Friday, February 24, 2012

அரசபயங்கரவாதம்...

சென்னையில் வங்கி கொள்ளையர்களை! சுட்டு கொன்றது சரியா தவறா?

நண்பர் ஒருவர் எழுதியது உங்களுக்காக (பண்புடன் குழுமத்தில் நண்பர்  உதயன்.மு எழுதியது)

கடந்த சில வாரங்களுக்கு முன்பிருந்தே எப்போதும் இல்லாமல் அந்த பகுதியில் போலீஸ் நடமாட்டம் அதிகம் இருந்தது,

ஜனநெருக்கடி அதிகம் உள்ள இந்த பகுதியில் வீட்டு வாசலில் வெளியே கார், ஸ்கூட்டர் சத்தம் கூட தெளிவாக கேட்கும் அப்படி இருக்கையில் துப்பாக்கி சத்தம் ஊரையே எழுப்பி இருக்கும்.

தீப்பெட்டி சைஸ் வீட்டில் வெளிச்சம், காற்று இல்லாமல் இருக்கவே முடியாது, நாங்கள் மிகவும் அவதிபட்டுள்ளோம் மின்சாரம் இல்லாத சமயங்களில் தெருவில், மாடியில் படுத்து உறங்கி இருக்கோம், ஆகையால் மின்சாரத்தை தூண்டித்திருக்கலாம்,

மேலும் ஒரே வாசல் தான் உள்ளது, வெளியெ தப்பி செல்ல வாய்ப்பே இல்லை.

குடிநீர் மற்றும் அத்தியவாசியத்திற்க்கான் தண்ணீர் தேவையை தூண்டித்திருக்கலாம்.

கண்ணீர் புகை, மயக்க வாயு உபயோகித்திருக்கலாம்.

ஜன்னல் வழியாக சுட்டர்கள் என சொல்லி உள்ளார்கள், ஒரு அடைப்பை வைத்து ஜன்னலை மூடி இருக்கலாம்.

அத்தியவாசியத்திற்க்கு தேவையானவை எல்லாவற்றையும் தூண்டித்தால் எத்தனை நாட்கள் சமாளிக்க முடியும்.

அப்படியே 5 வரும் குற்றவாளிகளாக இருக்க சாத்தியமா, ஒருவர் குற்றவாளியாக இருந்து பிணை கதையாக சிலரை பிடித்து வைத்திருக்கலாம்.

சுட்டதை விடியோ எடுத்துவைத்துள்ளனரா, (எல்லா காவல் நிலையங்களிலும் கேம் கார்ட் தந்துள்ளதாக கேள்விபட்டேன்), அட்லிஸ்ட் பொபைல் காமிராவிலாவது எடுத்துருந்திருக்கலாம்.

எல்லாவற்றையும் விட பெஸ்ட் ஐடியா ஒன்று காவல் துறைக்கு ரூமிற்க்குள் தண்ணியை உற்றி விட்டு கரண்ட் தந்திருக்கலாம் ஷாக் மட்டும் அடிக்கும் அளவில் விட்டுவிட்டு, (சிலர் கேட்கலாம் ஷீ போட்டிருந்தனரே என்று, ஜன்னல் வழியாக பயர் இஞ்ஜீன் உதவி கொண்டு தண்ணீர் பிய்த்து அடித்திருந்திக்கலாம் அல்லவா)

காவல் துறை ஆயிரம் காரணம் சொல்லலாம் எத்தனையோ கருவிகள் உண்டு, உதாரணம் விலங்குகளை பிடிக்க மயக்க மருந்து ஊசிகளை துப்பாக்கி உபயோகிப்பதை ஏன் குற்றவாளிகளுக்கும் இது போல் உபயோகிக்க கூடாது??????????????


"நேற்று அதிகாலை நடந்த சம்பவத்தை தமிழகத்தின் ஒட்டுமொத்த மனித உரிமை ஆர்வலர்களுக்கு காக்கிகளால் விடப்பட்ட சவாலாகவே பார்க்கிறேன்....
ஒரு நபரை கூட உயிரோடு பிடிக்கும் எண்ணமே இன்றி பிணத்தை மட்டும் வெளிஉலகுக்கு காட்டி இருப்பதை 'அரசபயங்கரவாதம்' என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல?? -   (நண்பர் ஸ் பெ)

வாருங்கள் ஜனநாயகம் காக்க விவாதிப்போம்..

No comments:

Post a Comment

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!