி வருமானம் நாள் ஒன்றுக்கு முப்பது என்று வைத்துகொண்டால் கூட அவரின் சேமிப்பு தினமும் 20ரூபாய் ஆனால் இப்போது நிலைமை தலைகிழ் நகரமயமாக்கல், உலகமயமாக்கல், தாரளமயமாக்கல், ஐந்தாண்டு, பத்தாண்டு வளர்ச்சித்திட்டங்கள் என ஏதேதோ அரசு கண்கட்டி வித்தை காட்டுகிறது ஆனால் இன்னும் இந்தியாவில் வறுமை கோட்டின் கீழ் வசிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. வறுமையை ஒழிக்க இந்திய அரசு வருடத்திற்கு பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்குகிறது (டாஸ்மார்க் வருமானத்தைவிட குறைவுதான்) ஆனால் இன்னும் வறுமை ஒழிந்தபாடில்லை!
          தமிழகத்தை பொறுத்தவரை நம்முடைய வளர்ச்சிக்கு மிகபெரிய சாபகேடு அரசு தரும் இலவசங்கள்தான் இந்த இலவசங்களுக்கு செலவிடும் பணத்தை கிராமப்புறங்களில் புதிய தொழில் தொடங்குவதற்கு, இலவச கல்வி கொடுப்பதற்கு பயன்படுத்தினாலே நாம் விரைவிலேயே அடுத்தகட்டத்தை எட்டமுடியும், இதை சரியாக செய்துகொண்டிருக்கும் சீனா கடந்த முப்பதாண்டில் தன் நாட்டில் அறுபது சதவிதம் வறுமை கோட்டின் கீழ் இருந்த மக்களை பத்து சதவிதம்மாக மாற்றீருக்கிறது இதே நிலைமையில் சீனா போனால் இன்னும் ஐந்தாண்டில் சீனாவில் மக்கள் வறுமையில் இருக்கமாட்டர்கள் ஆனால் இந்தியாவின் நிலைமை!!!!

இன்னும் இலவசங்களை மக்களுக்கு அள்ளி இறைப்பதைவிட மக்கள் நலனுக்கான புதிய தொழில் மற்றும் புதிய திட்டங்களை வகுப்பதுதான் மூலம் அடுத்த தலைமுறையாவது இலவசங்களுக்கு கையேந்தாமல் நிற்கவும் சுயமரியாதையோடு வாழவும் அது வழிவகுக்கும்...நாம் அரசிடம் இருந்து இலவசமாய் எதிர்பார்ப்பது கல்வியையும், மருத்துவத்தையும்தானே தவிர ஆடுமடுகளையல்ல.

“டாஸ்மார்க் பக்கத்தில் இலவசமாய் சுடுகாடு கட்டுங்கப்பா குடித்துவிட்டு குடிமகன் அம்மனமாய்  அங்கேயே படுத்துகொள்ளட்டும்”

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!