Monday, October 15, 2012

அம்மாவும் என் கனவும்


ஓடமரத்துல தொட்டில்கட்டி 
ஊர் கேட்க பாட்டுபாடி
என்ன ஓரங்க வச்சவளே...

ஈரதுணிய நீ வைத்துலகட்டிகிட்டு
எம்புள்ள பசிதாங்கமாட்டன்
அவன் முழிக்கதுகுள்ள
எதாவது வாங்கிட்டுவாங்க
அப்பனா அதட்டி எம்பசிபோக்கியவளே...

அஞ்சிகிலோமிட்டர் பாள்ளிகுடத்துக்கு
எங்கப்பா என்னைய தோள்ள சுமப்பரு
சாயங்காலம் வீடுவந்ததும்
எங்காத்த மார்ல சுமக்கும்...

மூணுவயசுல
சாவகெடந்த என்ன
வீடுவாசல வித்து காப்பத்திபுட்டு
வீதியில நின்னவளே...
  
எங்கப்பன் கோமணம் உடுத்தலும்
எனக்கு எப்பவுமே ராசாவேசம்தான்!!!

வெனவேயில்ல
தலயில விறவும்
இடுப்புல என்னையும் சுமந்து
கரசேத்தவளே...

மாதம் பத்து நீ சுமந்து
என்னபெத்து இன்னொடு
வருஷம் முப்பதச்சி
இன்னும் ஓட ஒழைக்கிரியே

ஒன்ன ஒக்கரவச்சி கால்வைத்து
கஞ்சி  ஊத்தமுடியலையே
இந்த பாவியால...

எம்புள்ளையும் சினிமாவுல வருவாம்ன்னு
கினவ முந்தானையில முடிச்சிவச்சிருக்கும் ஆத்தா ...
 ஒம்புள்ளையும் சினிமாவுல வரும்வர
எங்கையாவது கட்டிப்போடு ஆத்தா
உயிர எங்கையாவது கட்டிப்போடு ஆத்தா...    

4 comments:

  1. Very Nice....
    I feel your heart...Wish u a great success in your Professional career!!!!!!!!!!!!

    Vincent A

    ReplyDelete
    Replies
    1. எனக்கு பதில் எழுத வார்த்தை இல்லை..... கண்ணீர்தான் பதில்...

      Delete
  2. எனக்கு பதில் எழுத வார்த்தை இல்லை..... கண்ணீர்தான் பதில்...

    ReplyDelete

thanks

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!