Sunday, March 4, 2012

புகைப்படம்

                       

                           பொழுது இவ்வளவு கொடூரமாக விடியுமென்று கனவில்கூட நினைத்தது இல்லை. ஜீவா விபத்துல இறந்துட்டான் என்ற செய்தியை என்னால் இன்னும் நம்பமுடியவில்லை  இல்லாத தெய்வங்களெல்லாம் வேண்டுகிறேன் இது கனவாக இருக்கவேண்டுமென்று. நண்பர்களுக்கு போன் செய்து உருதிபடுத்திகொண்டேன் இறந்தது அவனேதான். ஜீவா என் பத்துவருட நண்பன் முதன்முதலாய் ஒரு சினிமா ஆடியோ ரிலிஸ் விழாவில்தான் அவனை  பார்த்தேன் துரு துரு என்று அங்கு இங்குமாய் ஓடி  புகைப்படம் எடுத்துகொண்டிருந்தான் பி ஆர் பக்கத்தில் நின்றுகொண்டு வருகிற அத்தனை வீ  பி களையும் தன்  காமரக்குள் நிரப்பிகொண்டிருந்தான்.   மாப்ள குட்டி என்னை அவனுக்கு அறிமுகபடுத்தி வைத்தான் வழக்கம்போல வெள்ளக்கருனுக்கு பிறந்தவன்போல ஹாய் சொல்லியே எங்கள்  நட்ப்பு ஆரம்பித்தது அன்று முதல் இன்றுவரை எங்கள் நடப்பு தொடர்கிறது. அவனுக்கும் திருநெவேலி என்பதால் எங்கள் நடப்பு இன்னும் வேகமாய் இருக்கமாய் வளர்ந்ததுஅவனின் புகைப்படம் போலவே அவனும் அழகு, தண்ணி, தம்மு, பொண்ணு எந்த பழக்கமும் இல்லாதவன். சீராய் வெட்டியமுடி, கட்டுமஸ்தான உடம்பு, சிரித்தமுகம், வெள்ளை சட்டை, டைட் புளு  ஜீன்ஸ் அவனின் தனியடையாளம்.

ஆம்புலன்ஸ்ல இப்பதான் பாடியை எத்திகிட்ட்றிருக்க்கங்க நா அவங்கள அனுப்பிவிட்டுட்டு ரூமுக்கு வந்துடுறேன் நீபோறப்புட்டு  ரெடியா இரு நா வந்துடனேயே கிளம்பிறலாம் எப்படியும்  ஆம்புலன்ஸ் மெதுவாதான் போகும் . நம்ம பசங்களும் வராங்க நாம கார்ல போயிறலாம், குட்டி சொல்லிகொண்டிருக்கும்போதே எனக்கு தலைசுற்றியது நேத்து ராத்திரிகூட இரண்டுபேரும் ஒன்னாதான் சாப்பிட்டோம். அதுதான் ஜீவா சாப்ட்ட கடைசிசாப்படா... வேகமாய் கிளம்மி குட்டிக்ககா காத்திருந்தேன்

மாப்ள கிளம்பு பசங்க வந்திட்டாங்க, டிரைவரன்னே எவ்வளவு நேரத்தில திருநெல்வேலி போகமுடியும் அவர் எட்டு மணிநேரத்துல போகமுடயும்ன்னு சொல்லிமுடிப்பதற்குள் இன்னும் சிக்கிரமா போங்க நா ஜீவாபக்கணும். மாப்ள பதட்டபடாத நாம அவங்களுக்கு முன்னால போயிடரலாம். அண்ணே டிசல் எதாவது போட்னும்முன்ன போட்டுகாங்க குட்டி பேசிகொண்டிருக்கும்போதே மாப்பள எப்படி மாப்ள நடந்தது எங்கவச்சிமாப்ப்ள. போருர்ல வச்சி எந்தவண்டி தட்டிச்சின்னே தெரியல ஸ்பாட்லே இறந்துட்டான் முகம் சுத்தமா சதஞ்சிபோச்சி  பைக் நோருங்கிருச்சி அவன் காமராபேக் மட்டுதான் போளச்சிருக்குகெமர எங்கமாப்ள . காமரா எங்கிட்டதான் இருக்கு குட்டி பேக் தொரக்கிரதுக்குள்ள கையைவிட்டு காமராவை வெளியே எடுத்தேன்

நேத்து நானும் அவனும் கடைசியா போன பேசன்ஷோவோட போட்ட அத்தனையும் அதில் சிரித்து கொண்டிருந்தது ஒவ்வொரு போட்டவும் வோவொரு அழகு. வைடு, வித்பிளாஷ், வித்தௌட், ஜூம் லோ மிடில் எல்ல அங்கிளிலும் அவன் எடுத்தபுகைபடம் சிரித்து கொண்டிருந்தது இன்று காலையில் அத்தனை பத்திரிக்கையிலும் அவன் எடுத்தபோட்டதான் வந்திருக்கு கடைசியாய் பெசன்ஷோ மேடையில் நான் நின்று அவன்  எடுத்தபோட்டாதன் அவனின் கடைசிபோட்ட காரில் முட்டி வென்று ஆழவேண்டும்போலிருன்தது 

மாப்ள எந்திரி ஊருவந்திருச்சி  அழுது அழுது தூங்கிப்போன என்னை குட்டி எழுப்பியபோது வண்டி ஜீவா வீட்டுமுன்னால் நின்றுகொண்டிருந்தது ஊரே இழவு வீடு போல இடிந்து கிடந்தது ஜீவாவின் அம்மா அழுவதற்கு திராணியில்லாமல் திண்ணையில் சாய்ந்திருந்தார்   என்னை பார்த்ததும் தங்கச்சி அழதொடங்கிவிட்டாள் அவளுக்கு ஆறுதல் சொல்ல எனக்கெது வார்த்தைகள், மாப்ள வண்டி இன்னும் அரமணி நேரத்தில  வந்திருமாம் இங்க பத்து நிமிசத்துக்கு மேல பாடிய வைக்கூடாது உடனே தூக்கிரனும் மணி இப்பவே பதினொன்னு அச்சி ராத்திரி புறாவும் இங்க வச்சா பாடி  தாங்காது,  நீ சும்மா சும்மா அழாத நாமதான் ஆகிற வேலயபாக்கணும் ஊர் பெரியவன்கிட்ட பேசி எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்தாகிவிட்டது குட்டி சொல்லிகொண்டிருக்கும்போதே ஆம்புலன்ஷும் வந்துவிட்டது.

 ஜீவா பாடி ஊருக்குள் வந்ததுதான் தாமதம் ஊரே கதரதொடங்கி விட்டது,  கடைசியா எம் புள்ளையோட மொகத்த காட்டுங்க மொகத்த காட்டுங்க அம்மா கதரதொடங்கினாள் ஜீவாவின் முகம் மொத்தமா சிதஞ்சி போயிருச்சி இதபாத்த அம்மா இன்னும் சங்கடப்படுன்னு அம்மவகிட்டவே நெருங்க விடாம புடிச்சிகிட்டச்சி அதே ஆம்புலன்ஸ்ல ஏத்தி கல்லர தோட்டத்துக்கு கொண்டுபோதச்சி இன்னையோட மூணுநாளு ஆச்சி  நானும் குட்டியும் ஊருக்கு கிளம்ம தயாரானோம். அம்மா நீங்க கவலப்படதிங்க நாங்க இருக்கோம் நாங்களும் உங்களுக்கு ஒரு ஜீவாதான்  உங்களுக்கு என்ன வேணும்னாலும் எங்களுக்கு கூப்பிடனும் அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் ஆறுதல் சொல்லிவிட்டுகிளம்போது,  யயையா ஜீவாவோட போட்டயேதவது இருந்த ஒன்னு கொடுத்திட்டு போங்க நா என்கமரவை பாக்கிறேன் குட்டி அவன் கேமராவை பாக்கறான் ஜீவாவோட கேமராவையும் பாத்தாச்சி ஒரு போட்டோகுட இல்லை ஊரையெல்லாம் போட்ட எடுத்த  ஜீவா கடைசிவரை அவனையொரு போட்டோஎடுக்கமலே செத்துபோயிருந்தான்
     





No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!