Friday, February 24, 2012

என்னுள் தேடுகிறேன் ...


உலகம்
ஒருநாள் என்னை
அடையாளம் கண்டுகொள்ளும்
நான் இயக்குனாயிருப்பேன்

உலகம்
ஒருநாள் என்னை
கொலைவெறியுடன் தேடித்திரியும்
நான் புரட்ச்சியாளனாயிருப்பேன்

உலகம்
ஒருநாள் என்னை
கொண்டாடும்
நான் முதல்வனாயிருப்பேன்

உலகம்
ஒருநாள் தூங்காமலிருக்கும்
நான் செத்துபோயிருப்பேன்.

ஆறேழுவருடங்களுக்கு முன்னால்  (20/03/2005)  நான் எனக்காக எழுதிய நம்பிக்கை வார்த்தைகளை மீண்டும் நேற்றிரவு(23/02/12) படித்துப்பார்த்தேன். இன்று இதில் எதற்கும் தகுதியில்லாத நிலையை நானே ஏற்படுத்தி கொண்டதற்காக வெட்க்கவடுவதைதவிர வேறென்ன செய்யமுடியும்

எப்போதே படித்த  அய்யா மூ. மேத்தாவின்  கவிதையொன்று இப்போது நினைவாக்கு வருகிறது...

"நம்பிக்கை நார்
மட்டும் நம் கையில்
இருந்தால் போதும்
உதிர்ந்த பூக்கள்
ஒவ்வொன்றாய் ஒட்டிக்கொள்ளும்
கழுத்து தன்னைதானே
மாலையாய் சூட்டிகொள்ளும்" 

மீண்டும் என்னுள் தொலைந்து போன நம்பிக்கையை தேடுகிறேன் நம்பிக்கையியோடு...


1 comment:

  1. பத்து முறை விழுந்தவனை பூமித்தாய் முத்தமிட்டு கேட்டாளாம்..
    நீ தானேயடா,
    ஒன்பது முறை விழுந்தும் எழுந்து நின்றவன் என்று...!!
    முயற்சி செய், வெற்றி நிச்சயம்...

    அன்புடன்,

    ஜீன்...

    ReplyDelete

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!